பேச்சு:கூட்டெரு
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy
உதவி: கூட்டுரம் என்பது சரியா என அலசுக. Compostற்கு சரியானத் தலைப்பு தொழு உரமாகும். மேலும், இக்கட்டுரையில் குறிப்பிட்ட செய்தி தொழு உரத்தில் ஒரு பகுதியாகும். இது மாற்றியமைக்கலாமா என உரையாடுக. நன்றிகளுடன். --சிங்கமுகன் 16:13, 14 மார்ச் 2011 (UTC)
- சிங்கமுகன் கூறியுள்ளபடி இந்தத் தலைப்பு இந்தக் கட்டுரைக்கு பொருத்தமற்றதெனவே எனக்கும் தோன்றுகின்றது. கூட்டு உரம்/கூட்டுரம் என்பது Compound fertilizer (NPK compound fertilizer or NK compound fertilizer) க்கே பொருத்தமான தலைப்பாக இருக்கும் என நினைக்கின்றேன். எனவே தலைப்பு மாற்றப்பட வேண்டும். மக்கிய உரம் என்பதும் ஒரு பொருத்தமான தலைப்பாக இருக்கலாம். சேதன உரம் (organic manure) என்பதும் பொருத்தமான தலைப்பா என யோசிக்கலாம். --கலை 15:57, 4 நவம்பர் 2011 (UTC)
இலங்கைப் பள்ளிக்கூடங்களின் ஏழாம் தரத்துக்கான விஞ்ஞானப் பாடநூலில் இதனைக் கூட்டெரு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கூட்டுரம் என்பதை மாற்றத் தேவையில்லை.--பாஹிம் 13:42, 6 நவம்பர் 2011 (UTC)
- அப்படியானால், Compound fertilizer ஐ எப்படி அழைப்பது?--கலை 15:22, 7 நவம்பர் 2011 (UTC)
இலங்கையில் கூட்டெரு என்ற சொல்லே பயன்படுத்தப்படுகின்றது. Compound Fertilizer என்பதற்கான தமிழ்ச் சொல்லே கூட்டுரம் ஆகும். இங்கே பார்க்க. ஆகவே, தலைப்பைக் கூட்டெரு என மாற்றக் கோருகின்றேன். --மதனாஹரன் (பேச்சு) 04:43, 10 மார்ச் 2012 (UTC)
- மதனாஹரன் கூறியுள்ளதுபோல், இந்தக் கட்டுரையை (Compost) கூட்டெரு என மாற்றிவிட்டு, Compound fertilizer என்பதற்கான கட்டுரையை கூட்டுரம் என அழைக்கலாம்.--கலை (பேச்சு) 21:14, 4 ஆகத்து 2013 (UTC)