கொங்கு வட்டார வழக்கு அகராதி

கொங்கு நாடு பகுதிக்கு தனித்துவமான சில பிராந்திய பேச்சுவழக்கு சொற்கள் மற்றும் அதன் பொருள் இந்த கட்டுரையில் காணலாம்.[1]

பொதுவான வார்த்தைகள் தொகு

அக்கட்ட, அக்கட்டு. அக்கட்டாலே (akkatta, akkatti, akkattaalae) - அந்த இடம், அந்த இடத்திலே (that place, there)

அக்கப்போர் (akkappoar) - சண்டை (fight)

அக்கியானம் - தொல்லை, தொந்தரவு

அச்சாணியம் - அபச குணம்

அகராதி (akaraathi) - எல்லாம் தெரிந்தார்போல நடத்தல் (feigning omniscience)

அந்திக்கு (anthikku) - இரவுக்கு (at night/midnight)

அங்கராக்கு (angaraakku) - சட்டை (shirt)

அட்டாரி, அட்டாலி (appaari, appaali) - பரண் (loft, attic)

அட்டுப்பால் - தாய்ப்பாலைத் தவிர்த்துக் கொடுக்கப்படும் மற்ற பால்

அப்பச்சி , அப்புச்சி (appachi) - தாய்வழித் தாத்தா (maternal grandfather)

அப்பத்தாள்- தந்தைவழித் பாட்டி (paternal grandmother) (அப்பாவின் ஆத்தாள்)

அப்பாறு- அப்பாவின் அப்பா (paternal grandfather)

அம்பிலி - சோளக்கூழ்

அமுச்சி- அம்மாயி- அம்மத்தாள் - அம்மாவின் அம்மா (maternal grandmother)

அல்லெ( காசரகோடு பாஷையிலும் (கேரளத்தின் காசரகோடு மாவட்டத்தில் பேசப்படும் மலையாளம்) கன்னடத்திலும் அல்லே / அல்லி - அந்த இடம் , இடம்) - இடம் (உ.தா. அந்த அல்லெ உக்காரு - அங்கே உட்கார்)

அஸ்கா(வ்)- வெஞ்சர்க்கரை

அரசாணிக்காய் - பரங்கிக்காய்

ஆசாரி- மரவேலைசெய்வோர் (மலையாள பிரயோகத்தில்)

ஆசாரம்- வீட்டினுள் உள்ள முற்பகுதி

ஆகாவழி- ஒதவாக்கரை - ஒன்றுக்கும் உதவாதவன்

ஆச்சி - சீதனம், சீர்வரிசைகள்

ஆட்டம் - போல என்று பொருள்படும் ஒரு சொல்: (அக்காளாட்டம் சும்மா இரு - அக்காளைப் போல் சும்மா இரு)

ஆத்தா, ஆயா (அப்பாயி) - அப்பாவின் அம்மா

ஆம்பாடு - காலும் இடுப்பும் சேரும் மடிப்பான இடம் (ஆம்பாட்டிலே தேய்த்துக் குளி)

ஆர் (aar) - யார் (who)

ஆன (aana) - ஆனை - யானை (elephamt)

இக்கிட்டு - இடர்பாடு

இட்டேறி - தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)

இண்டம் பிடித்தவன் - கஞ்சன்

இத்தாச்சோடு - மிகப்பெரிய

இறவாரம் - கூரையின் சாய்வின் உட்பகுதி

ஈய்க்குமாறு(சீமாறு)- விளக்குமாறு

ஈருளி - பேன், ஈர் முதலியவற்றை நீக்கப் பயன்படும் கருவி

உண்டி - (மாதிரி) = உண்ணும் பதம்? - தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்

உக்காரு - உட்கார்

உப்புசம் , உக்கரம் - புழுக்கம்

உறம்பிர- உறைம்பிரை- ஒறமொறை -*சொந்தக்காரர்கள்- விருந்தாளி (உறவின்முறை)

உன்ற - உன்னுடைய

ஊக்காலி (?ஊர்க்காலி)- பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். (ரவுடி)

ஊடு - வீடு

ஊங்காரம் - காற்றின் ஓசை

ஊசை - கொட்டுப் போனது

ஊளமூக்கு - சளி நிரம்பிய மூக்கு (மலையாள பிரயோகத்தில் - ஊளை - சளி)

ஊட்டுக்காரி - வீட்டுக்காரி - மனைவி - மனையாள்

ஊறுப்பட்ட - ஏகப்பட்ட (எ.க: சோத்துல ஊறுப்பட்ட உப்பு . உறு- மிகை. )

எச்சு - அதிகம்(மலையாள பிரயோகத்தில், எச்சு - அதிகம்)

எகத்தாளம் - நக்கல், பரிகாசம்

எழுதிங்கள் - கொங்கு பெண் மக்களுக்கு செய்யப்பெறும் சடங்கு

எரவாரம்-கூரையின் கீழ் பகுதி (தாள்வாரம்)

என்ற - என்னுடைய

எந்தநேர் -நேர் - எந்தப்பக்கம்

எடைப்பால் சோறு - இடைப்பகல் உணவு

எடங்காடு / இடஞ்சல் - போதிய இடம் இல்லை

எச்சிப் பணிக்கம் - எச்சில் துப்பும் கலம்

எசிரி - போட்டி

எம்பொறாப்பு - என்னுடன் பிறந்தவர்

ஏகமாக - மிகுதியாக,பரவலாக

ஏகடியம் - கேலி, கிண்டல்

ஏதாச்சும் - ஏதாவதும்

ஏகதேசம் - ஏறக்குறைய

ஏனம் - பாத்திரம்

ஐயன் - பெரியவர் அல்லது அப்பா

ஒரப்பு - குண்டாகு

ஒட்டுக்கா - ஒரேயடியாக, இணைந்து (ரெண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாங்க - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)(மலையாள பிரயோகத்தில், ஒட்டாகே - ஆக கூடி, -உம்)

