பேச்சு:காயல்பட்டினம்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic வேண்டுகோள்

வேண்டுகோள் தொகு

பயனர்:Hibayathullah இணைத்துள்ள பல தகவல்களுக்கு மேற்கோள்கள் இட வேண்டுகிறேன். இவை கட்டுரையில் உள்ள செய்திகளுக்கு வலுகூட்டும். குறிப்பாக 10 ஆவது நூற்றாண்டுகளுக்கு முன்னரான, அதுவும் 600களில் இசுலாமியர்களின் குடியேற்றம் பற்றிய செய்திகளுக்கு வலுவான அடிக்கோள்கள், அடிச்சான்றுகள் தருதல் வேண்டும். நடுகிழக்கு நாடுகளுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே கடல்வழி வணிகம் இருந்தது வியப்பில்லை, இருதிசைகளிலும் மக்கள் போக்குவரத்துகள் இருந்திருக்கக்கூடும். இப்பொழுது ஒருபக்கச் சார்பாக உள்ளன. கட்டுரையை சற்று நடு நின்று எழுதுவதும் நல்லது. பயனர்:Hibayathullah தகவல்கள் சேர்த்து கட்டுரைகளுக்கு வளம் கூட்டுவது மகிழ்ச்சியைத் தருகின்றது. தகவல்கள் உறுதியானவை என்பதற்கும் அடிச்சான்றுகள் தந்து உதவவேண்டும்.--செல்வா 18:30, 29 நவம்பர் 2008 (UTC)Reply

மேலுள்ள கருத்துகளை மீண்டும் முன்வைக்கின்றேன். --செல்வா 14:52, 20 ஆகஸ்ட் 2009 (UTC)

எனக்குத் தெரிந்து கி.பி. 800லிருந்து மணிகிராமத்தார், அஞ்சுவண்ணம் போன்ற வணிக்கக் குழுக்கள் இருந்துளன. இவர்கள் இசுலாமியர் என்று சிலர் கருதினாலும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அதனால் இவர்கள் அரேபியர்கள் என்று கருதப்படுவதாகக் கொள்ளலாம். பாண்டியர்த் துறைமுகங்கள்#வணிகக் குழுக்கள் கட்டுரையைப் பார்க்கவும். ஆனால் 6ஆம் நூற்றாண்டு எனபது சற்று வியப்பாக உளது. ஏனென்றால் அக்கடுரையில் உள்ள மூலம் பகுதியிலுள்ள கட்டுரையில் கி.பி. 600 முதலுள்ள வரலாறுகள் உள்ளதாகவே உளது. அதில் குறைந்தபட்சம் இசுலாமியர்கள் வருவது 8ஆம் நூற்றாண்டிலேயே. அதுவும் அவர்கள் இசுலாமியர்களா என்பதும் சந்தேகமே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:39, 9 சூன் 2012 (UTC)Reply

தமிழில் யவனர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் கிரேக்கர்களாகவோ, உரோமானியர்களாகவோ, அரபியர்களாகவோ இருக்கலாம். ஆனால் இசுலாமியர் என்னும் சுட்டி எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் வர இயலும். அராபியர்களாக இல்லாதவரகளும் இசுலாமியர்களாக இருந்திருக்கின்றனர். அராபியர்கள் அனைவரும் இசுலாமியரும் அல்லர். --செல்வா (பேச்சு) 15:23, 9 சூன் 2012 (UTC)Reply

ஆம். நீங்கள் கூறுவது சரியே. அஞ்சுவண்ணம் வணிகர் 8ஆம் நூற்றாண்டே வந்தாலும் அவர்கள் அரேபியர் என்பதில் தான் ஆய்வாளர்கள் உடன்படுகின்றனர். சோனகரர் என்னும் அரேபிய குழுவினர் கட்டிய பள்ளிவாசல் ஒன்று திருப்புல்லானிக்கு அருகில் சோனகச்சாமந்தப்பள்ளி என்றிருந்ததாக தென்னிந்தியக் கல்வெட்டுகள் 8/402 தெரிவித்தாலும் அது 12ஆம் நூற்றாண்டினதே. அதனால் மீண்டும் இக்கட்டுரை தொடர்பான கேள்விகள் தொடர்கிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:39, 10 சூன் 2012 (UTC)Reply

மூலத்தை இங்கிருந்து] எடுத்துள்ளார். நான் ஏற்கனவே கூறியிருந்த கல்வெட்டுத்தகவல்களும் இதை உறுதிப்படுத்துவதாகவே உள்ளன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:45, 4 சூலை 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காயல்பட்டினம்&oldid=1154922" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காயல்பட்டினம்" page.