பேச்சு:கிரகாம் செவலியர்
கிரகாம் செவலியர் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
கிரகாம் செவலியர் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
Grahame அல்லது Graham என்பது கிரயெம் எனப் பலுக்கப்படும். தமிழில் கிரகாம் என எழுதுவதில் தவறில்லை. கிராம் என ஒலிப்பதில்லை.--Kanags \உரையாடுக 12:11, 27 சனவரி 2012 (UTC)Reply
- கனகு சிறீதரன், இப்பெயரை நான் பல முறை கேட்டிருக்கின்றேன். க்'ராம் (க்' = g) என்றுதான்
ஒலிக்கக் கேட்டிருக்கின்றேன் (கிராய்ம் என்பது போல ஒலிக்கும் என்றும் சொல்லலாம்) . மெர்ரியம் அகராதி (\ˈgrā-əm, ˈgra(-ə)\ எனக் காட்டுகின்றது. (ஒலிப்பையும் இங்கு கேட்கலாம்) கிரெயம் என்றால் பிழையில்லை (ஏனெனில் அதில் ஒரு ஒத்திசைவு உள்ளது, ஏறத்தாழ கிராய்ம் என்பது போல உள்ள்ளது). கிரகாம் (க்'ரஃகாம்) என்று யாரும் சொல்லக் கேட்டதில்லை. தமிழர்கள் பிழையாக அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்று பிழையாகச் சொல்லியே பழக்கப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். கிரகாம் என்றுதான் நம் மொழியில் எழுத வேண்டும் எனில் எனக்கு மறுப்பு இல்லை. இன்னும் சற்று சரியான ஒலிப்பாக, ஓரெழுத்துக் குறைவாகவும் கிராம் கிராய்ம் என்று எழுதலாம் என்பது என் கருத்து. இங்கு இந்த கிராம் செவலியருக்காக இதனைக் கூறவில்லை. இச்சொல் மிகவும் பரவலாக வரக்கூடிய சொல். சரியாக, ஒரே சீராக, எல்லா இடத்திலும் வருவது நல்லது என்னும் நோக்கில் கூறுகின்றேன். --செல்வா 23:11, 28 சனவரி 2012 (UTC)Reply
- நீங்கள் தந்துள்ள இணைப்பில் கிரேயம் என்று தானே பலுக்கப்படுகிறது? கிராம் என்றல்லவே. கிராம் என்பது பேச்சு வழக்காக இருக்கலாம். தமிழ்நாட்டில் பேச்சு வழக்கில் பல சொற்கள் திரிந்துள்ளது போல. ஆங்கிலத்திலும் ஆங்கிலேயர்கள், அமெரிக்கர்கள், ஆத்திரேலியர்கள், ஸ்கொட்லாந்தியர்கள், ஐரியர்கள் எனப் பலரும் தமது வழக்கிற்கேற்ப உச்சரிப்பார்கள். அனைத்தையும் தமிழில் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. கிரகாம் என்றே நாம் அன்று தொட்டுத் தமிழில் எழுதி வந்துள்ளோம். அதில் என்ன தவறு? simpson, simson இரண்டையும் ஆங்கிலத்தில் வேறுபடுத்தி எழுதுகிறார்கள். தமிழில் இரண்டையும் எப்படி சிம்சன் என்று எழுதுவது. சிம்ப்சன் என்று சிம்சன் என்று நாமும் வேறு படுத்தி எழுதுவதில் தவறில்லை. நாம் ஆகஸ்டு என்று எழுதுகிறோம், அமெரிக்கர்கள் அவ்வாறு உச்சரிப்பதில்லை. ஆகஸ்ட் என்றே உச்சரிக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் ஓகஸ்ற் என உச்சரிக்கிறார்கள். தமிழில் இலக்கணச் சுத்தமாக எழுத வேண்டும் என்ற விதியும் உள்ளது.--Kanags \உரையாடுக 00:35, 29 சனவரி 2012 (UTC)Reply
- நன்று கனகு சிறீதரன். நானும் //கிரகாம் என்றுதான் நம் மொழியில் எழுத வேண்டும் எனில் எனக்கு மறுப்பு இல்லை// என்றே சொன்னேன். இங்கே கிராம், கிராய்ம், கிரேஅம் என்பது போல ஒலிக்கிறார்கள். ஆம், "தமிழில் இலக்கணச் சுத்தமாக எழுத வேண்டும் என்ற விதியும் உள்ளது", தமிழில் மட்டும் அல்ல
ஆங்கிலத்திலும், இடாய்ச்சிலும், பிரான்சியத்திலும், எல்லா மொழிகளிலும் அப்படித்தான். --செல்வா 00:59, 29 சனவரி 2012 (UTC)Reply