ஒடக்கான் - ஓணான்

ஒரம்பு - ஈரநிலம்

ஒடம்பு - உடம்பு

ஒப்பிட்டு, ஒப்புட்டு - போளி

ஒளப்பிரி - உளறு "இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்"

ஒருசந்தி - ஒரு வேளை மட்டும் விரதம் இருத்தல்

ஒலக்கை - உலக்கை (உரலில் குத்தப் பயன்படும் கருவி)

ஒன்ற - உன்னுடைய

ஒருவாடு - மிக அதிகமாக(மலயாளச்சொல்)

ஓரி - உடன் பிறந்தவர் யாரும் இல்லாதவர்

ஓரியாட்டம்-சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.(மலையாள பிரயோகம், ஓரியிடுக- கூவலிடுக, கத்தலிடுக)

கட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்

கடும்பு - சதை போடுதல்

கரடு - சிறு குன்று

கட்டிச்சோத்து விருந்து - கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு

கடைகால், கடக்கால் - அடித்தளம்

கடகோடு - கடைசி ( கோட்டுக்கடை - கடைசிக்கடை, அந்த கோட்டிலே பாரு - அந்த கடைசியிலே பாரு)

கடையாணி - அச்சாணி

கரடு - சிறு குன்று

கல்யாணம் (கண்ணாலம்) - திருமணம்

காணியாச்சி - குலதெய்வம் (பெண்)

காராட்டு காலம் - இனப்பெருக்க காலம் (காராட்டு காலத்தில் திரியும் பூனை ஒரு மாதிரி மதத்துடன் இருப்பதால் அதற்கு காராட்டுப் பூனை என்று பெயர்)

குக்கு - உட்கார்

குச்சிகிழங்கு- மரவள்ளிகிழங்கு

குண்டு - இரைப்பை

கூம்பு - கார்த்திகை தீபம் ( கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு )

கூதல்- குளிர், கூதகாலம்- குளிர்காலம் (மலையாள பிரயோகத்தில்)

கொரவளை \ தொண்டை -குரல்வளை

கொறை - தரிசு நிலம், பயன் படுத்தப் படாத பூமி

கொடாப்பு - கோழிகளை அடைத்து வைக்கப் பயன்படும் பெரிய கூடை (தென் மாவட்டங்களில் பஞ்சாரம் என்று சொல்லப்படும்)

கொழு -ஏர்மனை

கொழுந்தனார்- கணவரின் தம்பி

கொழுந்தியாள் - கணவனின் தங்கை, மனைவியின் தங்கை

கொட்டமுத்து - ஆமணக்கு

கோடு - "அந்தக் கோட்டிலே உட்கார்", பழைமைச்சான்று: "கோடுயர் அடுப்பு" "பக்கம் உயர்ந்த அடுப்பு" (புறநானூறு 164)

கோடி - ஈமச்சீர்

கொங்காடை- மழைக்கு பாதுகாக்கும் ஆடை

கூச்சம் - மரத்தூண்

கள்ளக்கா - நிலக்கடலை

சடவு- பிரச்சினம், பிரச்சனை செய்ய, தொந்தரவு, வெறுப்பு (அவனுட சடவு எடுக்கமுடியல - அவன் தொந்தரவு தாங்கமுடியல) (மலையாள பிரயோகத்தில், சடவு, சடைக - மனந்தளர்க, தடைபடுத்துக)

சாடை பேசுகிறான் - குறிப்பாகத் (மறைமுகமாகத்) தாக்கிப் பேசுகிறான்

சாங்கியம் - சடங்கு

சாயங்காலம் - மாலை

சல்லை- சல்ல - இடர், (அ) மூங்கில் சல்லை

சிலுவாடு - சிறு சேமிப்பு

சிலுப்புதல் - தயிர் கடைதல்

சீக்கு - நோய்(மலையாள பிரயோகத்தில், சீக்கு, சீத்தை - அழுக்கு, அசுத்தம்)

சீக்கடி - கொசுக்கடி

சொள்ளை - கொசு

சீரழி - நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)

சீறாட்டு - கோபம். (கட்டிக் கொடுத்து மூன்றுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீறாடிட்டு வந்துவிட்டது) (மலையாள பிரயோகத்தில், சீறுக-கோபிக்க)

சீவகட்டை- சீவல்கட்டை- துடைப்பம்

சீவக்காய்- சியக்காய்

சுல்லான் (சுள்ளான்?) - கொசு

செகுனி, செவுனி - தாடை/கன்னம்

செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி

சோங்கு - சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி

சேந்துதல் - தண்ணீர் இறைப்பது (கிணற்றிலே இருந்து தண்ணீர் சேந்தி வா = தண்ணீர் இறைத்துக்கொண்டு வா )

சோறு - சாதம்

சீப்பம்பால் - சீம்பால்

சாளை - வீடு (காட்டுச்சாளை - தோட்டத்து வீடு)

சயனம் - செல்லும் வழியில் தடங்கல்.

