பேச்சு:ஒருங்கிணை விருத்திச் சூழல்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

//ஒருங்கிணந்த விருத்திச் சூழல் உதவி செய்கிறது. // என்றே எழுதியுள்ளீர்கள். எனவே, ஒருங்கிணை என்பது வினை. ஒருங்கிணைந்த என்பது உரி. விருத்தி என்பதனை விட, வளர் அதிகமாகப் பயன்படுத்துகிற ஒரு சொல். எனவே, தற்பொழுதுள்ள தலைப்பை மாற்றினால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.ஒருங்கிணைந்த வளர் சூழல் என்பதெனது முன்மொழிவு.-- உழவன் +உரை.. 03:32, 28 ஆகத்து 2012 (UTC)Reply

விருத்தி என்ற சொல் development குறிக்கப் பயன்படுகிறது. பொருள் துல்லியத்தைக் குறிக்க அச் சொல் நன்று என்று படுகிறது. ஒருங்கிணைந்த விருத்திச் சூழல் என்பது நன்று என்று படுகிறது. --Natkeeran (பேச்சு) 04:46, 28 ஆகத்து 2012 (UTC)Reply
வளர் என்பது பன்பொருள் ஒரு மொழியாக இருப்பினும், பலர் growth என்பதுடனே தொடர்பு படுத்தவர் என்று இப்பொழுது புரிகிறது. விருத்தம் என்ற சொல், பழந்தமிழ் சொல் என்றும் இப்பொழுது அறிந்தேன்.இந்த ஒருங்கிணைந்த விருத்திச்சூழல் இல்லையேல், பல நிரலருக்கு வருத்தமே! ஒருங்கிணைந்த விருத்திச்சூழல் என ஓர் இடைவெளி விட்டு மாற்றட்டுமா? -- உழவன் +உரை.. 06:59, 29 ஆகத்து 2012 (UTC)Reply
இக்கட்டுரையின் தலைப்பு குறித்த விவாதம் நிறைவு பெறாமல் இருப்பது போல் தோன்றுகிறது. எனது வாக்கு 'ஒருங்கிணைந்த விருத்திச்சூழல்' என்பதற்கே. இது குறித்த முடிவினை விரைவில் எதிர்பார்த்திருக்கும் ஓர் விக்கி மாணவன். --கலைவாணன் (பேச்சு)
Return to "ஒருங்கிணை விருத்திச் சூழல்" page.