பேச்சு:எரித மின்னஞ்சல்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் டிசம்பர் 4, 2013 அன்று வெளியானது. |
ஈ-மெயில் முகவரி திருட்டை தடுப்பது எப்படி?
சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிகையில் ஸ்பேம் மெயில்கள் வரத்தொடங்கும். ஒரு சிலர் இதற்கான காரணத்தை ஆய்வு செய்வார்கள். தங்களுடைய ஈ-மெயில் முகவரிகளை பயன்படுத்தும் வெப்சைட்டுகள் சிலவற்றை நிச்சயமாக கண்டறியலாம். ஆனால், அனைத்து ஸ்பாம் மெயில்களும் எங்கிருந்து வந்தன என்பதை கண்டறிவது சிரமமான காரியம்.
முதலில் உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் பயன்படுத்தும் சர்ச்-என்ஜினில் உங்களுடைய ஈ-மெயில் முகவரியை டைப் செய்து உங்களுடைய முகவரி எங்கெல்லாம் இருக்கிறது அல்லது பயன்படுத்தப்படுகிறது எனக் கண்டறியலாம்.இந்த தேடல் முடிவுகள் மூலம் எந்த எந்த தளங்கள் உங்களுடைய ஈ-மெஜில் முகவரியை அணுக முடியும் எனக் காணலாம்.இவற்றில் பெரும்பாலும் ,நீங்கள் கடிதங்கள் எழுதும் இணைய தள முகவரிகளாக இருக்கலாம் அல்லது நீங்கள் பயன்படுத்தும் சமூகத்தளங்களாக இருக்கலாம். இவற்றுக்கும் மீறி பல தளங்கள் காட்டப்பட்டால் உடனே ஒவ்வொரு தளம் குறித்தும் அவற்றுடன் உங்களுக்கான தொடர்பு குறித்தும் ஒரு கணம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
நீங்கள் அடிக்கடி இணைய தளங்கள் மூலம் பொருட்கள் வாங்குகிறீர்களா? அல்லது சமூதாய தேவை செய்திடும் அமைப்புகளின் தளங்களை பார்வையிட்டு கடிதம் எழுதுகிறீர்களா? அவற்றின் உறுப்பினரா ? ஏதேனும் நியுஸ் லெட்டர்களை படித்து அவை இலவசமாக அனுப்பப்படுகின்றது என்பதற்காக அவற்றை பெற உங்கள் முகவரியை தருகிறிர்களா? மேற்கண்ட செயல்களை நீங்கள் மேற்கொள்கையில் நிச்சயம், உங்கள் ஈ-மெயில் முகவரிகளை அவை கேட்டிருக்கும். இத்தகைய தளங்களில் சில சில மட்டுமே, உங்கள் முகவரிகளை தளங்களில் வெளியிடும். அல்லது பிற தள நிர்வாகிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அவற்றிற்கு முகவரிகளை தரும். அல்லது பாதுகாப்பற்ற முறையில் இவை உங்களை போன்ற வாடிக்கையாளர்களின் முகவரிகளை தங்கள் தளத்தில் வைத்திருக்கும். அவற்றை மற்றவர்கள் எளிதாக தேடி எடுத்து ஸ்பேம் மெயில்கள் அனுப்ப பயன்படுத்தலாம்.
உங்களுக்கு ஸ்பேம் மெயில்கள் அனுப்பும் தளங்களின் முகவரிகள் கிடைக்கையில் அவற்றுடன் உங்கள் உறவினை முறித்துக்கொள்ளும் வசதியை பயன்படுத்துங்கள். தேவையற்ற நியுஸ் லெட்டர்கள் அனுப்பும் தளங்களின் வாசகர்கள் பட்டியலில் இருந்து முகவரியை எடுக்கும் வசதியை பயன்படுத்தி நீக்கிவிடுங்கள். தளங்கள் பாதுகாப்பானது என்று தெரிந்தால் மட்டுமே உங்கள் முகவரியை தர வேண்டும். இல்லையெனில், முகவரியை தரும் பழக்கத்தை விட்டு விட வேண்டும்.
reference: வீரகேசரி பத்திரிகை
Start a discussion about எரித மின்னஞ்சல்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve எரித மின்னஞ்சல்.