பேச்சு:கலிங்க மாகன்

கி.பி 12 ஆம் நூற்றாண்டளவில் இலங்கைக்கு வந்து சேர்ந்த மன்னன் மாகோன் என மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது.மேலும் "மட்டக்களப்பில் சுகதிரன் என்பவன் ஆட்சி செய்த பொழுது கலிங்கமன்னன் மூன்றாவது புத்திரன் மாகோன் மணிபுரத்தில் (யாழ்ப்பாணம்) இறங்கி,சிங்கன் குலத்தவரை எதிர்த்து வெற்றிகொண்டு,தோப்பாவையைக் (பொலன்னறுவை) கைப்பற்றி,அணிகங்களை வாளுக்கிரையாக்கி,பௌத்த ஆலயங்களை இடித்துத்தள்ளி,கதிர்காமத்திலும்,விஜய துவீபத்திலும் சிவாலய முன்னீரும் பெற்று பல திட்டங்கள் செய்து,வட இலங்கை என இராமேஸ்வரத்தை இலங்கையோடு சேர்த்து,தோப்பாவையை ஆண்டான்" என மாகோனைப் பற்றி மட்டக்களப்பு மான்மியம் கூறுவது குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் நடந்தது கலி வருடம் 4250 (கி.பி. 1148) ஆகும்.1209 ஆம் ஆண்டில் அணிகங்கன்,ஒரு தளபதியால் வெற்றி கொள்ளப்பட்டு,லீலாவதி என்பவள் ஆட்சிபீடம் ஏறியபோதே பராக்கிரம பாண்டியன் அவளைத் தோற்கடித்து,ஆட்சியைக் கைப்பற்றினான்.அப்பொழுதே மாகோனின் பெரும்படைஎடுப்பு நிகழ்ந்தது. இச்சம்பவங்கள் "பூஜாவலிய","சூளவம்சம்" போன்ற சிங்கள,பாளி வரலாற்று நூல்களும் கூறுகின்றன.


உசாத்துணை

தொகு
  • க. தங்கேஸ்வரி (ப-101,102) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).

இத்தகவல் மிகவும் அவசியம் இருவரும் ஒருவரா என்பதில் சில ஜயப்பாடுகளும் உளன.ஆகையால் இப்பகுதி இங்கு இருப்பது நன்று.--நிரோஜன் சக்திவேல் 18:36, 7 பெப்ரவரி 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கலிங்க_மாகன்&oldid=102010" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கலிங்க மாகன்" page.