பேச்சு:குழியவுரு
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy in topic வழிமாற்றமும், வரலாறு நீக்கமும்
பேச்சுப் பக்க நீக்கம் வேண்டாம்
தொகுஇந்தப் பேச்சுப் பக்கத்தைத் தயவுசெய்து இப்போதைக்கு நீக்க வேண்டாம். நன்றி.--கலை (பேச்சு) 15:27, 4 சூன் 2018 (UTC)
தலைப்புமாற்றம் தேவை
தொகுஇந்தக் கட்டுரையின் தலைப்பை குழியவுரு என மாற்றக் கோருகிறேன். (உயிரணுக் கட்டுரையைப் பார்க்க.)--கலை (பேச்சு) 05:27, 12 சூலை 2017 (UTC)
- @Nan: நந்தகுமார்! நீங்கள் விரிவாக்கிய இயக்குநீர் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த உள்ளிணைப்பு மூலமே இந்தக் கட்டுரைக்கு வந்தேன். Cytoplasm மற்றும் cytosol க்கு தமிழ்நாட்டுப் பாடப்புத்தகங்களில் என்ன தமிழ்ச்சொல் கொடுக்கப்பட்டுள்ளது? எனக்கு குழியவுரு, முதலுரு என்று கற்றதாக நினைவு. சரியான தமிழ்ச்சொல்லைத் தேடி தலைப்பாக இட்டால் நன்று. --கலை (பேச்சு) 21:24, 12 சூலை 2017 (UTC)
கலக்கணிகம் (cyto-கலம், உயிர்க்கலம்; plasm-கணிகம்) எனத் தலைப்பை மாற்றவேண்டும். plasm, plast ஆகியவை கணிகம் எனவரும் நடைமுறை ஏற்கெனவே தரப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இதை மாற்றல் சரியல்ல. எனவே, இக்கட்டுரை வழிமாற்றுடன் கலக்கணிகம் என்ற தலைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:00, 25 ஏப்ரல் 2018 (UTC)
- @உலோ.செந்தமிழ்க்கோதை: வழிமாற்றியதற்கு நன்றி. முறையாக வழிமாற்றுவதற்கான குறியீட்டை இந்த மாற்றத்தைப் பார்த்து அறியலாம். நன்றி. --இரவி (பேச்சு) 13:25, 25 ஏப்ரல் 2018 (UTC)
இனி, இந்த வழிமுறையைப் பின்பற்ற முயல்கிறேன். நன்றிகளுடன், உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:30, 25 ஏப்ரல் 2018 (UTC)
வழிமாற்றமும், வரலாறு நீக்கமும்
தொகு- @Ravidreams: இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் அனைத்தும் நீக்கப்பட்டு, கலக்கணிகம் என்ற புதிய கட்டுரையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பின்னர் இந்தக் கட்டுரையில் ஒரு வழிமாற்று மட்டும் விட்டுச் செல்லப்பட்டுள்ளது. முறைப்படி கட்டுரைகள் ஒருங்கிணைக்கப்படாமையினால், குழியவுரு கட்டுரைக்குச் செய்யப்பட்ட பங்களிப்புகள் அனைத்தும், புதிய கட்டுரையின் வரலாற்றிலிருந்து முற்றாக நீக்கப்பட்டுள்ளது. அதனை மீள அமைக்க முடியுமா?--கலை (பேச்சு) 15:54, 4 சூன் 2018 (UTC)
- உங்களுக்கு எழுதிய பின்னர்தான் வரலாற்றுடன் கட்டுரைகளின் இணைப்பைச் செய்யலாமே என்று தோன்றியது. எனவே அவ்வாறு கட்டுரைகளை இணைத்து, வரலாற்றை மீட்டுள்ளேன். நன்றி.--கலை (பேச்சு) 15:54, 4 சூன் 2018 (UTC)
- @உலோ.செந்தமிழ்க்கோதை:! உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து, ஏனையோரின் பங்களிப்பை நீக்க வேண்டாம். மேலும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொற்களைப் பயன்படுத்தலாம். அந்தச் சொற்கள் தவறானவை எனக் கருதினால், பேச்சுப்பக்கத்தில் தெரிவித்து, உரையாடலின் பின்னர் மாற்றலாம். நன்றி. --கலை (பேச்சு) 15:15, 4 சூன் 2018 (UTC)