பேச்சு:கொங்கு வட்டார வழக்கு அகராதி
1. வங்கு - பொந்து, சந்து
2. கம்மனாட்டி - முட்டாள், மடையன்
3. உருமாளை - தலைப்பாகை
4. சிம்மாடு - தலைப்பாகை.தலைப்பாகையில் இருந்து சற்று வேறுபட்டது. ஏதேனும் பொருளை தலையில் சுமக்கும் போது நழுவி விடாமல் இருப்பதற்காக துணியைச் சுற்றி வைப்பது.
5. கருப்பு - கருமாதி(ஈமச்சடங்கு)
6. அவுசாரி - விபச்சாரி
7. கட்டுக்கொலை - தன் சாதியைச் சார்ந்த நிகழ்வுகளில் பங்கு பெறும் மற்ற சாதிகள்.உதாரணமாக, கவுண்டர் இனத்தைச் சார்ந்தவர்கள் நாவிதர்கள், குயவர்கள் போன்றவர்களை கட்டுக்கொலைக்காரர்கள் என்பார்கள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள்(சக்கிலியர், பறையர்)
8. ஓரியாட்டம் -சண்டைசொற்றொடர்: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.
9. மிஞ்சி - மெட்டி
10. பொல்லி - பொய்.
11. அக்கட்ட - அந்தப் பக்கம்.அடுப்புக்கிட்ட நிக்காத. தீ மூஞ்சிலையே அடிக்குது. அக்கட்ட போடா.
12. இக்கட்ட - இந்தப் பக்கம்.இந்த வேச காலத்துல அக்கட்ட இக்கட்ட நகர முடியல.
13. வேச காலம் - கோடை காலம்
14. ராவுடி - டார்ச்சர்அந்தப் பையன் செம ராவுடி புடிச்சவன்.
15. ராங்கு - தவறாக நடத்தல்.ஏண்டா போலீஸ்காரங்கிட்ட ராங்கு பண்ணுனா அப்பாம என்ன முத்தமா கொடுப்பான்?
16. அப்பு - அறை.அவள ஓங்கி ஒரு அப்பு அப்புடா. மொகற கட்ட பேந்து போற மாதிரி.
17. மொகற கட்ட - முகம்
18. செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி
19. அக்கப்போரு - அட்டகாசம் இந்த பிலாக் எழுதறவிய அக்கப்போரு தாங்க முடியலைடா. :)
20. பொடனி - தலையின் பின்புறம்
21. முசுவு - கவனமாக/ குறிக்கோளுடன்குடுத்த வேலைய ஒரே முசுவுல செஞ்சு முடிச்சாதான் உங்கப்பனுக்கு தூக்கமே வரும்.
22. வல்லம் - மூன்று அல்லது நாலு படி அளப்பதற்கான அளவை. (கிட்டத்தட்ட 3.5 கிலோகிராம் வரும்)
23. அலும்பு - அலம்பல்.
24. அரமாலும் - ரொம்பவும். அரமாலும் அலும்பு பண்ணுறாடா அவ.
25. திலுப்பாமாரி - மேனா மினுக்கி
26. அட்டாரி - பரண்.
27. புழுதண்ணி - இரவில் மீதியான சோற்றில் நீர் ஊற்றி வைப்பார்கள். விடிந்த பின் அந்த நீர் புழுதண்ணி.
28. மக்காநாளு - அடுத்த நாள்
29. சீராட்டு - கோபம்.கட்டிக் கொடுத்து மூணுமாசம் கூட ஆகுல. அதுக்குள்ள புள்ள சீராடிட்டு வந்துடுச்சு.
30. அன்னாடும்- தினமும்
31. பால்டாயில் - பாலிடால் என்ற விவசாய பூச்சிக் கொல்லி.
