பேச்சு:ஓமர்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran
பல நூல்களில் இது கோமர் என்றே குறிப்பிடப்படுகிறது. --Natkeeran 05:09, 30 செப்டெம்பர் 2008 (UTC)
- இவருடைய பெயரைத் தமிழில் ஓமர் என்று வழங்குவது சரியாக இருக்கும். இத்தாலியர்கள் Omero என்றுதான் வழங்குகின்றனர். நாம் ஓமர் என்று எழுதுவதால் தவறொன்றும் இல்லை. தமிழ்வழிப்படி எழுதுதலே சிறந்தது. பேச்சு:ஹேரோடோட்டஸ் என்னும் பக்கத்தைப் பார்க்கவும். இத்தாலியர்கள் மட்டுமின்றி, பெருவழக்காக இருக்கும் பிரான்சு மக்களின் மொழியும், எசுப்பானியர் மொழியிலும் H ஒலிப்பு இல்லை (H என்று எழுதினாலும், ஒலிப்பற்றது). எனவே ஓமர் என்று இருப்பதால் தவறில்லை.--செல்வா 05:10, 11 ஜனவரி 2009 (UTC)
- ho எனபதை தமிழாக்கும் பொழுது அது கோ எனபதை விட ஓ என்பதற்கு நெருக்கமாக இருக்கின்றது என்று கூறுகிறீர்களா? --Natkeeran 22:16, 12 ஜனவரி 2009 (UTC)
ஹ சொல்லின் இடையில் வரும் போது மட்டுமே க ஆகும். எடுத்துக்காட்டுக்கு, மஹாத்மா - > மகாத்மா, மோஹன் - மோகன். சொல்லின் முதலில் ஹகரத்தோடு ஒட்டி வரும் உயிர் ஒலியை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஹோட்டல் -> ஓட்டல், ஹல்வா - > அல்வா, ஹிந்து - > இந்து--ரவி 05:04, 13 ஜனவரி 2009 (UTC)
- இடையே வரும் பொழுதும் Magaathmaa, Mogan என்றுதான் வரும், ஆனால் அந்த மெலிந்த ககரத்தில் மிகச்சிறிதளவு காற்றொலி வரும் (பேச்சு வழக்கில்), ஆனால் அது ஹ ஆகாது. காகம், பாகம் என்னும் சொற்களை kaagam, paagam என்றுதான் ஒலித்தல் வேண்டும். உற்று நோக்கினால் மிகச்சிறிதளவு காற்றொலி வருவதைக் காணலாம். kaaham, paaham என்று முழு காற்றொலியாகக் கூறுவது கொச்சை ஒலிப்பு. --செல்வா 05:53, 13 ஜனவரி 2009 (UTC)