பேச்சு:கிசன்கங்கா நீர் மின் திட்டம்

கிசான்கங்கா என்று இருக்க வேண்டும். கிசான் என்றால் இந்தியில் உழவன் என்று பொருளாம். இது தமிழின் நிலக்”கிழான்” என்ற சொல்லில் இருந்து சென்றதாக ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார், வேர்ச்சொல் தொடர்பான ஆதாரம் கிடைத்தபின் சேர்க்கிறேன். தற்போதைக்கு தலைப்பை மாற்ற வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:08, 4 மார்ச் 2013 (UTC)

கிஷன்கங்கா என்பது ஜீலம் நதியின் ஒரு துணையாறு. இதை ஆங்கிலத்தில் Kishenganga என்று எழுதுவர். -கிராமத்தான்-சரவணன்

ஓ! சரி!! பிழைக்கு வருந்துகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:12, 4 மார்ச் 2013 (UTC)

அழகாக தொகுத்தமைக்கு நன்றி ! இனிமேல் இது போலவே எழுத முயல்கிறேன். மேலும் ஒரு வேன்டுகோள், இக்கட்டுரையை நீர்மின் நிலையங்கள் என்ற பகுப்புக்குள் கொன்டுவர உதவுங்கள். தற்சமயம் இது அனல் மின் நிலையம் என்ற பகுப்பினுள் உள்ளது. -கிராமத்தான்-சரவணன்

மறுபடியும் பிழைக்கு வருத்தங்கள்! அவசரத்தில் புனலை அனல் என்று எழுதிவிட்டேன். ஒரு பகுப்புக்குள் கட்டுரையைக் கொண்டு வர வேண்டுமென்றால் [[பகுப்பு:பகுப்பின் பெயர்]] என்று கட்டுரையில் இட வேண்டும். நீங்கள் சேர்க்க விரும்பும் பகுப்பு இல்லையென்றால் புதிதாக உருவாக்கிக் கொள்ளுங்கள். எளிதாக பகுப்புகளைச் சேர்க்க, விக்கிப்பீடியா:விரைவுப்பகுப்பி பயன்படும். எவ்வாறு விரைவுப்பகுப்பியை இயங்கச் செய்வது என்பதற்கான வழிமுறைகள் முன்னர் தந்த பக்கத்தில் உள்ளன. நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:10, 5 மார்ச் 2013 (UTC)
தேவநாகரி எழுத்துக்களில் கிசன்கங்கா என்பது कृष्णगंगा नदी என்று எழுதப்பட்டுள்ளது. தமிழில் கிருஷ்ணகங்கா என்றாகிறது. ஆனால் இந்தி விக்கியிலும் கிசன்கங்கா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் கிசன்கங்கா என்று எழுதியிருக்கின்றனர். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:31, 5 மார்ச் 2013 (UTC)

Start a discussion about கிசன்கங்கா நீர் மின் திட்டம்

Start a discussion
Return to "கிசன்கங்கா நீர் மின் திட்டம்" page.