32. ஒரு ஒலவு(உழவு) மல - ('ழ'கர உச்சரிப்பு இருக்காது)மழை பெய்யும் அளவை குறிப்பது.ஆட்டுக்கல் அல்லது உரலில் இருக்கும் குழி நிரம்பினால் ஒரு உழவிற்குத் தேவையான அளவு மழை பெய்திருக்கிறது என்று அனுமானம் செய்து கொள்வார்கள்.
33.அகராதி புடிச்சவன் - விதண்டாவாதம்/குறும்பு பிடித்தவன்.
வீடு அதன் சுற்றுப்புறம் சார்ந்த சொற்கள் :
1 இட்டாரி(லி) - இட்டேறி வழித்தடம் , சிறிய பாதை , கிளைத்தடம்
2 நடவை - கதவு
3 சீமாறு, சீவமாரு, சீவக்கட்டை - விளக்குமாறு
4 ஈக்குமாறு - விளக்குமாறு , தென்னைமர குச்சியில் செய்தது (வீட்டுக்கு வெளியில் கூட்ட , பெருக்க பயன்படும்)
5 தொறப்புக்குச்சி - சாவி , திறவுகோல்
6 தொற - திற
7 தொரை - பெரிய துரை இவரு. (அதாவது ஒருவர் செய்யமுடியாத செயலைச் செய்ய எத்தனிக்கும் போது, விளிக்கப் பயன்படும் சொல்.)
8 எரவாரம் - ஓட்டு வீடுகளில் திண்ணைக்கு மேல் கைக்கைட்டும் இடத்தில் அகப்படும் இடுக்கு, தாள்வாரம்
9 தாவாரம் - தாழ்வாரம்
10 நீக்கு, கதவ நீக்கு – கதவைத் திற
11 அட்டாலி , அட்டாரி - பரண்
12 போசி - சிறிய (அ) அளவான பாத்திரங்கள்
13 சால் , அண்டா, சருவம் - தண்ணீர் ஊற்றி வைக்கப் பயன்படும் பாத்திரம்
14 ஒலக்கை - உலக்கை
15 மூலை ஓரம் , இடுக்கு
16 கண்டரை- அடுக்கு
17 சலந்தாரை , சலவாரை , சலந்தாரி - தண்ணீர் செல்லும் பாதை
18 வள்ளம் , வல்லம் , படி - அளக்கப் பயன்படுவது . சிலசமயங்களில் ‘படி’ – வெண்கலத்தால் ஆனது , எச்சில் துப்பவும் பயன்படும்.
19 நெலவு - வாசற்படி கதவு
20 பொடக்காலி - வீட்டின் பின்புறம் , குளிக்குமிடம்
21 தேகுசா , தேவுசா - பாத்திரம்
22 தயிர் சிலுப்புதல் - தயிர் கடைந்து வெண்ணை எடுத்தல்
23 மத்து - ஒரு வகைக் கரண்டி , கடைவதற்குப் பயன்படுவது
24 பராத்து - மிகப் பெரிய தட்டு
25 வட்டல் - சாப்பிடும் தட்டு
26 அன்னவாரி - சாதம் அள்ளிப்போட உதவும் கரண்டி , அன்னக்கரண்டி
27 முக்கு - முனை , திருப்பம்
28 ஓல்லு - நெல் , கம்பு குத்த பயன்படும் ஒருவகையான செக்கு
28 ஓர் ஒளவு - ஓர் உழவு (பெய்த மழையைக் குறிக்கும் சொல் )
29 சால்பரி - கோழிகளை மூடி வைக்கப் பயன்படுவது , தண்ணீர் இறைக்கவும் பயன்பட்டது
30 நடவை - கதவு
31 லாந்தர் - அரிக்கேன் விளக்கு Lantern என்பது மருவி வந்து இருக்கலாம்
32 துப்புட்டு - போர்வை
33 தலவாணி - தலையணை
34 கால்மாடு - கால் வைக்கும் பகுதி
35 களம் - வாசல்
விவசாயம் சார்ந்த சொற்கள்
