பேச்சு:ஓங்கில்
பாட்டில் மூக்கு டால்பின் - இதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?--Sivakumar \பேச்சு 12:46, 16 ஏப்ரல் 2007 (UTC)
ஓங்கில்
தொகுதமிழில் ஓங்கில் என்றழைக்கப்படும் மீன் டால்பின் தானா?--சிவகுமார் \பேச்சு 11:58, 21 மார்ச் 2008 (UTC)
- ஆம், அப்படித்தான் பி.எல். சாமி தன் "சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்" என்னும் நூலில் எழுதியுள்ளார். புத்தக்கம் தற்பொழுது என்னிடம் இல்லாததால், பக்கத்தைக் குறிப்பிட முடியவில்லை.--செல்வா 15:01, 25 மார்ச் 2008 (UTC)
- பி. எல். சாமியின் "சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்" நூல் Tamil Digital Library இல் open access இல் கிடைக்கிறது. அதற்கான சுட்டி: https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU2kZpy 2405:201:E003:CC82:CD7F:F1CE:60B:88D6 20:10, 10 சூன் 2023 (UTC)
- River dolphin என்பதற்கு ஆற்று ஓங்கில் என ச. முகமது அலி அவர்களும் மலைகள் சார்ந்த கானகங்கள் என்ற கட்டுரையில் (கீற்று இதழில் வெளியாகியுள்ளது) குறிப்பிட்டுள்ளார்.--சிவக்குமார் \பேச்சு 10:39, 9 டிசம்பர் 2008 (UTC)
"டால்பினின் தமிழ்ப்பெயர் ஓங்கில் என்பதையும் டுகாங் என்று குறிப்பிடப்படும் மற்றொரு கடல்வாழ் பாலூட்டியின் தமிழ்ப்பெயர் ஆவுளியா என்பதையும் சென்ற ஆண்டு இராமேஸ்வரம் சென்ற போது சில பரதவர்களுடன் பேசித் தெரிந்து கொண்டேன்." -பக் 102, தியடோர் பாஸ்கரன், இன்னும் பிறக்காத தலைமுறைக்காக, உயிர்மை பதிப்பகம், முதற்பதிப்பு திசம்பர் 2006.
--சிவக்குமார் \பேச்சு 15:48, 5 ஜனவரி 2009 (UTC)
தலைப்பு மாற்றம்
தொகுதலைப்பை ஓங்கில் என மாற்றி, பின் டால்பின், டால்ஃபின் போன்றவற்றுக்கு வழிமாற்று தருவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். --செல்வா 14:50, 6 ஜனவரி 2009 (UTC)
- ஆம், ஓங்கில் எனுஞ்சொல் பெருவழக்குடையதும்கூட, குறிப்பாக மீனவர்களிடையே. -- சுந்தர் \பேச்சு 15:12, 6 ஜனவரி 2009 (UTC)
- செல்வா, சுந்தர் - கட்டுரையை நகர்த்தி விட்டேன்.--சிவக்குமார் \பேச்சு 16:10, 6 ஜனவரி 2009 (UTC)
- நன்றி, சிவா. --செல்வா 16:20, 6 ஜனவரி 2009 (UTC)
- செல்வா, சுந்தர் - கட்டுரையை நகர்த்தி விட்டேன்.--சிவக்குமார் \பேச்சு 16:10, 6 ஜனவரி 2009 (UTC)
"-அனையி" என்னும் பின்னொட்டு
தொகு"தற்கால" இலத்தீன் (modern Latin) சொல்லாகிய cetus என்பது திமிங்கிலம் என்று பொருள் படும். ஆங்கிலத்தில் cetacea என்பது "திமிங்கிலம் போன்ற" அல்லது "திமிங்கிலம் அனைய" என்னும் பொருள் உடையது. இதன் அடிப்படையில் உயிரினங்களின் பெயர்களில் -acea என முடியும் சொற்களுக்கு "-அனையி" என்னும் பின்னொட்டு சேர்ப்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். இதே போல -dae என்று முடியும் சொற்களுக்கு வகையி என்று கூறலாம் என்று நினைக்கிறேன். எனவே இங்கே cetacea என்பதற்கு திமிங்கிலமனையி (= திமிங்கிலம் + அனை+இ) என்று எழுதியிருக்கின்றேன். --செல்வா 14:50, 6 ஜனவரி 2009 (UTC)
கடற்பன்றி
தொகுஓங்கில் கடற்பன்றி அன்று. கடற்பன்றியைப் போன்றது. இரண்டிற்கும் வாயின் வடிவத்தை வைத்து வகைப்பாட்டியல்படி வேறுபடுத்துவர். எனவே தான் ஒவாய் என்று, டால்ஃபினை அழைக்கின்றனர். எனவே, ஒவாய் கடற்பன்றி என்பதே பொருத்தமானதும், சரியானப் பெயரும் ஆகும்.≈17:49, 4 ஆகத்து 2011 (UTC)த♥உழவன்+உரை..