பேச்சு:கால்பந்து கூட்டமைப்பு

கூகுள் மொழிபெயர்ப்பு உரைத் திருத்தம் முடிந்தது.--−முன்நிற்கும் கருத்து மாரிக்கனி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஒரே ஆங்கிலக் கட்டுரையை (en:Association football) இரு கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் வெவ்வேறு தலைப்புகளில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியமானது? (மற்றையது காற்பந்தாட்டம்). இது ஏற்றுக் கொள்ளத்தக்கதும் அல்ல. இவை இரண்டும் இணைக்கப்படல் வேண்டும். காற்பந்தாட்டம் என்ற தலைப்பையே தமிழில் முதன்மைப்படுத்த வேண்டும். சங்கக் கால்பந்து என்ற சொல் தமிழில் தேவையில்லை. இது குறித்து உரையாடலை பேச்சு:காற்பந்தாட்டம் பார்க்க.--Kanags \உரையாடுக 04:36, 6 ஜூலை 2010 (UTC)
மேலும் ஆராய்ந்து பார்த்ததில் காற்பந்தாட்டம் கட்டுரை en:Football என்ற கட்டுரையையும், சங்கக் கால்பந்து கட்டுரை en:Association football என்ற கட்டுரையையும் ஒத்திருக்கிறது. எனவே இவ்விரண்டு கட்டுரைகளையும் இணைக்க முடியாது. சங்கக் கால்பந்து என்பதை "காற்பந்தாட்டம்" எனத் தலைப்பிட்டு, காற்பந்தாட்டம்" கட்டுரையை "கால்பந்து" எனத் தலைப்பிடலாம் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 04:53, 6 ஜூலை 2010 (UTC)

உங்கள் யோசனை ஏற்கத்தக்கதே. ஆயினும் கால்பந்து கட்டுரையிலான மாற்றத்தையும் பொறுத்து அது அமைந்தால் தான் அந்த மாற்றம் சரியானதாய் அமையும். இல்லையேல் முதல் பார்வையில் இவை ஒரே கட்டுரையின் நகல்களாய்த் தோன்றும் குழப்பம் தவிர்க்கமுடியாததாகி விடும்.

உங்கள் உரையாடலை நோக்கினேன். பொதுவான விசயம் என்பதால் கருத்தளிக்கலாம் எனத் தோன்றியது; soccer அல்லது association football ஏறக்குறைய முழுமையாக உதைக்கப்பட்டு விளையாடப்படுவதால் உதைபந்தாட்டம் ( soccer-ஐ உதைபந்தாட்டம் எனவும் சொல்வதுண்டு தானே? )எனவும் football என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பிற பந்தாட்டங்களான ரக்பி, அமெரிக்கன் ஃபுட்பால், ஆசி ரூல்சு ... ஆகியவற்றை காற்பந்தாட்டங்கள் என்ற தலைப்பிலும் இடலாம் என்பது என் கருத்து. --பரிதிமதி 06:19, 6 ஜூலை 2010 (UTC)

இந்த யோசனையை நான் தீவிரமாய் சிந்தித்தேன் என்றாலும் படிப்பவர்கள் உதைபந்தாட்டம் என்றால் ஏதோ கால்பந்தை ஒத்த (ஆனால் கால்பந்து அல்லாத) பிறிதொரு விளையாட்டு போலும் எனக் கருதும் அபாயம் இருப்பது கருதி அந்த யோசனையைக் கைவிட்டேன்.

Start a discussion about கால்பந்து கூட்டமைப்பு

Start a discussion
Return to "கால்பந்து கூட்டமைப்பு" page.