தொகு1 மக்கிலி (மக்கிரி ) - பெரிய கூடை
2 கலப்பை - ஏர்
3 கொலுவு - ஏர் முனை , கூரான ஆயுதம்
4 மம்முட்டி , மம்பட்டி - மண்வெட்டி
5 கொத்து - சிறிய மண்வெட்டி
6 மொளக்குச்சி - ஆடு மாடுகளைக் கட்ட நிலத்தில் அடிக்கும் மரத்துண்டு
7 சாளை இரு வேறு பொருள் – வீட்டுக்கு வெளியில் தனியாக இருக்கும் சிறிய இடம்
8 கட்டுத்தரை - மாடு கன்றுகளை கட்டி வைக்கும் தொழுவம்
9 கொடாப்பு - பிறந்த மாட்டின் இளங்கன்றுகளை அடைத்து வைக்கப் பயன்படும் சிறிய ஓலை குடிசை
10 அண்ணாங்கால் - மாட்டின் வேகத்தை மட்டுப்படுத்த ஒரு கயிறை கழுத்தில் இருந்து காலோடு சேர்த்தி கட்டி விடுதல்
11 பால் கறத்தல் - பால் பீய்ச்சுதல்
12 உருவாஞ்சுருக்கு - ஆடு மாடுகளை காட்டும் போதும் இலகுவாக அவிழ்க்கும் படியும் , அதே சமயம் கழண்டு விடாதபடியும் போடப்படும் முடிச்சு
13 அண்ணாங்கயிறு - பால் கறக்கும் போது மாட்டின் கால்களைச் சேர்த்துக் கட்டும் கயிறு
14 பட்டி - ஆடுகளை அடைத்து வைக்குமிடம்
15 தொண்டுப்பட்டி - மாடு , கன்றுகள் இருக்குமிடம்
16 அணைதல் - மாலை நேரத்தில் கோழிகள் தூங்கச் செல்லுவதைக் குறித்தல்
17 கிடாரி - இளம் பெண் மாடு (கன்று ஈனுவதற்கு முன் )young
18 காளைக்குத் திரியுது, நசியம் , பயிராவுதல் - மாடுகள் கர்ப்பமாகுதல்
19 கடவு , கடவுப்படல் - தட்டி
20 தடுக்கு - தென்னை ஓலையில் செய்யப்படும் பாய்
21 பாவை - பாய்
22 மசை பிடித்தல் - வெறி பிடித்தல்
23 தட்டக்கூடை - கொஞ்சம் பெரிய அளவிலான வாய் அகன்ற கூடை
24 செம்பிலியாடு - நாட்டு ஆடு
25 வால்கவுறு கவுறு – கயிறு . மஞ்சியினால் திரித்த கயிறு
26 மஞ்சி - தென்னை மட்டையில் திரித்தது
27 கவலை(ளை)யோட்டுதல் - மின்சாரம் வருவதற்கு முன்பு தண்ணீர் இறைக்கப் பயன்பட்டது
28 சேந்துதல் - இறைத்தல்
29 தரம்பு கட்டுதல் - கிளுவை நொச்சிக் கட்டைகளை வைத்துக் கட்டப்படும் படல்
30 மாறு - பொதுவாக குச்சியைக் குறிக்கும் சொல்
31 பரம்பு ஓட்டுதல் - பொதுவாக ஆற்றில் ஊத்து வெட்டி தண்ணீர் எடுப்பவர்கள் , ஆற்றில் நீர் ஓடி ஊற்றை சமன் செய்துவிட்டுப் போனபிறகு மீண்டும் மண்ணைத் தோண்டி ஊற்றாக மாற்றுவர். அந்த செய்கைக்குப் பெயர் ‘பரம்போட்டுதல்'
32 மொறம் - முறம்
33 கருக்கருவாள் - பொதுவாக சிறிய இலை , தழைகளை அறுக்கப் பயன்படுவது
34 கொடுவாள் - அரிவாள்
35 களத்துமேடு - வீட்டை விட்டு தனியாக இருக்கும் வாசல். பயிர் வகைகளை பிரித்தெடுக்கப் பயன்படுவது. சேமிப்புக்கும் உதவும்.
