பேச்சு:குருதிவளிக்காவி
தலைப்பு மாற்றவேண்டும்
தொகுஇரத்தப்புரதம் அல்லது குருதிப்புரதம் என்னும் தலைப்பு ஈமோகுளோபினுக்குப் பொருந்தாது என்பதை அறிக. ஈமோகுளோபின் செங்குருதியணுக்களுள் காணப்படுபவை. குருதிப்புரதங்கள் என்பவை குருதியில் தனித்தோ சேர்ந்தோ குருதிப்பாயத்தில் காணப்படுபவை, உதாரணம்: அல்புமின், குளோபியுலின். en:Blood proteins இங்கு நோக்கினால் ஆ.வி.யில் தனித்து ஒரு கட்டுரை உள்ளதைப் பார்க்கலாம், இங்கு அதே கட்டுரை எழுத வேண்டுமானால் இரத்தப்புரதம் அல்லது குருதிப்புரதம் என்னும் தலைப்பு தேவைப்படுகின்றது.
- ஈமோகுளோபின் என்பது உலோகப்புரதம் என்றபடியாலும், heme (Fe - இரும்பு உலோகம்) + Globin (புரதம்) சேர்ந்தே உருவாக்கப்பட்டிருப்பதாலும் ஈமோகுளோபின் என்னும் பெயர் வந்துள்ளது, இதனை [heme = இரத்தம் , globin = புரதம் => இரத்தப்புரதம்] என்றவாறு தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் மொழிபெயர்த்துள்ளனர்.
- குளோபின் என்னும் புரதத்தை (!தற்போதைக்கு) மொழிபெயர்க்க முடியாது, ஃகீம் (en:Heme) என்பது இரும்பு அயன்களைக் கொண்ட வளைய அமைப்பு ஆகும். இவ்வமைப்புக் கொண்ட புரதங்களை en:hemeprotein (ஃகீம் புரதங்கள் / ஈமோப்புரதங்கள்) என்பர். இவற்றுள் அடங்குவதுதான்,
- ஈமோகுளோபின்
- மயோகுளோபின் (இங்கும் தசைப்புரதம் என்பது தவறு, தசையில் வேறு புரதங்களும் உண்டு!) போன்றவை..
- இப்படியான சிக்கல்கள் காரணமாக இலத்தின் பெயரையே நேரடியாகப் பயன்படுத்தலாம்,
அல்லது தமிழ்ச்சொற்கள் என்றால் இவற்றின் பிரதான தொழிலான ஒட்சிசன், காபனீர் ஒட்சைட், நைதரசன் போன்றவற்றைக் காவுவதை வைத்துப் பெயரிடலாம். இதன்படி, (மீண்டும் அறிக, இவை உலோகப்புரதங்கள், புரதம் என்று அழைத்தலுக்கு உகந்தது அல்ல) எனது பரிந்துரைகள்,
- ஈமோகுளோபின் = குருதிவளிக்காவி
- மயோகுளோபின் = தசைவளிக்காவி
- neuroglobin = நரம்புவளிக்காவி
- ---சி. செந்தி 10:17, 30 ஏப்ரல் 2011 (UTC)
ஈமோகுளோபின் = குருதிவளிக்காவி என்பது சரி. ஆனால் மயூகுளோபினை காவி என அழைக்கலாமா? மயூகுளோபின் ஆக்சிசனை சேமித்து வைக்கும் தொழிலை செய்வதனால் காவி என அழைத்தல் பொருந்துமா? --கலை 15:01, 2 மே 2011 (UTC)
- சரியாகக் கூறினீர்கள், உண்மையில் ஈமோகுளோபினும் ஒட்சிசனைப் பிணைப்பு மூலம் வைத்திருக்கின்றதே ஒழிய எடுத்துச் செல்வதில்லை; செங்குருதி அணுக்களே ஈமொக்குளோபினையும் காவுகின்றது, அப்படிப்பார்த்தால் வளியைப் பிணைப்பில் வைத்துள்ள ஒன்று என்னும் தொடர்பில் குருதிவளிப்பற்றி, தசைவளிப்பற்றி' என்று கொடுக்கலாம், நீங்களும் சிந்தித்துப்பாருங்கள். (bind, bond என்னும் சொல்லின் கருத்து வருமாற்போல..)--செந்தி//உரையாடுக// 22:15, 2 மே 2011 (UTC)
மேலும் ஒரு சிக்கல், பின்வருவனவற்றையும் கருத்தில் கொள்ளல் தேவை. எனவே மேலே நான் கொடுத்தது சரிவராது என்றே தோன்றுகின்றது. இவை எனது பரிந்துரைகள் (அதாவது இதற்கு சமனான சொற்கள் தேவை),
- hemoglobin (வளிப்பிணைப்பான்) / (
குருதிவளிப்பற்றி) / வளிப்பற்றி - Methemoglobin (வளிப்பிணைப்பிலி) / (
குருதிவளிப்பற்றிலி) / வளிப்பற்றிலி - hemoglobinemia (பாயவளிப்பிணைப்பான்) - குருதிப்பாயத்தில் உள்ள வளிப்பிணைப்பான்
- Methemoglobinemia (மேற்கூறியது போன்று)
- மயோகுளோபின் - தசைவளிப்பிணைப்பான்/ தசைவளிப்பற்றி
-மற்றவர்களும் பார்த்து சரி என்றால் மாற்றலாம்.---செந்தி//உரையாடுக// 22:49, 2 மே 2011 (UTC)
- யாராவது நல்ல தமிழ்ப் புலமை உள்ளவர்கள் சொன்னால் நல்லது. எனக்கு இந்த சொல்லாக்கம் கடினமான வேலையாக உள்ளது. இந்தச் சொற்களையும் கலைச்சொல் ஒத்தாசைப் பக்கத்தில் கொடுத்தால் என்ன?--கலை 23:44, 2 மே 2011 (UTC)
குளோபியுளின் Vs குளோபின்
தொகுகலை, கட்டுரையில் குளோபியுளின் என்று பயன்படுத்தி உள்ளது. குளோபின் என்று பயன்படுத்தவேண்டும் என்று கருதுகின்றேன். குளோபின் ஒரு globular protein. வேறு globular proteinகளுக்கு உதாரணம்: ஆல்பா, பீட்டா, காமா குளோபியுளின்கள். --☤சி.செந்தி☤ (உரையாடுக) 03:40, 27 செப்டம்பர் 2022 (UTC)
மன்னிக்க வேண்டுகின்றேன். குளோபியுளின் என்று நான்தான் எழுதி உள்ளேன் போலும்.. --☤சி.செந்தி☤ (உரையாடுக) 01:19, 29 செப்டம்பர் 2022 (UTC)