பேச்சு:ஓடப்பாட்டு

நல்லதொரு கட்டுரையைத் தொடங்கியதற்கு நன்றி, தகவலுழவன். இது நாடோடிப் பாட்டா, நாட்டுப்புறப் பாட்டா? -- சுந்தர் \பேச்சு 15:24, 9 சூலை 2013 (UTC)Reply

  • இதுபற்றி அவ்வளவாக நான் இன்னும் படிக்கவில்லை. தமிழர் கடற்பயண ஆழறிவு பற்றி நம்மில் பலருக்கு மறந்து விட்டது என்பதே உண்மை. அவ்வறிவைப் பற்றி, கேட்டதை வைத்துப் பார்க்கும்போது, இது நாடோடிப் பாடல் வகையாகவே நான் உணருகிறேன். மேலும், இலக்கண வரைமுறைகள் இல்லாமல், மக்கள் உள்ளத்தில் இயல்பாக தோன்றும் நாட்டுப்புற இலக்கியங்களுள் தானே, இந்த நாடோடிப்பாடல்களை வகைப்படுத்தப்படவேண்டும்?.--≈ உழவன் ( கூறுக ) 17:08, 9 சூலை 2013 (UTC)Reply
நாடோடிப்பாட்டு நாட்டுப்புறப் பாட்டின் உள்வகையாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். மற்றபடி என்னுடைய கேள்வி ஓடக்காரர்கள் நாடோடிகளாக வாழ்ந்தார்களா ஒரே ஊரில் வாழ்ந்தார்களா என்பதே. கடற்பயணிகள் எனில் நாடோடிகளாக இருந்திருக்க வேண்டும். நான் ஆற்றில் ஓடத்தை இயக்குபவர்கள் என நினைத்திருந்தேன். -- சுந்தர் \பேச்சு 02:30, 10 சூலை 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஓடப்பாட்டு&oldid=1454239" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஓடப்பாட்டு" page.