பேச்சு:காந்தி ஜெயந்தி

காந்தி ஜெயந்தி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தமிழ்ச்சொல்

தொகு

ஜெயந்திக்குத் தமிழ்ச் சொல் என்ன? ஜெயந்தி என்ற சமசுகிருதச் சொல்லுக்கு anniversary என்று பொருள் வருகிறது. பார்க்க en:Jayanti--Ravishankar 15:30, 1 அக்டோபர் 2007 (UTC)Reply

பிறந்தநாள் விழாதானே? ஆண்டுநிறைவு என்பது anniversary. பிறந்தநாள் கொண்டாட்டத்தைதான் ஜெயந்த்தி என்கிறார்கள். ஜெயம் என்பது வெற்றி என்று பொருள் இருந்தாலும், இங்கு கொண்டாட்டம், விழா என்பதுதான் பொருள். வெற்றிகரமாகப் பிறந்தது அல்ல (அதுவும் பொருந்தும் எனினும்). --செல்வா 16:49, 1 அக்டோபர் 2007 (UTC)Reply

இந்நாள் காந்தி ஜெயந்தி என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள். இது மொழிபெயர்க்கப்பட வேண்டுமா?--Kanags 21:09, 1 அக்டோபர் 2007 (UTC)Reply

காந்தி பிறந்தநாள், பாரதி பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள் என்பதெல்லாம் தமிழ்நாட்டில் பழக்கம்தான். கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி என்பதும் வழக்கம். காந்தி ஜெயந்தி என்றும் கூறுவது வழக்கம்தான், ஆனால் அப்படித்தான் அழைக்கவேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். காந்தி ஜெயந்தி என்று அழைக்க வேண்டுமெனில் எனக்கு மறுப்பு ஏதும் இல்லை, ஆனால் ஜெயந்த்தி என்று எழுதுதல் நலம் (இது வழக்கம் இல்லை என்பதை அறிவே; தவறான முறைகளை நாம் தயங்காமல் திருத்த வேண்டும். ஜெயந்தி என்று எழுதினால் Jeyandhi என்று பலுக்க வேண்டும், அப்படிப் பலுக்கினால் (Jeyandhi ஒலித்தால்) ஜெயந்தி என்று எழுதுவதில் தவறு இல்லை. கல்கி என்று எழுதினால் Kalgi என்றுதான் ஒலிக்க வேண்டும். தமிழின் அருமையான ஒலிப்பு முறையை, ஒலிப்பு ஒழுக்கத்தைக் கெடுக்கலாகாது. --செல்வா 22:40, 1 அக்டோபர் 2007 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காந்தி_ஜெயந்தி&oldid=3786085" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காந்தி ஜெயந்தி" page.