பேச்சு:ஓயாத அலைகள் மூன்று

இப்பகுதியில் உள்ளக இணைப்புக்களை யாராவது சரிபார்க்கவும். "சிறிலங்கா" என்பதற்குரிய கட்டுரை காணப்படவில்லை. ஏற்கனவே இருக்கும் கட்டுரைத் தலைப்பு எப்படிப் பலுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. சரிபார்த்து, சரியான உள்ளக இணைப்பைக் கொடுக்கவும்.


இலங்கை எதிர் சிறிலங்கா

தொகு

சிறிலங்கா என்பதற்கு பதில் இலங்கை என்பதே தமிழில் வழக்கம். அவ்வாறு திருத்துவது நன்று.--Natkeeran 03:38, 19 டிசம்பர் 2006 (UTC)

நன்றி. வன்னி என்ற தலைப்பில் எந்தக் கட்டுரையுமில்லையா? அல்லது வேறு தலைப்பில் எழுதப்பட்டுள்ளதா? அதையும் கவனிக்கவும்.--வசந்தன் 03:57, 19 டிசம்பர் 2006 (UTC)


தலைப்பு மாற்றம் தொடர்பானது

தொகு

முதலிருந்த தலைப்பிலிருந்து 'கட்டம் ஒன்று, இரண்டு' என்ற சொற்றொகுதி நீக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள கட்டுரை, தலைப்பை நிறைவு செய்யவில்லை. காரணம், இந்நடவடிக்கை பல கட்டங்களை உள்ளடக்கியது; 1999, 2000 ஆகிய இரு ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்றது. எனவே காலக்கோட்டில் 1999 ஆம் ஆண்டுக்குரிய நிகழ்வாக இருக்கும் வண்ணம் தனியே இரு கட்டங்கள் மட்டும் கட்டுரையாக்கப்பட்டன. (காலக்கோட்டில் இணைக்க வேண்டுமென்பதை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்ததால் இப்பிரச்சினை)

இதில் சக பயனர்களின் ஆலோசனையை அறிய ஆவலாயிருக்கிறேன். ஓயாத அலைகள் மூன்று என்ற தலைப்பில் பெருங்கட்டுரையை எழுதுவதும், அதைக் காலக்கோட்டில் இரு ஆண்டுக்கணக்கிலும் தொடுத்துவிடுவதும் நன்று என தற்போது நினைக்கிறேன். --வசந்தன் 11:25, 20 டிசம்பர் 2006 (UTC)


வசந்தன், நீங்கள் இன்னும் எழுதப்போவது தெரியாமல் மாற்றி விட்டேன். ஓயாத அலைகள் மூன்று, 1999, ஓயாத அலைகள் மூன்று, 2000 என இரு கட்டுரைகளாக எழுதலாம் என்பது எனது அபிப்பிராயம்.--Kanags 11:49, 20 டிசம்பர் 2006 (UTC)
Return to "ஓயாத அலைகள் மூன்று" page.