கனடா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


Country stub தொகு

why is the original article reduced to a one-liner ?

I asked the original contributor not to sign the article and also added a {{cleanup}} tag. On that, the person deleted all content to which Srinivasan has added this onliner stub. -- Sundar \பேச்சு 11:36, 16 ஜூலை 2005 (UTC)
I have reverted to the previous edit which i guess u might be interested in seeing / editing. Thanks for bringing this to notice--ரவி (பேச்சு) 11:40, 16 ஜூலை 2005 (UTC)

நாடுகளுக்கான வார்ப்புரு தொகு

நற்கீரன், நாடுகளுக்கான தகவல் கட்டத்திற்கான தமிழ் வார்ப்புரு, template:தகவல்கட்டம் நாடு ஒன்று உள்ளது. அதை பயன்படுத்துவது உங்கள் பணியை எளிதாக்கலாம். அதன் பயன்பாட்டு மாதிரியை அறிய ஐக்கிய இராச்சியம் கட்டுரையை பாருங்கள்--ரவி (பேச்சு) 09:46, 17 ஆகஸ்ட் 2005 (UTC)

Commercial Link Added ! தொகு

  • Canada - கனடா சிறப்புப் பக்கங்கள் Is this a commercial
I couldnt judge whether this is commercial but I feel this doesnt need to be linked in external links section. There are n number of such directory sites for any topic which really are not informative but just like a directory or search engine--ரவி 15:17, 1 ஜூன் 2006 (UTC)

கனடாவின் Provinces மாநிலங்கள் என்று அழைப்பது இல்லை. தொகு

கனடாவின் Provinces மாநிலங்கள் என்று அழைப்பது இல்லை. இங்கு வெளியிடப்படும் பெரும்பாலான பதிப்புக்களிலும் மாகணங்கள் என்றே குறிக்கப்படுகின்றன. எழில் நிலா கட்டுரையை பார்க்கவும். நல்ல தமிழ் சொற்களை பயன்படுத்த வேண்டும், அதற்காக அனைத்த பொது வழக்கில் உள்ள சமஸ்கிரத சொற்களையும் (?) மாற்றுவதில் பொது உடன்பாடு இல்லை. --Natkeeran 23:38, 4 ஜூன் 2006 (UTC)


மாகாணம் / ஜில்லா என்பது District என்பதின் இணையான சொல். இன்று தமிழ் நாட்டில் இதனை மாவட்டம் என்று அழைக்கின்றனர். Province, State என்பதற்கு மாநிலம் என்ற சொல்தான் பொருத்தமான தரமான சொல். அறிந்தோர் பலரை உசாவி (கேட்டுணர்ந்து) முடிவு செய்யுங்கள். தாலுக்கா என்பது இன்று வட்டம் என்று வழங்கி வருகின்றது. ஊர், பேரூர், வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு என்பது இன்றைய பாகுபாடு. --C.R.Selvakumar 23:59, 4 ஜூன் 2006 (UTC)செல்வா


கருத்துக்களுக்கு நன்றி. ஒரே பெயர் வெவ்வேறு வகையன உட்பிரிவுகளை வெவ்வேறு நாடுகளில் பிரதி செய்கின்றன. கனடாவை பொறுத்த மட்டில் (கனடாவில்) எனது வாசிப்பில், வானொலியில் மாகாணம் என்ற சொல்லே பெரிது பயன்படுவதாக அறிகின்றேன். எனினும் மேலும் உசாவிப் பார்க்க முனைகிறேன். --Natkeeran 00:09, 5 ஜூன் 2006 (UTC)

குறிப்புகள் தொகு

  • கனடா கனடா என்று மீண்டும் மீண்டும் குறிக்கப்படுதல் தவிர்க்கப்படவேண்டும்.
  • தகவல்கள் தொடர்பான ஆதாரங்கள் தொகுக்கப்படவேண்டும்.
  • எழுத்து சொற்தொடர் பிழைகள் இருப்பதை அறிவேன்.

