பேச்சு:கெர்ரிமாண்டரிங்

இது தமிழ்ப்பெயரோ தமிழ்நிலக் கருத்தாக்கமோ இல்லாத காரணத்தால் இக்கட்டுரை தேவையா என்ற கேள்வி எழுகிறது. வேண்டுமானால் எல்லைத்திருட்டு (எல்லையை மாற்றித் திருடுதல்), எல்லைமாற்றுத்திருட்டு என்பது போன்ற ஒரு தமிழ்ப்பெயர் வைத்துவிட்டு, கட்டுரைக்குள்ளே 'கெர்ரிமாண்டரிங்கு' என அமெரிக்க நிலத்தில் வழங்குவதைக் குறிப்பிடலாம். --இரா. செல்வராசு (பேச்சு) 03:43, 12 ஏப்ரல் 2017 (UTC)

இக்கட்டுரை அவசியம் இருக்க வேண்டியதொன்றே. அமெரிக்கத் தேர்தல் முறை என்பது மிகவும் சிக்கலானது. அது குறித்த தெளிவான கட்டுரைகள் இல்லை. ஆனால், தலைப்பு மாற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடே. முதலில் Gerrymandering என்பது ஜெரிமாண்டரிங் என்றே உச்சரிக்கப்படுகிறது. செரிமாண்டரிங்கு என எழுதலாம். ஆங்கிலத்தில் இரண்டு rr கள் இருப்பதால், கட்டாயம் தமிழில் ர்ரி என எழுத வேண்டும் என்ற அவசியமில்லை.--Kanags \உரையாடுக 08:12, 12 ஏப்ரல் 2017 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:42, 12 ஏப்ரல் 2017 (UTC)

உச்சரிப்பு முதலில் கெரிமாண்டரிங்கு என்பது தான். அதன் பிறகு காலப்போக்கில் அது செரிமாண்டரிங்கு ஆகிவிட்டது. ஆங்கில விக்கியிலும் இதுபற்றிய குறிப்பைக் காணலாம் - "Since the letter g of the eponymous Gerry is pronounced /ɡ/ as in go, the word gerrymander was originally pronounced /ˈɡɛrimændər/. However, pronunciation as /ˈdʒɛrimændər/, with a /dʒ/ as in gentle, has become the accepted pronunciation." --இரா. செல்வராசு (பேச்சு) 04:04, 13 ஏப்ரல் 2017 (UTC)

@Rselvaraj: 👍 விருப்பம்
எப்படியிருந்தாலும், அது தற்போது ஜெரிமான்டரிங் என்று தானே சொல்லப்படுகிறது. ஏனைய மொழி விக்கிகளிலும் அவ்வாறே தலைப்பிடப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 05:19, 13 ஏப்ரல் 2017 (UTC)
நீங்கள் சொல்வது சரியே. நான் தகவலுக்காகத் தான் குறிப்பிட்டேன். ஏற்கனவே நீங்கள் தலைப்பு தமிழில் இருக்க உடன்பட்டிருந்தீர்கள். அதுபற்றிப் பிறரும் கருத்துகள் சொன்னால் நலமே. காட்டாக, fracking என்பதை பிரேக்கிங் என்று தலைப்பு வைத்து எழுதமாட்டோம் தானே? --இரா. செல்வராசு (பேச்சு) 05:07, 14 ஏப்ரல் 2017 (UTC)
இதற்கு தமிழ்ப்பெயர் வைக்கலாமா அல்லது வழக்கிலுள்ள "செரிமாண்டரிங்கு" என்ற சொல்லையே வைக்கலாமா? ஆனாலும், செரிமாண்டர் என்ற சொல் மாசச்சூசெட்சு ஆளுநர் எல்பிறிட்ச் கெரி என்பவரின் பெயரில் இருந்து தோன்றியது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.@செல்வா and Kurumban:--Kanags \உரையாடுக 05:50, 14 ஏப்ரல் 2017 (UTC)
இப்போதைக்கு என் சுருக்கமான கருத்து "செரிமாண்டரிங்கு" என்ற சொல்லையே வைக்கலாம். ஏனெனில் அது ஒருவரின் பெயரால் குறிக்கப்பெறுமொன்று. -ர்ரி- எனத் தமிழில் வருதல் கூடாது. --செல்வா (பேச்சு) 06:41, 14 ஏப்ரல் 2017 (UTC)

Start a discussion about கெர்ரிமாண்டரிங்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கெர்ரிமாண்டரிங்&oldid=3963060" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கெர்ரிமாண்டரிங்" page.