பேச்சு:காலணி
கால்ப்பூட்டணி என்ற பெயர் நன்று. ஷூ, பூட்ஸ் ஆகியவற்றுக்கும் தமிழ் பெயர் வைக்க இயலாதா? எல்லாவற்றையும் காலணி என்று சொல்லாமல் ஒவ்வொரு வகைக்கும் ஒரு பெயர் வைத்தால் நன்றாக இருக்கும். வார் தமிழ்ச் சொல்லா? socksஐ எப்படிச் சொல்வது? காலுறை என்றா? காலணி குறித்த தமிழ்ச் சொல் குறிப்புகளுக்கு நன்றி.--Ravidreams 17:09, 27 பெப்ரவரி 2007 (UTC)
- ரவி, இது மிக விரிவாக எழுத வேண்டிய கட்டுரை. காலணி என்பது பொதுப்பெயர். இது தொடர்பாக 20-30 கட்டுரைகள் எழுத எண்ணியுள்ளேன் (கருத்துக்களும் உள்ளது). socks என்பது காலுறைதான். எத்தனையோ தனிச்சிறப்பான செய்திகளும் அறிவுத்துணுக்குகளும் உள்ளன. காலணிகளில் நூற்றுக்கணக்கான உட்தலைப்புகளும், துணை, இனத் தலைப்புகளும் உள்ளன. இக்கட்டுரை ஓர் சிறு தொடக்கம் மட்டுமே.--செல்வா 17:14, 27 பெப்ரவரி 2007 (UTC)
நன்றி, செல்வா. வழக்கமான seriousஆன கலைக்களஞ்சியத் தலைப்புகளான நாடுகள், மொழிகள், கலைகள் போன்றவற்றை தவிர, இது போன்ற தலைப்புகளை காண்பது மிகந்து மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் விக்கிபீடியா பரப்பை காட்டவும் வாசகர்களை ஈர்க்கவும் உதவும். --Ravidreams 17:28, 27 பெப்ரவரி 2007 (UTC)
- ரவி எல்லாக் கலைக்களஞ்சியங்களிலும், காலணிகள் பற்றி கட்டுரைகள் உண்டு. இது ஒரு க.க தலைப்புதான். --செல்வா 18:25, 27 பெப்ரவரி 2007 (UTC)
செல்வா, இது க.க தலைப்பு தான் என்பதை அறிவேன். ஆனால், சாதாரணப் பயனர் கலைகளஞ்சியம் என்றாலே சற்று seriousஆக எடுத்துக் கொள்வதுண்டு. நாடுகள், மொழிகள் போன்ற தலைப்புகளை நாம் முன்னுரிமை கொடுத்து எழுதுவதும் இதனால் தான். தமிழ் விக்கிபீடியாவில் காலணி, வாழ்த்து அட்டை குறித்து கூட கட்டுரை உண்டு என்ற போது நண்பர் ஒருவர் ஆச்சரியப்பட்டார். அதற்காக சொன்னேன்--Ravidreams 19:15, 27 பெப்ரவரி 2007 (UTC)
சப்பாத்து என்பது தமிழ்ச்சொல் அல்ல. இது இலங்கையில் பயன்படுத்தும் வேற்றுமொழிச்சொல் (போர்த்துகீசிய சொல் என நினைக்கிறேன்) --செல்வா 05:34, 20 ஜனவரி 2008 (UTC)
சப்பாத்து என்பது போத்துக்கீசிய மொழியிலிருந்து வந்ததுதான். மயூரநாதன் 18:39, 21 ஜனவரி 2008 (UTC)
சப்பாத்து சப்பைத் தன்மையைக் குறிப்பதால் அது ஒரு பொறுத்தமான சொல். ஆங்கில ஒலிப்பெயர்ப்பான ஷூ/சூ ஆகியவை விட அது இன்னும் அழகான சொல். தமிழகத்திலு இப்பொழுது புழத்தில் வந்துள்ளது. ராஜ் −முன்நிற்கும் கருத்து தொழில்நுட்பம் (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
சப்பாத்து தமிழ் அல்ல என்ன சொல்லுவது சரியல்ல என்பது நினைக்கிறேன். கோடி மக்களிடையே புழக்கமான சொல், தீடீரென தமிழ் அல்ல என்பது சொல்வது ஆகாது. "காலணி" என்கிற தமிழ் சொல் ஆங்கில shoe என்பதற்கு நேரடி சொல் கிடையாது. அது ஆங்கிலத்தின் footwear என்பதற்கே நேரடி சொல் ஆகும். ஆனால் சப்பாத்து என்பது shoe என்கிற ஆங்கில சொல் என்பதற்கே நேரடி தமிழ் சொல். ஆம், சப்பாத்து போர்த்துகீஸ் மொழி Sapatos என்பதற்கு ஒலி ஒற்றுமை உள்ளது. அதற்காது அது போர்த்துகீஸ்லிருந்தே பெறப்பட்டது என்பது சொல்லுவது சரியல்ல. தமிழிலே சப்பைத் தன்மை என்கிற வேர் உள்ளது. காலணி என்பது ஒரு நல்ல தமிழ் சொல், ஆனால் சப்பாத்தைக் குறிப்பாகக் குறிக்கும் ஆனால் துல்லியம் இல்லை. - Siva2 10-Jan-09 −முன்நிற்கும் கருத்து Siva2 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- சப்பாத்து என்பது தமிழ்வழி, சப்பையான (கால்) காப்பு அணி என்று பொருள் கொள்ள இயலும். தமிழில் பா என்றால் காப்பு என்று பொருள். பாதுகாவல் என்னும் சொல்லில் உள்ள பா என்பது காப்பளித்தல் என்னும் பொருளில் வரும் சொல்லே. ஆனால், சப்பாத்து என்னும் இச்சொல் போர்த்துகீசியச்சொல்தான், அதனை நாம் தமிழில் எடுத்தாள்கிறோம். தமிழ்வழியும் பொருள் உண்டு என்று கூறலாம். --செல்வா 16:18, 10 ஜனவரி 2009 (UTC)
5,600 ஆண்டு பழமையான தோலால் ஆன காலணி கண்டுபிடிப்பு
தொகுமிக அண்மையில் வெளியான கண்டுபிடிப்பின்படி மிகப்பழமையான தோலால் ஆன் காலணிகளை அர்மேனிய குகையில் கண்டுபிடித்துள்ளனர். பார்க்க: Pinhasi R, Gasparian B, Areshian G, Zardaryan D, Smith A, et al. (2010) First Direct Evidence of Chalcolithic Footwear from the Near Eastern Highlands. PLoS ONE 5(6): e10984. doi:10.1371/journal.pone.0010984 இவ்வாய்வுரையை நேரடியாகப் படிக்கலாம்- http://www.plosone.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pone.0010984
இச்செய்தியை கட்டுரையில் சேர்த்துள்ளேன் (வரலாறு பகுதியில்). --செல்வா 00:40, 10 ஜூன் 2010 (UTC)