--Natkeeran 03:34, 8 ஜூன் 2006 (UTC)

வரலாறு
- முதற்குடிமக்கள்
- ஐரோப்பியர் வருகை, காலனித்துவம்
- கனடா Confederation
- பல்நாட்டவர் வருகை

புவியியல்
- இட அமைவு
- இயற்கையமைப்பு
- கால நிலை

பொருளாதாரம்
- இயற்கை வளங்கள்
- விவசாயம்
- ஏற்றுமதி, இறக்குமதி
- சேவை sector
- infrastrcture
- அறிவியலும் தொழில் நுட்பமும்

சமூகம்
- மக்கள் பரம்பல்
- சமூக கட்டமைப்பு
- இனப் பாகுபாடு
- சமயங்கள்
- மொழிகள்

கனேடிய அரசு
* அரசியல் அமைப்பு
* அரசியல் கட்சிகள்
* சட்டம்
* வெளியுறவுக் கொள்கை
* பாதுகாப்பு கட்டமைப்பு

வாழ்வியல்
- கல்வி
- சுகாதாரம்
- விளையாட்டு

பண்பாடு

அரசியல், சமூக, பொருளாதார, சுழலியல் பிரச்சினைகள்
- கியூபெக் பிரிவினை
- முதற் குடிமக்கள் ஏழ்மை, உரிமைகள், 
- சுகாதார சேவைகள் தனியார்மயப்படுத்தல்
- சூழல் மாசுறல்
  • Also, information about Media need to be added.

--Natkeeran 23:31, 2 ஜூலை 2006 (UTC)

மகிழ்ச்சி தொகு

கட்டுரை நன்றாக வளர்ந்து வருகிறது. மகிழ்ச்சி. இன்னும் செம்மைப்படுத்தினால் சிறப்புக் கட்டுரை ஆக்கி விடலாம்--ரவி 07:43, 3 ஜூலை 2006 (UTC)

ஆமாம் ரவி. இன்னும் நிறைய வேலை இருக்கின்றது. --Natkeeran 00:24, 12 ஜூலை 2006 (UTC)

சுட்டிகள் தொகு

குறிப்புகள் தொகு

Foreign relations and military பற்றிய தகவ்ல்களும் சேர்க்கப்பட வேண்டும்.

கனேடிய அரசு

  • அரசியல் அமைப்பு
  • அரசியல் கட்சிகள்
  • சட்டம்
  • வெளியுறவுக் கொள்கை
  • பாதுகாப்பு கட்டமைப்பு

--Natkeeran 01:27, 1 அக்டோபர் 2006 (UTC)Reply

வெளியுறவுக் கொள்கைகள் தொகு

முதன்மைக் கட்டுரை: கனடாவின் வெளியுறவுக் கொள்கைகள்

கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் அதன் அண்டை நாடான அமெரிக்காவுடனான உறவே அதிமுக்கியத்துவம் பெறுகின்றது. கனடாவும் அமெரிக்காவும் உலகின் நீண்ட மதில்கள் அற்ற எல்லையை கொண்டுள்ளன. இரண்டு நாடுகளும் அவற்றவறின் பெரிய வணிக உறவு நாடுகளாக இருக்கின்றன. மேலும், வடஅமெரிக்க திறந்த வணிக வலய ஒப்பந்தம்ஊடாக கனடா அமெரிக்கா மெச்சிக்கோ ஆகிய நாடுகளுடன் ஒரு இறுக்கமான நட்பான தொடர்பை பேணி வருகின்றது.


கனடா தென் அமெரிகாவுடன் மேலும் வலுவான உறவை விரும்புகின்றது. அமெரிக்கா கொள்கைகளி இருந்து விலகி கியுபாவுடன் கனடா நட்புறவு வைத்திருக்கின்றது. மேலும், கனடா joined the Organization of American States (OAS) in 1990 and hosted the OAS General Assembly in Windsor in June 2000, and the third Summit of the Americas in Quebec City in April 2001.


