பேச்சு:கூகுள் மொழிபெயர்ப்பு


kanags... இந்த கூகுள்-மொழிப்பெயர்ப்பு மென்கலக்கருவியைப் பயன்படுத்திப் பார்த்தேன். மொழிபெயர்ப்பு ஆகவில்லை. காட்டாக budget என்ற கட்டுரையை மொழிபெயர்க்க கொடுத்தேன். ஆனால் ஆங்கிலத்திலேயேதான் வருகிறது. என்ன செய்வது?--Ragunathan 08:27, 28 ஆகஸ்ட் 2009 (UTC)

இந்த மொழிபெயர்ப்பு கருவியில் தற்போது நம்மால் முழுமையாக தமிழில் மொழிபெயர்ப்பு செய்தல் இயலாது . ஆனால் இது மொழிபெயர்ப்பு செய்வதற்கு மிகவும் துணை புரிவதாக உள்ளது . இதில் உள்ள சில நுட்பமான பயன்பாடுகளை கண்டு நான் கடந்த சில தினங்களாக வியந்து நிலையில் உள்ளேன் . நான் அறிந்த சில வற்றை சொல்கிறேன் . இதில் நீங்கள் ஒரு விக்கி பக்கத்தை அல்லது ஒரு படிமத்தை மேல் ஏற்றியவுடன் , அது மொழிபெயர்த்த அந்த பக்கத்தின் மேலே எத்தனை விழுக்காடு இந்த பக்கத்தை மொழிபெயர்த்து உள்ளது என்பதை குறிப்பிட்டு இருக்கும் . இந்த விழுக்காடு 10 அல்லது 10 க்கும் குறைவாகவே உள்ளதாக நீங்கள் கண்டறிந்திருப்பீர்கள் . இது ஏன் என்றால் தற்போது கூகிள் வைத்திருக்கும் அகராதியில் குறைவான தமிழ் சொற்களே உள்ளன . எனினும் நாம் இதை தொடர்ந்தது பயன் படுத்துவதினால் அவர்கள் அகராதியில் சொற்கள் கூடிக்கொண்டே போகும் . இவ்வொரு நாம் அனைவரும் இணைந்து செய்வதினாலே நாம் பிற்காலத்தில் அந்த விழுக்காடுகளை 80 அல்லது 80 க்கும் மேலே கொண்டு செல்ல முடியும் . ஆகையால் நாம் ஆங்கில பக்கத்தை மொழிபெயர்க்க இந்த கருவி மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் .

இதில் நாம் ஒரு technical term அந்த சொல் பக்கம் முழுவதும் பலமுறை ஒரே பொருளிலே பயன்படுத்துவதாக இருக்கும் பச்சத்தில் அதை Find and replace என்பதின் மூலம் மாற்றிவிடலாம் . இது edit என்பதற்குள் இருக்கும் . இதன் மூலம் நாம் மொழிபெயர்ப்பு விகிதத்தை சட்டென்று உயர்த்தி விடலாம் . மேலும் இதன் மூலம் ஒரு சொல்லை மட்டும் நாம் மொழிபெயர்ப்பு செய்வதால் இது கூகிள் அதிகாரிகளால் உடனடியாக கூகிள் அகராதியில் சேர்த்து விட மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் .

இதன் பிறகு நீங்கள் show toolkit என்ற menu வை சொடுக்கினால் , கீழே நான்கு tab இருக்கும் . அவை Translation Search Results , Computer Translation , Glossary (0) , Dictionary . இதில் dictionary என்பது கூகிள் அகராதி . glossary என்பது நம் அகராதி . இதன் மூலம் நாம் மொழிபெயர்க்கும் பக்கத்துக்கு தகுந்த சொற்களை நாம் தேர்ந்து எடுக்க மிகவும் பயன்படும் . இதன் மூலம் மொழிபெயர்க்கும் பொழுது சொற்கள் நமக்கு தடையாக நிற்காது . எனினும் இந்த அகராதியை நாம் தான் உருவாக்க வேண்டும் . இதை நாம் google documents இல் உள்ள spreadsheet என்றதில் புதிய அகராதியை உருவாக்கி அதை .csv என்ற கோப்பையாக மாற்றி மொழிபெயர்ப்பு கருவியில் சேர்த்துவிடலாம் . .csv file எப்படி இருக்க வேண்டும் என்பதை [இதில்|http://translate.google.com/support/toolkit/bin/answer.py?hl=en&answer=147854] பார்க்கலாம் . இதைப்பற்றி இன்னும் விளக்கம் கொடுக்க படும் .-- --இராஜ்குமார்

நன்றி ராஜ்குமார். ஆனால் விகிற்றான்சு பங்களித்த கட்டுரையில் அண்டம் உள்ளிட்டவை முழுமையாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதே ஆங்கில கட்டுரையை மீண்டும் மொழிபெயர்த்தால் முழுமையாக வருகிறது. அதிலும் கலைச்சொற்கள் உள்ளன. ஆனால் நான் குறிப்பிடும் கட்டுரையில் எளிய சொற்களே உள்ளன. காட்டாக poverty என்ற கட்டுரை.இதில் வறுமை என்ற சொல்லைத் தவிர மற்ற எதுவும் வரவில்லை. இது ஏன் என்று தெரியவில்லை. --Ragunathan 12:38, 28 ஆகஸ்ட் 2009 (UTC)

நீங்கள் ஒருமுறை ஒரு பக்கத்தை மொழிபெயர்த்தால் அந்த பக்கம் அப்படியே google database இல் பதிவாகிவிடும் . மறுபடியும் அந்த பக்கத்தை யார் மொழிபெயர்க்க முயன்றாலும் நீங்கள் மொழிபெயர்த்த நிலையிலேயே இருக்கும் . பிறகு உங்கள் மொழிபெயர்ப்பை வேறொருவர் மாற்றி அமைத்தால் அவர் விட்டு சென்ற நிலையிலேயே இருக்கும் . ஒவ்வொரு வரியையும் தனி தனியாகவே நாம் மொழிப்பெயர்ப்பதால் , அதே வரி வேறு கட்டுரையில் வந்திதிருந்தால் அதுவும் மொழிபெயர்க்க கூடும் . இதை பயன் படுத்திய பிறகு தாங்களாகவே இதன் நுட்பங்களை உணர்வீர்கள் .

நீங்கள் மொழிபெயர்த்த பிறகு அதை wikipedia வில் சேர்க்க share என்பதில் உள்ள publish to source page என்ற மெனுவை சொடுக்கினால் போதும் அது wiki கு சென்றுவிடும் . பிறகு நீங்கள் அங்கிருந்து சில வற்றை மாற்றிக்கொள்ளலாம் -- இராஜ்குமார்

Start a discussion about கூகுள் மொழிபெயர்ப்பு

Start a discussion
Return to "கூகுள் மொழிபெயர்ப்பு" page.