36 பாம்பேரி - கிணறு வெட்டியதில் இருந்து வெளிவந்த மண் அருகிலேயே ஏரி போல குவித்து வைக்கப்பட்டு மேடாக மாறி இருக்கும்
37 நப்பு - வற்றிக்கிடந்த கிணறு , நீரோட்டம் பெற்று ஊற ஆரம்பித்தால் , அருகில் ஏதாவது நீரோட்டம் ,நீர்த்தேக்கம் இருப்பின் அந்த நப்பு (தாக்கம்?) இங்க அடிச்சுடுச்சு என்பார்கள்
38 ஆத்துப் பாசனம் , கிணத்துப் பாசனம் முறையே விவசாயத்துக்கு நீர் எங்கிருந்து வருகிறது என்பதைக் குறிக்கும்
39 இடால் , கண்ணி இரண்டும் மிருகங்களைப் பிடிக்க வைக்கப்படும் பொறி .
40 பெருக்கான் - பெருச்சாளி
41 ஓடைக்காய் - ஓணான்
42 நஞ்சு - பெரும்பாலும் விஷம் என்ற பொருள்தான் . ஆனால் , ஆடு மாடுகள் குட்டி /கன்று ஈன்ற பிறகு வெளிவரும் தொப்புள் கொடியைக் குறிக்கும்
43 பாத்தி கட்டுதல் - மண்ணை நடவு நாடா , தண்ணீர் பாய சீராக்குதல்
44 முருங்க்கா பொறிக்கிறாங்க - முருங்கை பறித்தல்
45 தண்ணி வெட்டி உடுறாங்க வயல்களுக்கு - நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல்
46 வெள்ளாம, பண்ணாமை வெள்ளாமை – விவசாயம்
47 முட்டுவழி - முதலீடு, முதல் ஒரு பயிர் விளைவிக்க ஆகும் மொத்த செலவு
48 மேட்டாங்காடு - வானம் பார்த்த பூமி
49 தாளி - ஆடு மாடுகள் தண்ணீர் குடிக்க உதவும்
50 போர் போடுதல் - விளைந்த கொடி , தட்டுகள் , இலை தழைகள் அனைத்தையும் சேமித்து வைக்கப் போடும் அரண்
51 தோட்டத்துல இருக்காங்க - பொதுவாக ஊருக்குள் குடியிருக்காமல் விவசாயம் செய்யும் நிலத்திலேயே வீடு கட்டி வாழ்வோரைக் குறிப்பது
52 கந்தாயம் , போக்கியம் , கிரயம் நிலத்தை விற்றல் /வாடகைக்கு விடுதல் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள்
53 பண்ணை - நீர் சேமித்து வைக்கும் தொட்டி
54 பண்ணையம் - நில உடைமைகள்
55 ரீப்பர் - வீடு கட்டப் பயன்படும் ஒரு வகைக் கட்டை/தப்பை
56 கடைமடை , கடக்கோடு - இறுதி/கடைசி
57 சும்மாடு - தலைப்பாகை
58 சுழி - மாட்டுக் கன்றுகளுக்கு தலையில் இருக்கும் முடி
59 குறுக்குச்சால் - பொதுவாக எந்தச் செயலையும் நன்றாக நடக்க விடாமல் கெடுத்து விடுவது .
60 கவண் - குருவிகளை விரட்டப் பயன்படுவது . கயிற்றில் செய்யப்பட்ட நடுவில் ஒரு கல் வைத்து வீசுமளவுக்கு அகலம் உள்ளவாறு அமைக்கப்பட்டது
61 பாங்கிணறு - தூர்வாரப் படாமல் தூர்ந்து போய்க் கிடைக்கும் பழைய கிணறு.