தண்ணிவார்க்க, தண்ணி ஊத்திக்க- குளிக்க

தாரை - பாதை

தொண்டுபட்டி - மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் - ஆட்டைத் தொண்டுபட்டியிலே அடை

தொணெ - துணை

துழாவு - தேடு

திரட்டி (திரட்டு) - பெண்ணின் முதிர்ச்சி விழா, பூப்பு நன்னீராட்டு விழா

தும்பி - பூச்சி,.(உதாகரித்து). தட்டாந்தும்பி

தூரி - ஊஞ்சல்[2]

தொறப்பு குச்சி - திறவுகோல்

தாவாரம் - தாழ்வாரம்

தடுக்கு - தென்னை ஓலைப் பாய்

தெரக்கு - மும்முரம் (தெரக்கா வேலை செய்யுறாங்க)

நங்கை, நங்கையாள் - அண்ணி நாத்தனார்

நலுங்கு - உடல் நலம் குன்றிய ( குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லைச் சொல்ல மாட்டார்கள் - அவர்கள் குழந்தை நலுங்கிவிட்டதாம்)

நசியம் - மாடுகள் சினையாகும் பருவம்

நச்சு - வாசாலம், பேசிக்கொண்டே இருப்பது

நியாயம் (நாயம்) - பேச்சு ( அவன் பேச்சு யாருக்கு வேணும் - அவன் நியாயம் யாருக்கு வேணும், அங்கே என்னடா பேச்சு - அங்கே என்னடா நாயம் )

நீசத்தண்ணி- பழையசோற்றுத்தண்ணீர்

நோக்காடு - நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரீல. இன்னைக்கு வரல).

நோம்பி (நோன்பு) - திருவிழா

நெறக்கா - நிறைய

பகவதியாயி நோன்பு (பவுதியாயி நோம்பி) - பகவதி அம்மன் திருவிழா

படு - குளம்போன்ற ஆழமில்லாத நீர்நிலை

படி, பறை, சம்பா, ஆலாக்கு - அரிசியளப்பு அளவைகள்

பழமை - பேச்சு ( அங்கே என்ன பேச்சு - அங்கே என்ன பழமை )

பண்ணாடி - பண்ணைக்கு சொந்தக்காரர்,உழவர்,பட்டக்காரர்

பாலி - குளத்தை விடச் சிறிய நீர்நிலை.

பாச்சை, பாற்றை- கரப்பாம்பூச்சி (மலையாள பிரயோகத்தில், பாற்ற - கரப்பான்)

பிரி - பெருகு, கொழு ("பெண்கள் மாசமாக இருக்கும்பொழுது வயிறு பிரியும்")

புண்ணியர்ச்சனை- (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா

புள்ள- (இளம்)பெண்

பிள்ளார்- பிள்ளையார்

பெருக்கான் - பெருச்சாளி

பொக்கென்று - வருத்தமாக (மிட்டாய் தரேனென்று சொல்லிட்டுத் தராமல் இருந்தால் குழந்தை பொக்கென்று போயிடும்)

பொட்டாட்டம் - அமைதியாக

பொடக்காலி - புழக்கடை

பொடனி, பொடனை - (புடனி, பிடனி, பிடரி) பின்கழுத்து

பொறந்தவன் - உடன் பிறந்த சகோதரர்

பொறந்தவள் - உடன் பிறந்த சகோதரரி

பொழுதோட - பொழுது சாயும் முன்

பட்டி நோம்பி - மாட்டுப்பொங்கல்

படி -1லிட்டர்

பொறகால - பின்னால்

பொடக்காலி - புழக்கடை

மச்சாண்டார் - கணவனின் அண்ணன்

முதலாளி (பண்ணைக்கு சொந்தக்காரன்)

முட்டுவழி - முதலீடு

மெய்யாலும் − மெஞ்ஞாலும் புழப்பு - தொடர்வேலை

மலங்காடு - மலைக்காடு

மசையன் - விவரமற்றவன்

மழைக்காயிதம் - பாலிதீன் காகிதம்

மளார் - விரைவாக, சீக்கிரம் (மளார் என்று தனியாக சொல்லமாட்டார்கள். மளாரென்று வா\போ, மளாரென்று வேலையை முடி என்று அடுத்த சொல்லோடு இணைந்து தான் இச்சொல் வரும்)

முக்கு - முனை,

முச்சூடும்- முழுவதும்,

மூலை - வளைவு

மேட்டுக்காடு - வானம் பார்த்த பூமி

மாத்து - விஷேச வீட்டில் உட்கார விரிக்கும் சேலை

மொண்ணை - மழுங்கிய (மொண்ணைக்கத்தி)

மக்கிரி - கூடை

மறுக்கா - மறுமுறை

மஞ்சி - நார் (தேங்காய் மஞ்சி - தேங்காய் நார்)

வட்டல் -தட்டு

வவுறு - வயிறு

வாக்கு - கோவிலில் கேட்கப்படும் ஒரு வகை சந்தேகங்கள்

விஷண்ணம் - நோவுகை (ஸம்ஸ்கிருதம்- மனஸ்தாபம்)

வெகு - அதிக

வெள்ளாங்பூண்டு - பூண்டு

வெள்ளாமை (வேளாண்மை) - உழவு, விவசாயம்

வெள்ளாள கவுண்டர் - பட்டக்காரர், காணியாளர், குடியானவர் & உழவு செய்பவர்

வேட்டுவக் கவுண்டர் - பட்டக்காரர்,கொங்கர்,மிராசுதாரர்,ஜமீன்தார்

வேசகாலம்- வெய்யில்காலம்

வேகு வேகுன்னு- அவசரஅவசரமாய்

வள்ளம் - 4 படி (லிட்டர்) மரக்கால்

வாது - கிளை (அணில் வாது விட்டு வாது தாவியது

பொதுவான வினைச்சொற்கள் மற்றும் உரிச்சொற்கள் தொகு

1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்)

2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம்

3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.)

4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்]

5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை.

6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்)

7. என்றது - என்னுடையது.

8. உன்றது - உன்னுடையது.

9. அப்பச்சி- தாய்வழி தாத்தா

10. அப்பாரு- தந்தை வழி தாத்தா.

11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி

12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி

13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்)

14. நடவை - வெளிப்புறக் கதவு

15. வட்டல்- தட்டு

16. நருவசா- முழுவதுமாக

17. ஸோலி- பணி (கானங்காத்தால கடை கடையா என்ன ஸோலி உனக்கு?)

