பேச்சு:கைத்தொழில்
குறிப்புகள்
தொகு- உயர் முதலீடு
- உயர் தொழில்நுட்ப
- பெரு உற்பத்தி முறைகள்
--Natkeeran 22:29, 3 ஜூலை 2008 (UTC)
குறிப்பு 2
தொகுசலவை செய்யும் தொழில், மிதியடி தைப்பு தொழில், ஊர் ஊராய் சென்று ஈயம் பூசுறது போன்ற தொழில் (நான் நகர் தொழில் என்று பரிந்துரைக்கிறேன்), ஆட்டுக்கல்லு செய்வது, பானை செய்தல், செங்கல் சோலை, சுண்ணாம்பு செய்வது, மாட்டு லாடம் கட்டுறது போன்ற பல தொழில்களுக்கெல்லாம் நல்ல அழகான கட்டுரை தலைப்பு என்ன வைக்கலாம் என்று பரிந்துரைக்க வேண்டுகிறேன். ஏன் இதை கேட்கிறேனா? நான் ஒரு தலைப்பில் தொகுத்த பின் மாற்றுவதற்கு பதில் தெளிவான முடிவெடுத்து பிறகு தொகுக்கலாம் என்று நினைக்கிறேன். இவையெல்லாவற்றுக்கும் தலைப்பு கிடைத்து விட்டால் ஓராண்டிற்கு பிரச்சனையே இல்லை . -- இராஜ்குமார் 12:13, 7 ஏப்ரல் 2010 (UTC)
- கைத்தொழில்கள் என்று ஒரு சொல் உண்டு அது கைவினைத் தொழில்களைக் குறிக்கும். சிறுதொழில்கள் என்றும் ஒரு சொல் உள்ளது. சலவைத்தொழில், மிதியடித் தொழில், ஈயப்பூச்சுத் தொழில், பொளிதல் (அம்மி, ஆட்டுக்கல் பொளிவது), கற்தச்சுத் தொழில் (கல் தச்சன் செய்யும் தொழில்), செங்கல் சூளை வைப்பதைச் சூளைத் தொழில் எனலாம் (சுள்-> சூள்->சுடுவது சூளை சுள்ளிக் குச்சி, சுள்ளாப்பு = வெப்பம், சுள்ளை = சூளை. காளவாய் = சூளை. தமிழில் ள்-ண்-ட் என்று மாறும்). பானை செய்வதைப் பானை வனைதல் என்பர். சுண்ணாம்புக் காளவாய்த் தொழில். மாட்டுக்கு இலாடம் கட்டுதலை, இலாடம் அடித்தல் எனலாம் (தேய்மானத்தைக் குறைக்க மாடுகளுக்கு இரும்பினால் செய்த வளையத்தை குளம்பில் பொருத்துவது - இருப்படி பொருத்துவது). தனித் தலைப்புகளைப் பட்டியலாக இடுங்கள், பின்னர் மற்றவர்கள் பரிந்துரைகள் தரட்டும்.--செல்வா 13:28, 7 ஏப்ரல் 2010 (UTC)
நன்றி . திரு.செல்வா. தாங்கள் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறீர்கள் . மீண்டும் நன்றி. ஆம் . பட்டியல் போடவேண்டும். --இராஜ்குமார் 04:14, 8 ஏப்ரல் 2010 (UTC)
- கைத்தொழில் உற்பத்திகள்
- சலவைத்தொழில் (இதை எப்படி கைத்தொழில் என்று சொல்வது? கைத்தொழில் என்றால் என்ன என்பதில் உங்களுக்கு ஒரு குழப்பம் இருப்பது போல தோன்றுகிறது. அண்ணாமலை (பேச்சு) 10:42, 10 திசம்பர் 2013 (UTC))
- மிதியடி தைப்புத்தொழில் , மிதியடித் தொழில்
- ஈயப்பூச்சுத் தொழில்
- கற்தச்சுத் தொழில்
- செங்கல் சூளை , சூளைத் தொழில்
- பானை வனை தொழில்
- சுண்ணாம்புக் காளவாய்த் தொழில்
- இலாடம் அடிதொழில்
பரிந்துரைகள் மேலேயே செய்யுங்கள் . வேறு தொழில்களும் சேருங்கள் . -- இராஜ்குமார் 10:29, 8 ஏப்ரல் 2010 (UTC)
புகைப்படம்
தொகுகைத்தொழில் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களின் புகைப்படம் ஏதாவது இருந்தால் இப்பக்கத்தில் இணைக்கலாம் என்று நினைக்கிறேன். அண்ணாமலை (பேச்சு) 10:28, 10 திசம்பர் 2013 (UTC)
தேனீ வளர்ப்பு
தொகுஇது ஒரு கைத்தொழிலா? இல்லை என்று நினைக்கிறேன். நீக்கவேண்டும் என்று நம்புகிறேன். யாராவது இதை உறுதிபடுத்துங்கள். அண்ணாமலை (பேச்சு) 10:35, 10 திசம்பர் 2013 (UTC)