62 ஒடுக்கு - பனையோலையை வைத்து சாப்பிட பின்னப்படும் . ஒடுக்கஞ்சோறு என்று ஒரு பதமும் உண்டு.
63 கூமாச்சி - கூர்மையான பகுதி
64 பாட்டாளி - உழைப்பாளி
65 தொக்கடா - குறுக்குவழி
66 வெள்ளத்தாரை - நீர் போகும் பாதை
67 கிட்டி - வேலி தாண்டிப் போகும் ஆடுகளுக்கு கழுத்தில் கட்டி விடப்படும் ஒரு தப்பட்டை
உணவு சார்ந்த சொற்கள்
தொகு1 வனக்குதல் - தாளித்தல் 2 மொளவாட்டி கொழம்பு வைத்தல் - தேங்காய் , கொத்தமல்லி சேர்த்து விழுதாக அரைத்து விட்டு குழம்பு வைத்தல்
3 சீடை - அரிசி மாவால் செய்யப்படும் சிறிய சிறிய உருண்டைகளான இனிப்பு
4 தெலுவு பனை - தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் பதநீர்
5 பானக்கம் - கருப்பட்டி கலந்து செய்யப்படும் இனிப்பு நீர்
6 கல்லக்காய் - வேர்க்கடலை
7 பொவியிலை - புகையிலை
8 குச்சிக்கிழங்கு - மரவள்ளிக்கிழங்கு
9 சீம்பு - மாடுகள் கன்று ஈன்ற பிறகு மூன்று நாட்களுக்கு கெட்டியாக வரும் பாலில் இருந்து செய்யப்படும் இனிப்பு. உப்பும் சேர்க்கலாம்
10 கண்டிக்கிழங்கு - சக்கரைவள்ளிக்கிழங்கு(?)
11 சுக்கு காபி - சுக்கு, கொத்தமல்லி ஆகிவற்றை பொடி செய்து சுடுநீரில் சர்க்கரை கலந்து செய்யப்படும்.
12 அஸ்கா - வெள்ளை சர்க்கரை
13 கரும்புச் சக்கரை - வெல்லத்தை உடைத்துச் செய்யப்படும் சர்க்கரை /ஜாஃகிரி
14 புளி தண்ணி - கம்பு சோற்றில் மீதமுள்ள தண்ணீரில் உப்பிட்டு குடிப்பர்
15 கம்மஞ்சோறு - கம்பு சோறு
16 அம்புலி - சோளச்சோறு
17 பழைய சோறு - பொதுவாக காலையில் வயல் வேலைக்குச் செல்வோர் , அதிகாலையில் காலை உணவுக்கு முன்ன இரவு மீந்த சாப்பாட்டில் தண்ணீரோ , மோரோ கலந்து சாப்பிட்டுவிட்டு செல்லுவர். அது ‘பழைய சோறானது’
18 கச்சாயம் - அதிரசம்
19 ஒப்பிட்டு - போளி
20 ஓனவா , ஒனத்தியா - வக்கனையா, நாக்கிற்கு ருசியாக
21 சீப்பை - பனங்கொட்டைகளை மண்ணில் புதைத்து வைத்து குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு , வெளியில் எடுத்தால் நடுவில் வெள்ளையாக இனிப்பானதாக நுங்கு மாறியிருக்கும்
22 பனங்கிழங்கு - பனங்கொட்டைகளை மண்ணில் புதைத்து வைத்து வளரவிட்டு கிழங்கை எடுத்து உப்புப் போட்டு வேக வைத்து சாப்பிடுவது
23 கோசக்காய் - தர்பூசணி
24 நவாப்பழம் - நாவல்பழம்
25 சந்தவை - இடியாப்பம்
26 கொள்ளுப்பருப்பு , கொள்ளு ரசம் - கொள் பயிரை வைத்து செய்யப்படும் துவையல் , ரசம்
27 பருப்புச் சாப்பாடு - அரிசி , பருப்பு சாதம்
28 வெள்ளாங்பூண்டு - வெள்ளை பூண்டு
28 சீமெண்ணை - மண்ணெண்ணெய்
29 சுண்டப்பருப்பு - முந்தைய நாள் வைத்த பருப்பை , இரண்டு அல்லது ஒரு நாள் கழித்தோ மீந்து போனால் , அடுப்பில் நன்றாக சுண்ட வைத்து சாதத்துக்குப் பிசைந்து சாப்பிடுவர்
30 ஊனு - சாப்பிட்ட தட்டில் மிச்சமிருக்கும் கடைசி கலவை
31 ராய்க்கூழு - கேழ்வரகுக் காஞ்சி
32 ரக்கிரி(லி) - கீரை
33 கருஞ்சுக்கிட்டித்தழை - மணத்தக்காளிக்கீரை
பண்டிகை சார்ந்த சொற்கள்
தொகு1 நோம்பி (ஆடி நோம்பி) - நோன்பு என்பதன் திரிபு. ஆனால் எல்லாப் பண்டிகைகளுக்கும் நோம்பி என்றே சொல்லுவது வழக்கம்.