கனடாவுக்கும் பிரட்டன் பிரான்ஸ் நாடுகளுக்குமிடையான வரலாற்று பிணைப்பு இன்றும் வலுவாக நீடித்து வருகின்றது. கனடா Commonwealth of Nations and La Francophonie உறுப்பு நாடாகம். மேலும், கனடாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையான தொடர்பு NATO, G8 ஊடாக வலுவானது.


கனடாவுவின் மேற்கு எல்லை பசுபிக் பெருங்கடல் ஆகும். அதனால் கனேடிய பசுபிக் நாடுகளுடான தொடர்பும் நீண்ட வரலாற்றைக் கொண்டது. கனடா Asia-Pacific Economic Cooperation ஒரு உறுப்பு நாடாகும். கனடாவுக்கும் சீனாவுமிடையான வணிகமும் அதிகரித்து வருகின்றது.


இன்று, கனடாவின் பல்நாட்டு குடிவரவாளர்களின் உதவியுடன் தெற்கு ஆசியா, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா, ஆபிரிக்கா நாடுகளுடான தொடர்பை மேம்படுத்த முனைகின்றது. சுனாமிக்கு உதவிய நாடுகளிலும், ஆபிர்க்காவுக்கும் உதவும் நாடுகளிலும் கனடா முன்னிற்ப்பது குறிப்பிடத்தக்கது.

This section need to discuss specific Policies more (ex: multilatrism, immigration, UN, Peace keeping, AID).

நிர்வாகம் தொகு

கட்டுரை ஆக்கத்தின் இன்றைய நிலை தொகு

  • உட்பிரிவுகள் சீரமைக்கப்படுவேண்டும்
  • மேற்கோள்கள் சேர்க்கப்படவேண்டும்
  • மெய்பார்க்கப்பட வேண்டும்
  • மேலும் கல்வி, விளையாட்டு போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும்.
  • சில உட்பிரிவுகள் விரிவாக்கப்பட்டும், சில சுருக்கப்படவும் வேண்டும்.

--Natkeeran 00:30, 4 நவம்பர் 2006 (UTC)Reply

கனடா, கனேடிய, கனடாவின் தொகு

அடிக்கடி தொந்தரவோ தெரியவில்லை. நீங்கள் இங்கு வசிப்பவர் என்ற படியால் உங்கள் கருத்து இங்கு பொருந்தும் என்று நினைக்கின்றேன்.

  • கனடாவின் வரலாறு எதிர் கனேடிய வரலாறு?
  • கனடாவின் பொருளாதாரம் எதிர் கனேடியப் பொருளாதாரம்?
  • கனடா அரசியல் எதிர் கனேடிய அரசியல் எதிர் கனடாவில் அரசியல்?
  • கனடாவின் பண்பாடு எதிர் கனேடியப் பண்பாடு?

... பல இடங்களில் கனேடிய என்றே இங்கு பலரும் கதையாடுகின்றார்கள். பகுப்புக்களிலும் கட்டுரைகளில் ஒரு சீரான தலைப்பிடுதல் முறை இருந்தால் நன்று என்று படுகின்றது. --Natkeeran 02:01, 4 நவம்பர் 2006 (UTC)Reply

