பேச்சு:காலக்கோடுகளின் பட்டியல்

கருதுகோள் என்றால் என்ன?--ரவி (பேச்சு) 12:31, 21 ஆகஸ்ட் 2005 (UTC)

கருதுகோள் என்றால் Concept அல்லது Ideas என்ற பதங்களில் பயன்படுத்துகின்றேன். பிறர் பயன்படுத்துதையும் கவனித்துருக்கின்றேன். எனினும், அது பொது பாவனையில் இல்லை என்றும் எனக்கு தோன்றுகின்றது. வேறு ஏற்ற சொற்கள் இருந்தால் பரிந்துரையுங்களேன்? --Natkeeran 13:08, 21 ஆகஸ்ட் 2005 (UTC)

எல்லா பின்னணிகளிலும் பொருத்தமான சொல்லாக இல்லாவிட்டாலும், கோட்பாடு என்ற சொல்லை Concept என்ற பொருளில் தமிழ் நாட்டில் உண்டு. கருதுகோள் என்ற சொல்லை நீங்கள் பயன்படுத்தலாம். அப்படியே இது போன்ற அதிகம் பரிச்சயமில்லாத சொற்களுக்கு விக்சனரியில் பொருள் சேர்த்தல் நன்று--ரவி (பேச்சு) 13:29, 21 ஆகஸ்ட் 2005 (UTC)


கருதுகோள் என்பது assumption என்ற பொருள் தருவது. எடுகோள் என்பதும் இதே பொருள் தரும் சொல்தான். கருதுகோள் என்பது கலைச்சொல்லாகவே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்கிறேன். Concept என்பதற்கான தமிழ்ச் சொல் "கருத்துரு" அல்லது "எண்ணக்கரு" ஆகும். Mayooranathan 18:14, 21 ஆகஸ்ட் 2005 (UTC)


நன்றி மயூரநாதன், ரவி. எனக்கும் தெளிவில்லாமல்தான் இருந்தது. பிளையான தகவல் தந்ததுக்கு மன்னிக்கவும் ரவி. --Natkeeran 20:04, 21 ஆகஸ்ட் 2005 (UTC)

காலக் கோடு பட்டியல்களா? அல்லது காலக்கோடுகளின் பட்டியல் ஆ? --கோபி 18:43, 16 ஆகஸ்ட் 2006 (UTC)

Start a discussion about காலக்கோடுகளின் பட்டியல்

Start a discussion
Return to "காலக்கோடுகளின் பட்டியல்" page.