பேச்சு:காட்டுப்புத்தூர்
எம்.டி.கே திரையரங்கு தற்போது இடிக்கப்பட்டுவிட்டது. அதன் ஒரு பகுதியாக இருந்த பிள்ளையார் கோவில் மட்டும் மக்களின் எதிர்ப்பு காரணமாக இடிக்கப்படவில்லை. மேலும் அந்த பிள்ளைக்கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. அதை குறிப்பிட வேண்டுமா.
\\கங்கநியார் என்பவர் இந்தப் பள்ளியை உருவாக்கினார். \\
சிதம்பரம் ரெட்டியார் என்பவரே இந்தப் பள்ளியைத் தோற்றுவித்தாக எங்கள் ஜமிந்தார் பள்ளியில் கொடுத்த கையேட்டில் படித்திருக்கிறேன். அங்கு ஆசிரியராக வேலைப் பார்த்த என் அம்மாவிடமும் கேட்டுவிட்டேன். இதைத்தான் உறுதி செய்தார். எனினும், இந்த கங்கநியார் என்ற பெயரை பதிந்த நண்பர், யாரென்று தன்னை அறிமுகம் செய்து, அதற்கான சான்றையும் கொடுத்தால் ஏற்றுக் கொள்கிறேன். இல்லையெனும் பட்சத்தில் ஒரு ஆதாரக் குறியை (?) இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு
- ஜெகதீசுவரன், அந்தத் தொகுப்பு ஒரு விசமத் தொகுப்பாகவே எனக்குப் படுகிறது. ஆதாரமும் இல்லை. எனவே சிதம்பரம் செட்டியார் என மீள்வித்திருக்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.--Kanags \உரையாடுக 05:33, 19 ஏப்ரல் 2012 (UTC)
- நான் தான் நன்றி கூற வேண்டும். சிதம்பரம் ரெட்டியார் என்பதை செட்டியார் என மாற்றம் செய்துவிட்டீர்கள். அதையும் கொஞ்சம் கவணித்துவிடுங்கள். நாங்கள் படித்த பள்ளி. அதை உருவாக்கியவருக்காக எங்கள் கிராமமே நன்றி சொல்லியிருக்கிறது. அவரைப் பெயரை உச்சரித்து உச்சரித்து ஆசிரியர்கள் மகிழ்வார்கள். அவர் பள்ளியை கட்டவில்லையென்றால் என் அம்மாவுக்கும் கல்வி கிடைத்திருக்காது. எங்கள் ஊரின் மிகப்பெரும் அடையாளம் அது. நாளைய தலைமுறைக்கு அதை தரவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு அதிகம் உள்ளது. காட்டுப்புத்தூர் முகநூல் குழுமத்திலும், என் நண்பர்கள், உறவுகளிடையேயும் பள்ளியின் கைச்சுவடியை கேட்டிருக்கிறேன். தற்போது பள்ளி நலிவடைந்து விட்டதால் வெளியிடப்படுவதில்லை என்று கூறிவிட்டார்கள். கிடைத்ததும் ஆதாரத்தினைப் பகிர்கிறேன்.
நன்றி.
சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:53, 20 ஏப்ரல் 2012 (UTC)
இது ஒரு சிறு தொகுப்பு
தொகுஅமைவிடம்: கிமீ என்று குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் கி.மீ. என்று மாற்றப்பட வேண்டும்.
பேரூராட்சியின் அமைப்பு: சகிமீ என்று குறிப்பிடப்பட்டுள்ளது ச.கி.மீ. என்று மாற்றப்பட வேண்டும்.