நற்கீரன், கனடா வரலாறு அல்லது கனடாவின் வரலாறு என்பவை சரியானவை. கனேடிய வரலாறு என்பது கனடாவினர் வரலாறு என்பதற்கான ஆங்கில மொழிக்கலப்பான சொல். எகிப்து என்பது நாடு. எகிப்தியர் என்பது அந்நாட்டு மக்களைக்குறிக்கும். கனடா எனப்து நாடு, கனடாவினர் என்பது அந்நாட்டு மக்களைக் குறிக்கப் பயன் படும் ஒரு சொல் (ஒப்பு நோக்குக: ஒரிசா மாநிலத்தவரை ஒரிசாவினர் என்போம். ஒட்ட நாடு எனில் ஒட்டர் என்கிறோம். அகர நெடிலில் ஒரு நாட்டின் பெயர் முடிவில் இருந்தால் -ஆவினர் என குறித்தல் எளிது. என்றாலும், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்தவரை அமெரிக்கர் என்று சுருக்குகிறோம். ஆப்பிரிக்காக் கண்டத்தைச் சேர்ந்தவரை ஆப்பிரிக்கர் என்கிறோம். அதேபோல, கனடா நாட்டினரை ((கனடர்??) கனடியர் என்று சுருக்குவது சற்று திரிபு என்றாலும் சரியானதாகவே தெரிகின்றது (கனேடியர் என்பது ஆங்கில வழக்கைப் பின்பற்றி மொழிவதாகும்). எனவே கனடியர் வரலாறு எனில் கனடா நாட்டு மக்களின் வரலாறு என்று பொருள் படும். கனடிய வரலாறு எனில் கனடா நாட்டின் வரலாறு எனப் பொருள் படும் இங்கும் அந்நாட்டின் மக்களின் வரலாறு என்பதைக் குறிப்பாக உணர்த்தும். எனவே கனடாவின் பொருளாதாரம், கனடியப் பொருளாதாரம் என்பன சரி. கனடாவின் அரசியல், கனடிய அரசியல் என்பன சரி. கனடாவின் பண்பாடு, கனடிய பண்பாடு என்பன சரி. சரி என்று கூறுவதெல்லாம் நான் சரி என்று எண்ணுகிறேன் என்று பொருள் கொள்ளுங்கள். கனடிய என்னும் சொல்லாட்சி சரியா என்பதை தமிழ் நன்றாக அறிந்த தமிழாசிரியரைக் கேட்டு உறுதி செய்ய வேண்டும். கனடர் என்பது சரியானது போலவே தெரிந்தாலும் (கேரளா -> கேரளர்), சரியா என உறுதியாகத் தெரியவில்லை. --செல்வா 13:40, 5 நவம்பர் 2006 (UTC)Reply

நுழைவாயில் தொகு

கனடா பற்றிய கட்டுரை அருமையாக இருக்கின்றது.கனடா தொடர்பில் நுழைவாயில் அமைத்தால் என்ன?--கலாநிதி 16:37, 12 நவம்பர் 2006 (UTC)

கட்டுரை ஆக்கத்தின் இன்றைய நிலை தொகு

  • துல்லிய தகவல்கள் சேர்க்கப்பட வேண்டும்.
  • கட்டுரை சற்று நீண்டு செல்கின்றது, தகுந்த இடங்களில் சுருக்கப்படவேண்டும்.
  • உட்பிரிவுகள் சீரமைக்கப்படுவேண்டும்
  • மேற்கோள்கள் சேர்க்கப்படவேண்டும்
  • மெய்பார்க்கப்பட வேண்டும்
  • கல்வி, பண்பாடு (இசை, நாடகம்) போன்றவை சேர்க்கப்பட வேண்டும்.

--Natkeeran 18:04, 16 நவம்பர் 2006 (UTC)Reply

இயற்கையமைப்பு தொகு

கனடாவில் வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு தாவர வகைகள் வளருகின்றன. மேற்கு பகுதி மலையும் மலை சார்ந்த ஒரு பிரதேசம் ஆகும். இங்கு மழைக்காடுக்கு ஏற்ற காலநிலையும் மலைக்காடுகளும் காணப்படுகின்றன. பிரெய்ரி தாழ்நிலப்பகுதியில் புல் வெளிகள் உண்டு. அதற்கு மேலே ஊசியிலைக் காட்டுத்தாவரங்களும், அதற்கு மேலே மிக குளிர் பிரதேசத்தில் தண்டிரா (low grasses, shurbs, mosses, lichens)வும் காணப்படுகின்றன. தென் ஒன்ராறியோவிலும் மற்றும் கிழக்கு பகுதிகளிலும் தூந்திரத் தாவரங்கள் (deciduous trees) உண்டு.