18. மடார் - உடனடியாக (ஒரு வேலையச் சொன்னா மடார்ன்னு முடிச்சுட்டு வேற ஸோலியப் பாரு)

19. மோந்துட்டு - மொண்டு (குடுவையில் நீர் மொண்டு வருதல்)

20. ஒட்டுக்கா - இணைந்து (ரெண்டு பேரும் ஒட்டுக்கா போயிட்டு வாங்க - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)

21. மொளவு சாறு- மிளகு சாறு என்பதன் மாறுபாடு (அசைவக் குழம்பைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது)

22. எகத்தாளம் - திமிரு/ நக்கல் (பெரியவங்க கிட்ட எகத்தாளமா பேசாதே)

23. இட்டாரி/ இட்டேரி - தெரு. (கிராமப்புறங்களில் குறிப்பாக மண் சாலை)

24. அவுறு - அவிழ்த்தல் (கயிற்றை அவிழ்த்து விடு)

25. அவத்தைக்கு - அங்கே

26. இவத்தைக்கு - இங்கே

27. சலவாதி - மலம்.

28. போச்சாது- "பரவாயில்லை விடு" என்பது போல (ஏதாவது பொருள் தொலைந்து விடும் பட்சத்தில் போச்சாது விடு என்று ஆறுதல் படுத்துவார்கள். போய்ச் சாகிறது என்ற சொல் இப்படி மாறி இருக்கலாம் என்பது என் தீர்மானம்)

29. போசி- பாத்திரம்

30. அலுங்காம -அசைக்காமல் (போசிய அலுங்காம எடுத்துட்டு வா - பாத்திரத்தை அசைக்காமல் எடுத்து வா)

31. சிந்திடாம - உதிராமல்/கீழே கொட்டாமல் (அரிசி சிந்தாம அள பார்க்கலாம்)

32. மலக்காகிதம் - மழைக்காகிதம் - பாலிதீன் காகிதம்

33. பொறவு - அப்புறம். (கடைக்கு பொறவு போறேன்)

34. வெசனம் - வருத்தம்/சோகம் (ஏண்டா அவன் வெசனம் புடிச்சு உக்காந்திருக்கான்?)

35, 36. கருமாந்திரம் - கருமாதி என்பதாக இருக்கலாம். பிடிக்காத ஒரு நிகழ்வில் கருமாந்திரம், கெரகம் என்ற இரண்டு சொற்களும் அடிக்கடி உபயோகிக்கப் படும். (கருமாந்திரம் புடிச்சது)

37. பொசுக்குனு - சடக்கென்று (இவனுக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வந்துடும்)

38. பொக்குன்னு - வருத்தமாக (முட்டாய் தரன்னு சொல்லிட்டு தராம இருந்தா குழந்தை பொக்குன்னு போயிடும்)

39. பவுடு- கீழ் அன்னம் (லோலாயம் பேசாதடா. பவுட்ட பேத்துடுவேன்)

40. தாவாக்கட்டை- கீழ் அன்னம்.

41. சீவக்கட்டை- விளக்குமாறு

42. கூமாச்சி- கூர்மையாக

43. தொறப்பு - பூட்டு

44. தொறப்புக் குச்சி - சாவி

45. மண்டு விடுதல்- சிறுநீர் கழித்தல்

46. வெடுக்குனு = வெடுக்கெண்டு

47. என்றது = என்ர

48. உன்றது = உன்ர

49. அப்பச்சி = அப்பு அல்லது அம்மப்பா

50. அப்பாரு = அப்பு அல்லது அப்பப்பா

51. அமத்தா = ஆச்சி அல்லது அம்மம்மா

52. அப்பாத்தா = ஆச்சி அல்லது அப்பாச்சி

53. ஸோலி = சோலி

54.விசுக்குன்னு = விறுக்கெண்டு

55.பொசுக்குனு = பொசுக்கெண்டு

56. பொறவு = பிறகு, பேந்து

57.தொறப்பு = திறப்பு

58. வெசனம் = விசனம்

59. உட்கார் = அமர் (அமர்வது) கீழே அல்லது நாற்காலியில்

60. குச்சுக்கோ = உட்காரு (குழந்தைகளை உட்கார சொல்ல பயன்படும் சொல்)

61.குத்த வச்சு = உட்கார்வதில் ஒர் வகை (இந்திய வகை கழிவறைகளில் நாம் உட்காரும் வகை தான் இப்படி அழைக்கப்படுகிறது)[3]

பொதுவான வார்த்தைகள் தொகு

1. வங்கு - பொந்து, சந்து

2. கம்மனாட்டி - முட்டாள், மடையன்

3. உருமாளை - தலைப்பாகை

4. சிம்மாடு - தலைப்பாகை.தலைப்பாகையில் இருந்து சற்று வேறுபட்டது. ஏதேனும் பொருளை தலையில் சுமக்கும் போது நழுவி விடாமல் இருப்பதற்காக துணியைச் சுற்றி வைப்பது.

5. கருப்பு - கருமாதி(ஈமச்சடங்கு)

6. அவுசாரி - விபச்சாரி

7. கட்டுக்கொலை - தன் சாதியைச் சார்ந்த நிகழ்வுகளில் பங்கு பெறும் மற்ற சாதிகள்.உதாரணமாக, கவுண்டர் இனத்தைச் சார்ந்தவர்கள் நாவிதர்கள், குயவர்கள் போன்றவர்களை கட்டுக்கொலைக்காரர்கள் என்பார்கள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள்(சக்கிலியர், பறையர்)

8. ஓரியாட்டம் -சண்டைசொற்றொடர்: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.

9. மிஞ்சி - மெட்டி

10. பொல்லி - பொய்.

11. அக்கட்ட - அந்தப் பக்கம்.அடுப்புக்கிட்ட நிக்காத. தீ மூஞ்சிலையே அடிக்குது. அக்கட்ட போடா.

