பேச்சு:கற்பு

கற்பு குறித்த விவாதம் ஓரு வருடங்களாக மிகக் கடுமையாக இருக்கு. அதில் தமிழ்த் தேசிய இயக்கங்களும் பெரியார் இயக்கங்களும் முரண்படக் கூடிய சூழல் இருக்கிறது. இதை எப்படி அணுகுவது?

நம்முடைய மரபில் ஒரு பெண் ஒரு ஆணைத்தான் கல்யாணம் பண்ணனும்னு கிடையாது. ஒரு ஆண், ஒரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும்னு விதி இல்லை. கிராமங்களில் அறுத்துக் கட்டுதல் என்று சொல்லுகிற பழக்கம் உண்டு. நீ ஒருவனோடு வாழ்கிறபொழுது, நீ ஒருத்தியோடு வாழ்கிறபொழுது அவனுக்கு அல்லது அவளுக்கு நேர்மையாக இருக்க வேண்டும். இதுதான் பிரச்சனையே தவிர வேறான்றும் இல்ல. ஒரு ஆளுக்கு இரண்டு கல்யாணம், மூன்று கல்யாணம் நடக்குது. முதல் தாரத்துக்கு இரண்டு பிள்ளைகள் நடுத்தாரத்துக்கு மூன்று பிள்ளைகள் இதெல்லாம் கிராமங்களில் இருக்கின்றது. கிராமத்தில் பெண்கள் மறுமணம் பண்ணலயா? அவர்கள் கற்பிழந்தவர்களா என்ன?

என்னைப் பொறுத்த வரையில் கற்பு என்பது நீ யாரை கல்யாணம் பண்ணியிருக்கியோ அந்த வேளையில் அந்த ஆண் அல்லது பெண்ணுக்கு கட்டுறுதியோடு இருத்தல். கற்பு என்ற சொல் கற்றுக் கொள்ளுதல் ஆகும். படிப்பு மாதிரி. கல் + பு = கற்பு. இந்தச் சமூகத்தில் இது. மற்றச் சமூகத்திற்கு மற்றது.

http://www.keetru.com/thamizhar/aug07/sivathambi.php

AntanO, கற்பு என்பது ஆண் மற்றும் பெண்ணுக்கு பொதுவானது. மேலும் கற்பிலணக்கம் கண்ணகி என்ற கூற்றில் கண்ணகி திருமணமானவள் தான். ஆகவே கற்பை பற்றிய வரையரையில் தவறேதும் இல்லை என நினைக்கிறேன்.
இது கலைக்களஞ்சியம். தகுந்த ஆதாரங்கள் இருந்தால் (குறிப்பாக இரண்டாம் நிலை ஆதாரங்கள்) அதன்படி எழுதலாம். அதைவிடுத்து, வெறுமனே எழுதப்படும் கருத்துக்கள் நீக்குவதுதான் வழமை. keetru முக்கிய ஆதாரமான தளமல்ல.--AntanO 17:12, 27 ஏப்ரல் 2015 (UTC)

keetru நான் வழங்கிய ஆதாரமல்ல. கற்பை பற்றிய வரையறை எந்த நூல்களிலும் இல்லை. தகவல்கள் மட்டுமே உள்ளன. அப்படியென்றால் கற்பை எப்படி வரையறுப்பது?--நிர்மல் (பேச்சு) 05:27, 28 ஏப்ரல் 2015 (UTC)

விபச்சாரம் என்ற சொல்லை கற்புக்கு எதிர்மறை சொல்லாக எடுத்துக்கொள்ளலாமே? --நிர்மல் (பேச்சு) 05:31, 28 ஏப்ரல் 2015 (UTC)

கீற்று தளத்தின் கட்டுரை பேராசிரியர் கா. சிவத்தம்பியின் நேர்காணல். அக்கட்டுரையை ஆதாரமாகத் தருவதில் தவறில்லை.--Kanags \உரையாடுக 10:15, 28 ஏப்ரல் 2015 (UTC)

Start a discussion about கற்பு

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கற்பு&oldid=1851749" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கற்பு" page.