எப்படி மேற்கோள்களைக் குறிப்பது? தொகு

முறை 1

<ref> Ref1 </ref> 
மேற்கோள்கள்
<references />

முறை 2

{{ref|caeconomy}}
# {{note|label1}}

எந்த முறை சிறந்தது? --Natkeeran 19:21, 18 நவம்பர் 2006 (UTC)Reply

கட்டுரை மறுவடிவமைப்பு தொகு

நற்கீரன், தற்போதைய கட்டுரை ஏற்கனவே 79 கிலோபைட் இருக்கிறது. மேலும் சேர்க்கப்படும் உள்ளடக்கங்களை தனிக்கட்டுரைகளுக்கு நகர்த்தலாம். ஏற்கனவே இருக்கும் ஏகப்பட்ட துணைத்தலைப்புகளை தவிர்க்கலாம். எடுத்துக்காட்டுக்கு, இருக்கும் 18 துணைத்தலைப்புகளை 12க்குள் கொண்டு வரலாம். துணை துணைத்தலைப்புகளை அதிகமாகப் பயன்படுத்துதலை தவிர்க்கலாம். எடுத்துக்காட்டுக்கு, பொருளாதாரத்தின் கீழ் 8 துணைத்தலைப்புகள் இருக்கின்றன. இவற்றை ஒன்று அல்லது இரண்டு பந்தி அளவில் குறிப்பு தந்து உள்ளடக்கங்களை கனடாவின் பொருளாதாரம் என்று தனிக்கட்டுரைக்கு நகர்த்தலாம். தற்போது table of content மட்டுமே ஒரு திரை அளவு இருப்பதை தவிர்க்க வேண்டும். அதிகப்பட்டியான தகவல்களை ஒரே பக்கத்தில் குவிப்பது படிப்பதற்கான சுவாரசியத்தை குறைக்கலாம். இன்னும் பாதி கட்டுரை உரை திருத்தப்படவேண்டியுள்ளது. உதவுகிறேன். நிச்சயம் சிறப்புக் கட்டுரையாக்கப்பட வேண்டிய ஒன்று. ஆதாரம் காட்டும் முறை குறித்து உங்கள் கேள்விக்கு கொஞ்சம் தேடிப்பார்த்து விட்டு சொல்கிறேன்.--Ravidreams 11:04, 19 நவம்பர் 2006 (UTC)Reply

ரவி, நான் எதிர்பார்த்ததைவிட சற்று நீண்டு விட்டது. மேலும் இது ஒரு அறிமுகக் கட்டுரை. ஆனால் நாடுகள் தொடர்பான கட்டுரைகள் நீண்டு இருப்பது இயல்புதான். USA, Japan, Canada போன்ற கட்டுரைகளின் ஆங்கிலப் பதிப்புகளை பார்க்கவும். நாடுகள் தொடர்பான ஒரு Prototype கட்டுரை எழுதும் முயற்சிதான். ஏற்கனவே உள்ள இலங்கை, ஐக்கிய இராச்சியம் கட்டுரைகளைப் பின்பற்றி, ஆனால் அவற்றில் விடப்பட்ட சில அம்சங்களையும் சேர்த்து. இன்னும் மேற்கோள்கள் தரவேண்டும், மெய்ப்பார்க்க வேண்டும். நன்றி. --Natkeeran 02:32, 24 நவம்பர் 2006 (UTC)Reply

கட்டுரை ஆக்கத்தின் இன்றைய நிலை தொகு

  • கட்டுரை தற்போது பகுதி பகுதியாக மெய்ப்பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
  • மேற்கோள்களும் தகுந்தவாறு சேர்க்கப்படுகின்றன.
  • சில பகுதிகள் மேலே சுட்டியவாறு சுருக்கப்பட வேண்டும்.

