பேச்சு:குறுங்கடன்

சிறுகடன் கட்டுரையில் உள்ள செய்திகளை குறுங்கடன் கட்டுரையில் ஓர் விளக்கமாக சேர்க்கலாம். குறுங்கடன் என்ற சொல்லாடல் வழமையில் உள்ளது. பார்க்க: http://thoughtsintamil.blogspot.com/2007/04/blog-post_19.html.--−முன்நிற்கும் கருத்து Mageshsai (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

குறும் என்றால் தூரத்தை குறிக்கிறது. சிறிது என்றால் அளவைக் குறிக்கிறது. எனினும் எது வழக்கமோ அதைப் பயன்படுத்தலாம். --Natkeeran 05:29, 21 ஜூன் 2009 (UTC)
மகேஷ், குறுங்கடன் கட்டுரையில் எழுதியுள்ள மேலதிக தகவல்களை சிறுகடன் கட்டுரைக்கு மாற்றுங்கள். அதன் பின்னர் சரியான தலைப்பைத் தீர்மானிக்கலாம்.--Kanags \பேச்சு 07:14, 21 ஜூன் 2009 (UTC)


அன்பின் கனகு மற்றும் நட்கீரன்,

கட்டுரையை இடம் மாற்ற ஒரு நிமிடமே ஆகும். எனவே விவாவதத்தை முடித்தபின்னர் இடம் மாற்றலாம் என கருதுகிறேன்.

குறுகிய என்பது தூரத்தை- நீளத்தை குறிப்பது என்பது ஏற்புடையது அல்ல. எந்த ஒன்றும் அளவில் சிறியதாகுதல் குறுகுதல் ஆகும்.

இலக்கணத்தில் குற்றியலிகரம்,குற்றியலுகரம் எனும்போது கால அளவைக் குறிக்கிறது. இவ்வாறு எந்த ஒன்றும் அளவில் சிறிதாகுவதை குறுகுதல்

எனலாம். நடைமுறையில் உள்ள பிற சொற்களைப் பார்க்கலாம்.

  • compact disc- குறுந்தகடு
  • short messaging service - குறுந்தகவல்
  • short term loan - குறுகிய காலக் கடன்
  • narrow minded - குறுகிய மனப்பான்மை

compact,short,narrow போன்ற பல ஆங்கிலச்சொற்களுக்கும் ‘குறு’-வை பயன்படுத்துகிறோம். எனவே micro என்பதற்கும் ‘குறு’-வையே பயன்படுத்தலாம். மாறாக, ‘சிறு’ என்பது பெரும்பாலும் small என்ற வார்த்தைக்கே பயன்படுத்தப் படுகிறது. உதாரணங்கள்

  • small savings- சிறுசேமிப்பு
  • small car - சிறிய கார்
  • small house- சிறிய வீடு.

மேலும் காரணப்பெயராகப் பார்த்தால்,சிறிய என்பது ஒன்றின் இயல்பில் சிறியதாக இருப்பதைக் குறிக்கிறது. ஆனால் குறுகிய என்பது ஒன்றின்

இயல்பிலிருந்து அளவில் சிறிதாக ஆவதைக் குறிக்கிறது. அப்படிப் பார்க்கையில் வழக்கமான நிதித்திட்டங்களிலிருந்து மாறுபட்டு குறுகிய அளவில்

நிதியைக்கொடுத்து வாங்கும்போது ‘குறுங்கடன்’,’குறு நிதிமேலாண்மை’ என்பன பொருத்தமாக இருப்பதாக நினைக்கிறேன்.

தேவைப்பட்டால் மேலும் விவாவதத்தை தொடர தயாராக இருக்கிறேன். Mageshsai

வணக்கம் Magashsai: நிச்சியமாக இந்த விடயத்தில் விவாத்தம் செய்யும் நோக்கம் துளியும் கிடையாது. கருத்துப் பரிமாற்றம் மட்டுமே. உங்களின் விளக்கம் வியக்க வைக்கிறது. நன்றி. குறுங்கடன் மிக்கப் பொருத்தமே. --Natkeeran 21:21, 23 ஜூன் 2009 (UTC)
நட்கீரன், விவாதம் என்பதை எதிர்மறைப் பொருளில் நான் சொல்லவில்லை :-). நன்றி.

இங்கு micro என்பதற்கு நேரிணையாக தமிழில் பயன்படுத்தப்படும் சொல் நுண் என்பது. எனினும் குறுமை என்பதே இங்கு மிகவும் பொருந்துவதாகப் படுகிறது. குறுமை என்பது சிறிதினும் சிறிதைக் குறிப்பதாக நான் உணர்கிறேன். மேலும் இணையத்தில் தேடியதில் (இது எல்லாச் சமயங்களிலும் சரியாக இருக்காதெனினும்) குறுங்கடன் என்பது வழக்கூன்றியிருப்பதாகவே (கூகுள் தேடல்: நுண்கடன் - 357, குறுங்கடன் - 9320, சிறுகடன் - 105) கொள்ளலாம்..

மேலும் குறு என்பதற்கு அகராதி தரும் பொருள், கீழே உள்ள இணைப்புகளில்.

http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81&searchhws=yes&table=fabricius

http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81&searchhws=yes&table=winslow.

--சிவக்குமார் \பேச்சு 12:14, 24 ஜூன் 2009 (UTC)

Start a discussion about குறுங்கடன்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குறுங்கடன்&oldid=395262" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குறுங்கடன்" page.