12. இக்கட்ட - இந்தப் பக்கம்.இந்த வேச காலத்துல அக்கட்ட இக்கட்ட நகர முடியல.

13. வேச காலம் - கோடை காலம்

14. ராவுடி - டார்ச்சர்அந்தப் பையன் செம ராவுடி புடிச்சவன்.

15. ராங்கு - தவறாக நடத்தல்.ஏண்டா போலீஸ்காரங்கிட்ட ராங்கு பண்ணுனா அப்பாம என்ன முத்தமா கொடுப்பான்?

16. அப்பு - அறை.அவள ஓங்கி ஒரு அப்பு அப்புடா. மொகற கட்ட பேந்து போற மாதிரி.

17. மொகற கட்ட - முகம்

18. செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி

19. அக்கப்போரு - அட்டகாசம் இந்த பிலாக் எழுதறவிய அக்கப்போரு தாங்க முடியலைடா. :)

20. பொடனி - தலையின் பின்புறம்

21. முசுவு - கவனமாக/ குறிக்கோளுடன்குடுத்த வேலைய ஒரே முசுவுல செஞ்சு முடிச்சாதான் உங்கப்பனுக்கு தூக்கமே வரும்.

22. வல்லம் - மூன்று அல்லது நாலு படி அளப்பதற்கான அளவை. (கிட்டத்தட்ட 3.5 கிலோகிராம் வரும்)

23. அலும்பு - அலம்பல்.

24. அரமாலும் - ரொம்பவும். அரமாலும் அலும்பு பண்ணுறாடா அவ.

25. திலுப்பாமாரி - மேனா மினுக்கி

26. அட்டாரி - பரண்.

27. புழுதண்ணி - இரவில் மீதியான சோற்றில் நீர் ஊற்றி வைப்பார்கள். விடிந்த பின் அந்த நீர் புழுதண்ணி.

28. மக்காநாளு - அடுத்த நாள்

29. சீராட்டு - கோபம்.கட்டிக் கொடுத்து மூணுமாசம் கூட ஆகுல. அதுக்குள்ள புள்ள சீராடிட்டு வந்துடுச்சு.

30. அன்னாடும்- தினமும்

31. பால்டாயில் - பாலிடால் என்ற விவசாய பூச்சிக் கொல்லி.

32. ஒரு ஒலவு(உழவு) மல - ('ழ'கர உச்சரிப்பு இருக்காது)மழை பெய்யும் அளவை குறிப்பது.ஆட்டுக்கல் அல்லது உரலில் இருக்கும் குழி நிரம்பினால் ஒரு உழவிற்குத் தேவையான அளவு மழை பெய்திருக்கிறது என்று அனுமானம் செய்து கொள்வார்கள்.

33.அகராதி புடிச்சவன் - விதண்டாவாதம்/குறும்பு பிடித்தவன்.

34. வேய்க்கானம் - புத்திசாலி,விவரம்,

வீடு அதன் சுற்றுப்புறம் சார்ந்த சொற்கள் தொகு

1. இட்டாரி(லி) - இட்டேறி. வழித்தடம் , சிறிய பாதை , கிளைத்தடம்

2. நடவை - கதவு

3. சீமாறு, சீவமாரு, சீவக்கட்டை. - விளக்குமாறு

4. ஈக்குமாறு. - விளக்குமாறு , தென்னைமர குச்சியில் செய்தது (வீட்டுக்கு வெளியில் கூட்ட , பெருக்க பயன்படும்)

5. தொறப்புக்குச்சி - சாவி , திறவுகோல்

6. தொற - திற

7. தொரை - பெரிய துரை இவரு. (அதாவது ஒருவர் செய்யமுடியாத செயலைச் செய்ய எத்தனிக்கும் போது, விளிக்கப் பயன்படும் சொல்.)

8. எரவாரம் - ஓட்டு வீடுகளில் திண்ணைக்கு மேல் கைக்கைட்டும் இடத்தில் அகப்படும் இடுக்கு, தாள்வாரம்

9. தாவாரம் - தாழ்வாரம்

10. நீக்கு, கதவ நீக்கு – கதவைத் திற

11. அட்டாலி , அட்டாரி - பரண்

12. போசி - சிறிய (அ) அளவான பாத்திரங்கள்

13. சால் , அண்டா, சருவம் - தண்ணீர் ஊற்றி வைக்கப் பயன்படும் பாத்திரம்

14. ஒலக்கை - உலக்கை

15. மூலை. ஓரம் , இடுக்கு

16. கண்டரை- அடுக்கு

17. சலந்தாரை , சலவாரை , சலந்தாரி - தண்ணீர் செல்லும் பாதை

18. வள்ளம் , வல்லம் , படி - அளக்கப் பயன்படுவது . சிலசமயங்களில் ‘படி’ – வெண்கலத்தால் ஆனது , எச்சில் துப்பவும் பயன்படும்.

19. நெலவு - வாசற்படி கதவு

20. பொடக்காலி - வீட்டின் பின்புறம் , குளிக்குமிடம்

21. தேகுசா , தேவுசா - பாத்திரம்

22. தயிர் சிலுப்புதல் - தயிர் கடைந்து வெண்ணை எடுத்தல்

23. மத்து - ஒரு வகைக் கரண்டி , கடைவதற்குப் பயன்படுவது

24. பராத்து - மிகப் பெரிய தட்டு

25. வட்டல் - சாப்பிடும் தட்டு

26. அன்னவாரி. - சாதம் அள்ளிப்போட உதவும் கரண்டி , அன்னக்கரண்டி

27. முக்கு - முனை , திருப்பம்

28. ஓல்லு - நெல் , கம்பு குத்த பயன்படும் ஒருவகையான செக்கு

28. ஓர் ஒளவு - ஓர் உழவு (பெய்த மழையைக் குறிக்கும் சொல் )