--Natkeeran 03:48, 2 டிசம்பர் 2006 (UTC)

நற்கீரன், செல்வா கவனிக்க - தமிழாக்குவது எப்படி? தொகு

  • கடலுக்குக் கடல் என்ற motto வாசகம் ஆர்வமூட்டுவதாக உள்ளது. இதன் பின்னணியை தனிக்கட்டுரையாகத் தர முடியுமா?
  • Chinese exclusion act - சீனர் தவிர்ப்புச் சட்டம் என்று தமிழாக்கலாமா?
  • notwithstanding clause, senate, central parliament, நியமனம், ரீதி, பிரயோகம் (exercise?)(வெளிக்காட்டல், பயன்பாடு?)- தமிழாக்குவது எப்படி?--Ravidreams 14:06, 3 மார்ச் 2007 (UTC)

ரவி, இப்பொழுதுதான் இக்கேள்விகளைப் பார்க்கின்றேன். கடலுக்குக் கடல் முழக்கம் பற்றி தனிக்கட்டுரையாக எழுத எவ்வளவு உள்ளது என்று தெரியவில்லை. கட்டாயம் ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கும் (கனடாவின் கொடி உருவாகியதும் சுவையான ஒன்றே).

  • சீனர் விலக்கல் சட்டம் எனலாம்
  • எங்கே, "notwithstanding clause, senate, central parliament" வருகின்றது என்று பார்த்து பரிந்துரை தருகின்றேன். கனடிய (அல். கனேடிய) சூழலில் notwithstanding clause என்பது மிகவும் அரசியல்-வரலாற்றுவியல் தாக்கம் பெற்ற சொற்றொடர். அதனை சரியாக மொழி பெயர்த்தல் வேண்டும்.

senate என்பது மேலவை, central parliament" என்பது நாடாளுமன்றம் (தவறுதலாகப் பலரும் பாராளுமன்றம் என்பர்.) exercise என்பது (ஆனணையை, அறமன்ற முடிவை, தன் அதிகாரத்தை) செயல்படுத்துதல்.--செல்வா 19:36, 28 மார்ச் 2007 (UTC)

மெய்ப்பார்த்தலுக்கு ரவிக்கு நன்றி தொகு

விரைவில் மிகுதி ஆதாரங்களையும் சேர்த்து விடுகின்றேன். --Natkeeran 18:16, 28 மார்ச் 2007 (UTC)

நல்ல கட்டுரைகளில் ஒன்று தொகு

நற்கீரன், உங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள். இது நல்ல, நெடிய கட்டுரைகளில் ஒன்று. இன்னும் சில திருத்தங்கள் செய்தால், கட்டாயம் சிறப்பு கட்டுரைகளில் ஒன்றாக இருக்கும். மிகக் கடுமையாக உழைத்திருக்கிறீர்கள்!!--செல்வா 22:12, 2 ஏப்ரல் 2007 (UTC)

நன்றி செல்வா. --Natkeeran 21:46, 3 ஏப்ரல் 2007 (UTC)

கனடா, கானடா இரண்டுமே ஏற்கத் தக்க வடிவங்களே தொகு

வட அமெரிக்க நாடாகிய Canada-வை பிரஞ்சு மொழியினர் "கனடா" எனவும் ஆங்கில மொழியினர் "கானடா" ("கேனடா") என்றும் ஒலிப்பர். எனவே தற்போது கனடா என்னும் தலைப்பில் இருக்கும் கட்டுரைக்கு மாற்றுவழியாக "கானடா (நாடு)" என்று கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். "கானடா" என்றொரு இராகமும் இருப்பதால் அதற்கு "கானடா (இராகம்)" என்று சொல்லலாம். --பவுல்-Paul (பேச்சு) 04:44, 16 திசம்பர் 2012 (UTC)Reply

வழிமாற்று தந்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:06, 16 திசம்பர் 2012 (UTC)Reply

வட அமெரிக்காவின் தெற்குப்பகுதி தொகு

புவியியல் பகுதியில் கனடா வட அமெரிக்காவின் தென்பகுதியில் 41% உள்ளதாக கட்டுரையில் உள்ளது. இது வடபகுதி என்றல்லவா இருக்க வேண்டும்?--சிவக்குமார் \பேச்சு 17:36, 21 சூலை 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கனடா&oldid=1462856" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கனடா" page.