பேச்சு:கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

கிழக்குப் பல்கலைக்கழகமா? கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகமா? எது சரியானது? தெரிந்தவர்கள் குறிப்பிடவும்?. பல்கலைகழக இணையத்தை அணுகமுடியவில்லை.--Umapathy 15:43, 11 மார்ச் 2007 (UTC)

கிழக்கு பல்கழைக்கழகமே சரி - eastern university --கலாநிதி 16:56, 11 மார்ச் 2007 (UTC)

தமிழில் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் என்றே பாவனையில் இருந்தது. Eastern University அல்ல Eastern University of Sri Lanka என்றே ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.--Kanags 20:17, 11 மார்ச் 2007 (UTC)
கனக்ஸ் கவனிக்க நான் சில வருடங்கள் முன்பு அப் பல்கழைக்கழகத்தில் degree செய்தபோது அவர்களால் எனக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் தலைப்பில் (letter head) கிழக்குப் பல்கழைக்கழகம், இலங்கை என தமிழில் அச்சிடப்பட்டிருந்தது. சில ஊடகங்களால் அவ்வாறு உச்சரிக்கப்படுவதை நானும் அவதானித்திருக்கின்றேன். எனது எண்ணம் என்னவெனில் இதனுடைய கிளைகளான திருகோணமலை வளாகம், விபுலானந்த இசைக்கல்லூரி, கல்லடி மருத்துவபீடம் இணைத்தே இவ்வாறு கூறப்பட்டிருக்கலாம் என்பதே. இதனை உறுதிப்படுத்த நான் பல்கலைக்கழக மாணவனல்ல. மேலும், தற்போது பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதன் முன்றலில் உள்ள board பார்த்தால் எல்லாவற்றிக்கும் விடை கிடைக்கும் --கலாநிதி 17:43, 12 மார்ச் 2007 (UTC)

கிழக்குப் பல்கலைக்கழகம்

தொகு

உறுதியாக. கூகுள் image சென்று பார்க்கலாம். --Natkeeran 17:46, 12 மார்ச் 2007 (UTC)

கலாநிதி, நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் தலைப்பை மொட்டையாக கிழக்குப் பல்கலைக்கழகம் என்று இடுவது தவறு. ஒன்றில் கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை என்றோ கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் என்றோ ஒன்றை முதன்மைப்படுத்த வேண்டும்.--Kanags 20:36, 12 மார்ச் 2007 (UTC)

நன்றி, சிறீதர், நற்கீரன், கலாநிதி. இப்போதைக்கு கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் ஐ முதன்மைப் படுத்தியுள்ளேன் ஏனையவை வழிமாற்றுப்பக்கமாக இருக்கட்டும்.--Umapathy 00:51, 13 மார்ச் 2007 (UTC)

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

தொகு

கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் என்றே பெயரிடப்பட ஆரம்பத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் பின்னர் இது கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை என அமைய வேண்டுமெனச் சிலர் விடாப்பிடியாய் இருந்ததாகவும் அப் பெயரே முடிவாக செய்யப்பட்டதாகவும் அறிய முடிகிறது. ஆகவே இலங்கை வர்த்தமானியில் பதிவான பெயர் கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை (Eastern University, Sri Lanka) என்பதே ஆகும்.--சஞ்சீவி சிவகுமார் 04:55, 13 ஆகஸ்ட் 2010 (UTC)

நன்றி சஞ்சீவி. அப்படியே மாற்றி விடலாம்.--Kanags \உரையாடுக 13:28, 14 ஆகஸ்ட் 2010 (UTC)

கிழக்குப் பல்கலைக்கழகம் பக்கம் கனக்ஸ்சின் வரைமீறிய சர்வாதிகார கட்டுப்பாட்டில் உள்ளது