29. சால்பரி - கோழிகளை மூடி வைக்கப் பயன்படுவது , தண்ணீர் இறைக்கவும் பயன்பட்டது

30. நடவை - கதவு

31. லாந்தர் - அரிக்கேன் விளக்கு. Lantern என்பது மருவி வந்து இருக்கலாம்

32. துப்புட்டு - போர்வை

33. தலவாணி - தலையணை

34. கால்மாடு - கால் வைக்கும் பகுதி

35. களம் - வாசல்

விவசாயம் சார்ந்த சொற்கள் தொகு

1. மக்கிலி (மக்கிரி ) - பெரிய கூடை

2. கலப்பை - ஏர்

3. கொலுவு - ஏர் முனை , கூரான ஆயுதம்

4. மம்முட்டி , மம்பட்டி - மண்வெட்டி

5. கொத்து - சிறிய மண்வெட்டி

6. மொளக்குச்சி - ஆடு மாடுகளைக் கட்ட நிலத்தில் அடிக்கும் மரத்துண்டு

7. சாளை. இரு வேறு பொருள் – வீட்டுக்கு வெளியில் தனியாக இருக்கும் சிறிய இடம்

8. கட்டுத்தரை - மாடு கன்றுகளை கட்டி வைக்கும் தொழுவம்

9. கொடாப்பு - பிறந்த மாட்டின் இளங்கன்றுகளை அடைத்து வைக்கப் பயன்படும் சிறிய ஓலை குடிசை

10. அண்ணாங்கால் - மாட்டின் வேகத்தை மட்டுப்படுத்த ஒரு கயிறை கழுத்தில் இருந்து காலோடு சேர்த்தி கட்டி விடுதல்

11. பால் கறத்தல் - பால் பீய்ச்சுதல்

12. உருவாஞ்சுருக்கு - ஆடு மாடுகளை காட்டும் போதும் இலகுவாக அவிழ்க்கும் படியும் , அதே சமயம் கழண்டு விடாதபடியும் போடப்படும் முடிச்சு

13. அண்ணாங்கயிறு - பால் கறக்கும் போது மாட்டின் கால்களைச் சேர்த்துக் கட்டும் கயிறு

14. பட்டி - ஆடுகளை அடைத்து வைக்குமிடம்

15. தொண்டுப்பட்டி - மாடு , கன்றுகள் இருக்குமிடம்

16. அணைதல் - மாலை நேரத்தில் கோழிகள் தூங்கச் செல்லுவதைக் குறித்தல்

17. கிடாரி - இளம் பெண் மாடு (கன்று ஈனுவதற்கு முன் )young

18. காளைக்குத் திரியுது, நசியம் , பயிராவுதல் - மாடுகள் கர்ப்பமாகுதல்

19. கடவு , கடவுப்படல். வேலியில் சிறு ஓட்டை- தட்டி

20. தடுக்கு - தென்னை ஓலையில் செய்யப்படும் பாய்

21. பாவை - பாய்

22. மசை பிடித்தல் - வெறி பிடித்தல்

23. தட்டக்கூடை - கொஞ்சம் பெரிய அளவிலான வாய் அகன்ற கூடை

24. செம்பிலியாடு - நாட்டு ஆடு

25. வால்கவுறு. கவுறு – கயிறு . மஞ்சியினால் திரித்த கயிறு

26. மஞ்சி - தென்னை மட்டையில் திரித்தது

27. கவலை(ளை)யோட்டுதல் - மின்சாரம் வருவதற்கு முன்பு தண்ணீர் இறைக்கப் பயன்பட்டது

28. சேந்துதல் - இறைத்தல்

29. தரம்பு கட்டுதல் - கிளுவை நொச்சிக் கட்டைகளை வைத்துக் கட்டப்படும் படல்

30. மாறு - பொதுவாக குச்சியைக் குறிக்கும் சொல்

31. பரம்பு ஓட்டுதல் - பொதுவாக ஆற்றில் ஊத்து வெட்டி தண்ணீர் எடுப்பவர்கள் , ஆற்றில் நீர் ஓடி ஊற்றை சமன் செய்துவிட்டுப் போனபிறகு மீண்டும் மண்ணைத் தோண்டி ஊற்றாக மாற்றுவர். அந்த செய்கைக்குப் பெயர் ‘பரம்போட்டுதல்'

32. மொறம் - முறம்

33. கருக்கருவாள் - பொதுவாக சிறிய இலை , தழைகளை அறுக்கப் பயன்படுவது

34. கொடுவாள் - அரிவாள்

35. களத்துமேடு - வீட்டை விட்டு தனியாக இருக்கும் வாசல். பயிர் வகைகளை பிரித்தெடுக்கப் பயன்படுவது. சேமிப்புக்கும் உதவும்.

36. பாம்பேரி - கிணறு வெட்டியதில் இருந்து வெளிவந்த மண் அருகிலேயே ஏரி போல குவித்து வைக்கப்பட்டு மேடாக மாறி இருக்கும்

37. நப்பு - வற்றிக்கிடந்த கிணறு , நீரோட்டம் பெற்று ஊற ஆரம்பித்தால் , அருகில் ஏதாவது நீரோட்டம் ,நீர்த்தேக்கம் இருப்பின் அந்த நப்பு (தாக்கம்?) இங்க அடிச்சுடுச்சு என்பார்கள்

38. ஆத்துப் பாசனம் , கிணத்துப் பாசனம். முறையே விவசாயத்துக்கு நீர் எங்கிருந்து வருகிறது என்பதைக் குறிக்கும்

39. இடால் , கண்ணி. இரண்டும் மிருகங்களைப் பிடிக்க வைக்கப்படும் பொறி .