2 போக்குவரத்து - திருமணம் நிச்சயிக்கப்படும் முன் அதே சமயம் உறுதியான பின்பு நடத்தப்படும் வைபவம். (வாங்க பழகலாம் முறையில்)
3 தெரட்டி - பூப்பு நன்னீராட்டு விழா
4 கட்டுசாதவிருந்து - மாதமாக உள்ள பெண்களுக்கு உறவினர்கள் சேர்ந்து விருந்து வைத்தல்
5 அடசல் - பொதுவாக சாமிக்கு நேர்ந்து கொண்ட கோழிகளை படைத்து விருந்தளிக்கும் முறையைக் குறிக்கும்
6 சாவக்கட்டு - சேவல் சண்டை
7 பொட்லி - கோவில்களில் வேண்டுதலின் பொருட்டு நிறைவேற்றப்படும் எழுப்பப்படும் வேட்டுச்சத்தம்
8 தண்டல்- தப்பாட்டம்
9 வான(ண)ம் உடுதல் - கோவில்களில் பூஜை நேரத்தில் விடப்படும் வெடி
10 தீர்த்தத்துக்குப் போறது - எந்தக்கோவிலிலும் விஷேஷம் இருப்பின் அருகில் உள்ள காவிரி ஆற்றிக்குச் சென்று நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தல்
11 தீர்த்தம் முத்தரித்தல் - தீர்த்தத்துக்குப் போய்விட்டு வந்தபிறகு அந்த நீரை ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வதைக் குறிக்கும்.
12 மலையேறிடுச்சு - பொதுவாக சாமி வந்தவர்கள் தன்னிலைக்கு வருவதைக் குறிப்பிடும் சொல்
13 எழுதிங்கள் - திருமணமான , பெண் குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு நடத்தப்படும் சீர்
14 அருமைக்காரர் - திருமண சடங்கை , சீர்களை முன்னின்று நடத்தி வைப்பவர்
15 ஒருசிந்தி (சந்தி) - விரதம் இருத்தல்
16 கிழமை பிடித்தல் - பொதுவாக வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை காலையில் குளித்துவிட்டு குறிப்பிட்ட தெய்வங்களுக்கு பூஜை செய்துவிட்டே பிற வேலைகளைச் செய்வது. மற்றபடி எல்லாக் கிழமைகளுக்கு பொருந்தும்
17 புண்ணியாச்சினை - புதுமனைப் புகுவிழா . பொதுவாக எந்த ஒரு நல்ல காரியத்தைத் தொடங்குவதற்கும் செய்யப்படும்
18 புள்ளார் - பிள்ளையார்
19 வாக்கு கேட்டல் - சாமியாடுபவர்கள் சொல்லும் குறி
20 சாமிக்கு விடுதல் - கடவுளுக்காக சேவல்கள் மற்றும் ஆடுகளை தியாகம் செய்வது