பேச்சு:ஒளியணு
ஒளிச்சொட்டு, ஒளித்துகள் முதலிய தமிழ்பதங்களும் இதற்குப் பயன்படுகின்றன. தலைப்பை தமிழ்ப்படுத்திவிட்டு போட்டோன் வழிமாற்று ஒன்று செய்ய பரிந்துரைக்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 00:00, 7 ஆகத்து 2011 (UTC)
- Photon ஈழவழக்கில் போட்டோன் (ஃபோட்டோன்), தமிழக வழக்கில் போட்டான் (ஃபோட்டான்) என இருக்க வேண்டும். போட்டன் என்பது தவறு. மேலும் சிவகுமார் சொன்ன தமிழ்ச்சொல்லும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனையே முதன்மைப்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 00:21, 7 ஆகத்து 2011 (UTC)
light photon=ஒளிச்சக்தி சொட்டு எனவே சக்திச்சொட்டு அல்லது போட்டோன் (ஃபோட்டோன்)னை தலைப்பாக பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து ..--Sank 12:42, 8 ஆகத்து 2011 (UTC) இக்கட்டுரைக்கு ஒளியணு என்று பெயரிடலாம். இது தமிழ்நாட்டுப் பாடநூல்கழக இயற்பியல் பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரியான தேர்வாகவும் உள்ளது. கருத்து தேவை. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:53, 21 ஆகத்து 2011 (UTC)
இங்கே பொதுவாக நடைமுறையில் உள்ள அல்லது அதிகமாக அறியப்படும் பெயரிலேயே தலைப்புகள் வைக்கப்படுவதால் ஒளியணு என்ற பெயரே சிறந்தது. மேலும் விக்சனரியை பார்த்துவிட்டு இங்கு வருபவருக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இத்தலைப்பே தேடுவதற்கு எளிதாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் 09:34, 28 ஆகத்து 2011 (UTC)
ஒளியணு ! அருமையான தமிழாக்கம் ! --இரவி 20:31, 13 செப்டெம்பர் 2011 (UTC)
- இணக்கத்திற்கு நன்றி தென்காசி. நன்றி இரவி. இது 12ஆம் வகுப்பு நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 17:05, 12 நவம்பர் 2011 (UTC)
- அ.கி.மூர்த்தியின், "அறிவியல் அகராதி" ஒளியன் என்கிறது. தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழம் வெளியிட்ட அறிவியல் கலைக்களஞ்சியமும் தன் 6 ஆவது தொகுதியில் ஒளியன் என்கிறது (பக். 996) (இது மொத்தம் 34 தொகுதிகள் அடங்கிய அறிவியல், வாழ்வியல் பெருங்களஞ்சியம். இதில் அறிவியல் களஞ்சியம் மட்டும் 19 தொகுதிகள், மீதி 15 வாழ்வியல் களஞ்சியம். இதுவொரு பெரும் களஞ்சியம், ஏறத்தாழ ஒவ்வொரு தொகுதியும் 800-1000 பக்கங்கள் கொண்டது - அறிவியல் ஏறத்தாழ 19,000 பகக்ங்கள், வாழ்வியல் ஒரு 14,000 பக்கங்கள்). எனவே ஒளியன் என்பது நல்ல சொல். ஒளியணு என்பதும் நல்ல சொல்லே, அணு என்றால் மிகச்சிறியது, அடிப்படைக் கட்டுமான, இறுக்கமாக உள்ள, நுண்பொருள் என்று பொருள்படும். எல்லாமே ஆற்றல் உடையதுதான். ஆற்றலைத் தாங்கியிருப்பதுதான் என்றாலும், ஒளியன் ஓர் எடையில்லா, ஆனால் தனிப் பருப்பொருளாகக் காணும் பொழுது ஆற்றலின் திரட்சி அடைந்து கிடக்கும் ஒரு நுண்பொருள் என்னும் பொருளில் ஒளியணு என்பதும் பொருந்தும். எனினும் ஒளியன் என்பதையே ஆளலாம் என்பது என் கருத்து. ஒளியணு என்பதையும் கூடுதலாக ஓரிரு இடத்தில் சுட்டுவதில் மறுப்பில்லை. --செல்வா 13:11, 2 பெப்ரவரி 2012 (UTC)