40. பெருக்கான் - பெருச்சாளி

41. ஓடைக்காய் - ஓணான்

42. நஞ்சு - பெரும்பாலும் விஷம் என்ற பொருள்தான் . ஆனால் , ஆடு மாடுகள் குட்டி /கன்று ஈன்ற பிறகு வெளிவரும் தொப்புள் கொடியைக் குறிக்கும்

43. பாத்தி கட்டுதல் - மண்ணை நடவு நாடா , தண்ணீர் பாய சீராக்குதல்

44. முருங்க்கா பொறிக்கிறாங்க - முருங்கை பறித்தல்

45. தண்ணி வெட்டி உடுறாங்க. வயல்களுக்கு - நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல்

46. வெள்ளாம, பண்ணாமை. வெள்ளாமை – விவசாயம்

47. முட்டுவழி - முதலீடு, முதல். ஒரு பயிர் விளைவிக்க ஆகும் மொத்த செலவு

48. மேட்டாங்காடு - வானம் பார்த்த பூமி

49. தாளி - ஆடு மாடுகள் தண்ணீர் குடிக்க உதவும்

50. போர் போடுதல் - விளைந்த கொடி , தட்டுகள் , இலை தழைகள் அனைத்தையும் சேமித்து வைக்கப் போடும் அரண்

51. தோட்டத்துல இருக்காங்க - பொதுவாக ஊருக்குள் குடியிருக்காமல் விவசாயம் செய்யும் நிலத்திலேயே வீடு கட்டி வாழ்வோரைக் குறிப்பது

52. கந்தாயம் , போக்கியம் , கிரயம். நிலத்தை விற்றல் /வாடகைக்கு விடுதல் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள்

53. பண்ணை - நீர் சேமித்து வைக்கும் தொட்டி

54. பண்ணையம் - நில உடைமைகள்

55. ரீப்பர் - வீடு கட்டப் பயன்படும் ஒரு வகைக் கட்டை/தப்பை

56. கடைமடை , கடக்கோடு - இறுதி/கடைசி

57. சும்மாடு - தலைப்பாகை

58. சுழி - மாட்டுக் கன்றுகளுக்கு தலையில் இருக்கும் முடி

59. குறுக்குச்சால் - பொதுவாக எந்தச் செயலையும் நன்றாக நடக்க விடாமல் கெடுத்து விடுவது .

60. கவண் - குருவிகளை விரட்டப் பயன்படுவது . கயிற்றில் செய்யப்பட்ட நடுவில் ஒரு கல் வைத்து வீசுமளவுக்கு அகலம் உள்ளவாறு அமைக்கப்பட்டது

61. பாங்கிணறு - தூர்வாரப் படாமல் தூர்ந்து போய்க் கிடைக்கும் பழைய கிணறு.

62. ஒடுக்கு - பனையோலையை வைத்து சாப்பிட பின்னப்படும் . ஒடுக்கஞ்சோறு என்று ஒரு பதமும் உண்டு.

63. கூமாச்சி - கூர்மையான பகுதி

64. பாட்டாளி - உழைப்பாளி

65. தொக்கடா - குறுக்குவழி

66. வெள்ளத்தாரை - நீர் போகும் பாதை

67. கிட்டி - வேலி தாண்டிப் போகும் ஆடுகளுக்கு கழுத்தில் கட்டி விடப்படும் ஒரு தப்பட்டை.

கொங்கு தமிழ் வார்த்தைகளை பட்டியலிட முடியுமா?

வீடுகள் மற்றும் இடங்கள் தொடர்பான சொற்கள் தொகு

தொறப்புக்குச்சி

பொடக்காலி

அண்ணாங்கால்

கொடாப்பு

உருவாஞ்சுருக்கு

பால் பீய்ச்சுதல்

தயிர் சிலுப்புதல்

அட்டாலி ,  

சால்பரி

மக்கிலி (மக்கிரி )

கொத்து

மொளக்குச்சி

சாளை

கடவுப்படல்

தடுக்கு

தட்டக்கூடை

வால்கவுறு

கவலை(ளை)யோட்டுதல்

தரம்பு கட்டுதல்

கொடுவாள்

கருக்கருவாள்

களத்துமேடு

பாம்பேரி

பெருக்கான்

முட்டுவழி

தொக்கடா

வெள்ளதாரை

தரம்புகட்டை

ஒண்டுகவை

மொகரப்பூட்டு

மரக்கால்

தும்மி

சாடு

குடுதாழி

ராக்கூடை

வாக்கூடை

தார்க்கோல்

மொளக்குச்சி

நாச்சோறு

ஒதுக்குபடல்

பொங்கச் சருவம்

தூக்குப் போசி...

சப்பாரம்

மாடகுழி ( விளக்கு ஏற்றுமிடம்)

கடவு( நுழைவு வாயில்)

ரஸ்தா ( பாதை)

கொறங்காடு

அம்புளி ( சோளத்தை இடித்து ஊற வைத்து செக்குல ஆட்டி இரவு புளிக்க வைத்து காலையில் காச்சப்படும் கூழ்)

ஆணம் (கொழம்பு )

கற சோறு

மொசல் ( முயல்)

வைக்கப்பில் (வைக்கோல்புள்ளு)

சோளத்தட்டு (தீவனம்)

மொளவு (கறிக்குழம்புக்கு சேர்க்கும் மசாலா)

மொறம்.

மக்கரி

தலமாறு (ஏரு திரும்பும் முனை)

அங்கராக்கு ...