தொகு

கனக்ஸ் அவர்களது பக்க சார்பான நெறியாள்கையும் விடயத் தணிக்கைகளும் அவர் கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்பான பல உண்மைகளை தனது சார்பான குழு அல்லது நண்பர்கள் தொடர்பில் மறைக்க முயல்வதனையே வெளிப்படையாகக் காட்டுகின்றது. விவேகானந்தராசா என்னும் பெயர் கூட "விவேக் ஆனந்தராஜா" என தப்பாகவே காட்டப்பட்டுள்ளது. கனக்ஸ் அவர்களின் நடவடிக்கைகள் விக்கிப்பீடியா என்னும் ஊடகத்தின் அடிப்படைக்கு எதிரான முறையிலேயே உள்ளது. இலங்கை தமிழ் பல்கலைக்கழகங்களினுள் நடக்கும் முறைகேடுகள் விக்கிப்பீடியாவினுள்ளும் தொடர்ந்து வந்திருப்பதனையே கனக்சின் இவ்வாறான நடவடிக்கைகள் சுட்டுகின்றது. இக் கவலைக்கிடமான நிலை மாற்றம் பெற வேண்டும்.−முன்நிற்கும் கருத்து Satha thillai (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Satha thillai: விக்கிப்பீடியா ஒரு ஊடகம் அல்ல. ஒரு மஞ்சள் பத்திரிகையும் அல்ல. அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இங்கு எழுதப்படும் அனைத்துக்கும் தகுந்த நம்பகத்தன்மையுள்ள மேற்கோள்கள் தரப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் வெறும் வதந்திகளின் அடிப்படையில் தரப்படும் தகவல்கள் உடனடியாக நீக்கப்படும்.--Kanags (பேச்சு) 21:44, 22 மார்ச் 2019 (UTC)

@kanags Kanags ஸ்திரத்தன்மையை நிர்ணயம் செய்து சமன் செய்து பலன் பார்க்கும் தங்கள் சர்வாதிகாரத் தோரணை பாராட்டத்தக்கது. எதனால் கி.ப மற்றும் யாழ் பல்கலைகள் அழிகின்றனவோ அதனை தங்கள் சர்வாதிகாரம் விக்கியில் தொடர்கிறது. தமிழ் மெல்ல சாகும். அது உறுதி! நடத்துங்கள் மகாவம்சம் மறுபடியும் எழுதப்படட்டும்.

உங்களுக்கு கலைக்களஞ்சியம் என்றால் என்ன? அது எழுதப்படுகையில் என்ன விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று தெரியுமா? உங்களுக்கு தமிழ் மற்றும் அதன் வரலாறு முறையாக எழுதப்பட வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தால் சொல்லுங்கள் ஆங்கில விக்கியில் சில பக்கங்களைக் காட்டுகிறேன். எ.கா en:List of Sri Lankan monarchs இதன் பேச்சுப்பக்கத்தில் தனி ஆளாகத்தான் உரையாடி சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளேன். முடிந்தால் முக்கியமான இடங்களில் தமிழுக்காகக் குரல் கொடுங்கள். அதைவிடுத்து தனி ஒருவர் மீது காரணங்கள் இன்றி தன்னிலை வாதத்துடன் குற்றம் சுமத்துவதால் எதுவும் நேராது. --AntanO (பேச்சு) 02:07, 26 மார்ச் 2019 (UTC)

AntanO எனக்கு ஒன்று மட்டும் தெரியும் - உண்மைத் தகவல்களை வலிந்து மறுத்து ஒழிப்பதற்கு ஒருவருக்கும் உரிமை இல்லை. விக்கிப்பீடியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆதலால், அதனை ஒருசிலர் மட்டும்தான் நெறியாள்கை செய்யலாம் என்றால் அது தப்பு அண்ணலே!

உங்கள் சாதனைகளை பற்றிய தம்பட்டம் அடிக்க வேண்டியது இங்கு இல்லை. நன்றி.

You are on your guideline. It's not going to work. I said what i did. Don't teach me your own policy. Be on the Wiki policy and its not going to change just for you. --AntanO (பேச்சு) 11:08, 31 மார்ச் 2019 (UTC)
Return to "கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை" page.