பேச்சு:கே. எஸ். பாலச்சந்திரன்
அண்ணை றைற் - இதை எப்படி உச்சரிப்பது? என்ன பொருள்? அண்ணை என்றால் அண்ணாவா? எவராவது விளக்கினால் நன்று. இது குறித்த பல வலைப்பதிவுக் கட்டுரைகளை காண ஆர்வ மிகுதியாக உள்ளது. நன்றி--ரவி 14:46, 17 மார்ச் 2007 (UTC)
அண்ணை என்றால் இலங்கைப் பேச்சு வழக்கில் அண்ணா என்று அர்த்தம்.--நிரோஜன் சக்திவேல் 14:55, 17 மார்ச் 2007 (UTC)
அண்ணை றைற் என்பதை "அண்ண right" என உச்சரிக்க வேண்டும். பேருந்து நடத்துநர், ஓட்டுநரிடம், "சரி புறப்படலாம்" என்பதைச் சொல்கிறார் - "அண்ணே (ரை)..ரைட்". (இலங்கையில் ரகரம் சில சமயங்களில் உச்சரிக்கையில் றகரமாகும்.) - காயத்திரி 15:15, 17 மார்ச் 2007 (UTC)
ஓ..நீங்கள் context உடன் விளக்கியது புரிந்தது. நன்றி--ரவி 15:19, 17 மார்ச் 2007 (UTC)
- நல்ல எழுத்தாளர். இவருடைய நேற்றுப் போல இருக்கிறது மிகவும் நல்ல புத்தகம். நான் உத்தரவாதம்.......--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 05:31, 27 பெப்ரவரி 2014 (UTC)
சுவையான தகவல்
தொகுஒரே காலத்தில், ஒரே பெயரில் இரு கலைஞர்கள் அதுவும் ஒரே இடத்தில் இருப்பது சிக்கல்களைத் தரக்கூடியது. அந்த சிக்கல்களுக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கலைஞர்களும், இலங்கை வானொலியின் நேயர்களும் ஆளாகும் வகையில் கே. எஸ். பாலச்சந்திரனும் மெல்லிசைப் பாடகர் கே.எஸ்.பாலச்சந்திரனும் இருந்தார்கள். நாடு போற்ற வாழ்க படத்தில் இருவருமே பங்களித்து இருந்தமையால் மெல்லிசைப்பாடகரை சுண்டிக்குளி பாலச்சந்திரன் என அடையாளப்படுத்தியிருந்தனர்.