பேச்சு:ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு 2009

weather change?? விக்சனரியில் இருந்து

  • காலச் சூழ்நிலை; தட்பவெப்பநிலை; வானிலை
  • கால்நடையியல். தட்பவெப்ப நிலை; பருவநிலை
  • நிலவியல். காலநிலை
  • மருத்துவம். காலநிலை; சூழல் வெப்பம்; தட்ப வெட்பநிலை; பருவநிலவரம்
  • வேளாண்மை. தட்ப வெப்ப நிலை; தட்பவெப்பநிலை

--Natkeeran 23:56, 7 டிசம்பர் 2009 (UTC)

விக்சனரியில் climateக்கு இரு பெயர்களும் கொடுக்கப்பட்டிருந்தாலும், நற்கீரன் சுட்டியுள்ளது போல த.வியில் சீராக weather என்பதற்கு வானிலை என்றும் climate என்பதற்கு தட்பவெப்பநிலை என்றும் வழங்கப்பட்டு வருவதால் தலைப்பை ஐக்கிய நாடுகள் தட்பவெப்பநிலை மாற்றம் மாநாடு 2009 என மாற்றலாம். தட்பவெப்பநிலை என்பது சற்று நீளமாக உள்ளதால் வேறு குறும் பெயர்கள் உண்டா என அறிய விரும்புகிறேன்.--மணியன் 05:10, 8 டிசம்பர் 2009 (UTC)
weather என்பது குறிகிய கால நிலைமை. climate என்பது கூடிய காலப் பகுதியைச் சுட்டுகிறது. தட்பவெட்பம் இங்கு பொருந்துகிறதா என்று பிறரும் கருத்துக் கூறினால் நன்று. --Natkeeran 02:35, 14 டிசம்பர் 2009 (UTC)
மிகவும் பயனுள்ள கட்டுரை. வானிலை ( weather) -என்பது அன்றாட காலநிலையில் ஏற்படும் மாறுபாடு. பருவநிலை ( climate) - என்பது குறைந்தது 30 ஆண்டுகளின் சராசரி வானிலை ஆகும். வானிலை தொடர்ந்து மாறுதலுக்குட்பட்டது. பருவநிலை மாறாதது. அது மாற்றம் அடைவதாலேயே உலகலாவிய பிரச்சினையாகக் கருத்தப்ப்டுகின்றது. எனவே, ”வானிலை மாற்றம்” என்பதை விட ”பருவநிலை மாற்றம்” என்பதே பொருத்தமான கலைச்சொல் ஆகும்.--சே.பார்த்தசாரதி
மிகவும் சரியான விளக்கம் தந்திருக்கிறீர்கள் ஐயா. அப்படியே கட்டுரைத் தலைப்பையும் மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 23:23, 28 ஜூன் 2010 (UTC)
Return to "ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு 2009" page.