தொவயல் (கல்லத் தொ வயல்)

சும்மாடு

திருவ

கரித்துணி

ஊரப்பானை

சருவம்

அண்ணாக்கவுரு

மங்கிலியம்

தட்டம்

கவுட்டி

கவ்வை கோலு (குச்சி)

அணப்பு

பொலி

சலதாரை

பொறக்கடை

பட்டியாளு நேரம்

கோழி கூப்புட

பொழுதோட

வெடியால

பழையசோத்து நேரம்

இரணிய நேரம்

சைனம்

மொதபஸ்

கடைசி வண்டி

பெளசரு (கார்)

சவ்வாரி

நொங்குவண்டி

பல்லுக்குச்சி

ஊறத்தண்ணி

புழுதண்ணி

மத்துக்குச்சி

மத்துக்கோல்

தெரட்டி

மொறச்சீரு

குச்சு

ஒலக்கை

ஒரலு

மேவரம்

கெழவரம்

தெக்கால

வடக்கால

பக்காபடி

முத்திரைப்படி

வள்ளம்

ஒலக்கு

தூத்துக்கூடை

வெதப்பொட்டி

வெஞ்சனம்

மேத்திண்ணை

திண்டு

நட்டடுப்புச் சாம்பல்

இட்டாலி

முக்கிட்டாலி

சீடை கட்டுறது

எறவுத் தண்ணி

கோடாலி கொண்டை

பின் கொசுவம்

அடுக்கு

ஆப்பை

உரி

கொட்டம்

தொண்டுப்பட்டி

மொடகாடு

வாரிக்குழி

ஒரம்பு

கடையோடறது

பொறவு

அக்கட்டால

அங்கிட்டு

இங்கிட்டு

காத்தாட

மேம்போக்கு


சாடு கவை

ஒண்டுக்கட்டை

கம்பரக்கத்தி

சீவக்கட்டை

மேத்திண்ணை

எரவானம்(தாவாரம்)

ரக்கிலி(கீரை)

கொக்கிச் சல்லை

ஒட்டுக் கூடை

கன்னித் தும்பு

தலை கயிறு

வடம்

வால் கயிறு

பாதாள சோதி

தார்க்கறுது

மயிறு கோதி

கோனூசி

அஸ்க்கா

பாம்பேரி

கொடுவாப் பூன்

தாம்புக் கன்னி

கொட்டாப்புடி

மஞ்சி

அவினி

கருக்காம்பட்டை

பனங்கறுக்கு

தொரட்டி

தேங்காத் தொட்டி

நாச்சோத்துக் கும்பம்

உரிக்காக் கொடி

கத்தக்கொடி

முஷ்டக் கொடி

தாதரா

பன்னை

குமுட்டி

தொய்யல்

ஒருக்கட்டத் தொய்யல்

தாருமுள்

தார்க்கருது

மயிருகோதி

எரவாரம்


தேகுசா

பொங்கச் சருவம்

சால்பானை

படிக்கம்

ஆரீக்கல்

ஒல்லு

ஒலக்கை

செக்கு

கொக்கிச்சல்லை

தொண்டுப்பட்டி

கெடாக் குட்டி

பிறவக் குட்டி

காளைக்கன்னு

கெடாரிக் கன்னு.

தொறப்பு

நாதாங்கி


குச்சூடு

மச்சூடு

தொட்டிகட்டு  

தலவாசல்

தட்டுக்காரம்

தாட்சான்

ஈட்டாக்குட்டி

ஒலுப்பட்டி

சொரப்புரடை

தூரி


கூட்டாஞ்சோறு

ராட்டை

ஒடக்கா

கூட்டுச்சாறு

பனங்கா

துலுக்கானி சோளம்

குரங்கு பொகீளை


பக்காப்படி

பட்டணரவை

வேப்பெண்ணை கலயம்

கும்பா

சாவக்குஞ்சு வெடைகுஞ்சு

தொலவு

அத்துவானம்

மூட்டுகுட்டி

ஈராங்காயம்

மொளவா

தொளைக்கட்டு

உங்கொன்ன(அண்னன்)

கடையாணி

நொவம்

மோழி

தழக்கயிறு

மூக்கானி

அன்னாங்கால்

சால்பறி

சவ்வாறிவண்டி

குந்தானி

உள்ளே

ஒலக்கை

ஒல்லு

சவ்வாரித்தப்பை

ஆட்டாங்கல்லு

வடக்கயிறு

சீமத்தண்ணி

சீவக்கொட்டை

மொவுட்டுவலை

பட்டித்தரம்பு

மூக்கனம்

இட்டாலி

அட்டாலி

தாம்பு

லாடம்

பட்டா(வண்டி)

கல்லுக்கட்டு

புள்ளாறுகோயல்

தளவுவாறி

சீமகத்தரிபழம்(தக்காளி)பதில்கள்

திண்ணை

பொடக்காலி

தப்பற கல்லு

தொறப்பு குச்சி

நாதாங்கி

கயித்து கட்டல்

பந்தக்காலு

திண்ணைக்காலு

விட்டம்

உறி

பனம்பூட்டு

தென்னம்பூட்டு

தாவாரம்

பொறவாசல்

அஞ்சங்கண வீடு

ஏழங்கண வீடு

சீமை ஓடு

சாப்பு

டாப்பு

மோட்டுவளை

கொசவன் ஓடு

உணவு சார்ந்த சொற்கள் தொகு

1. வனக்குதல் - தாளித்தல்

2. மொளவாட்டி கொழம்பு வைத்தல் - தேங்காய் , கொத்தமல்லி சேர்த்து விழுதாக அரைத்து விட்டு குழம்பு வைத்தல்

3. சீடை - அரிசி மாவால் செய்யப்படும் சிறிய சிறிய உருண்டைகளான இனிப்பு

4. தெலுவு. பனை - தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் பதநீர்

5. பானக்கம் - கருப்பட்டி கலந்து செய்யப்படும் இனிப்பு நீர்

6. கல்லக்காய் - வேர்க்கடலை

7. பொவியிலை - புகையிலை

8. குச்சிக்கிழங்கு - மரவள்ளிக்கிழங்கு

9. சீம்பு - மாடுகள் கன்று ஈன்ற பிறகு மூன்று நாட்களுக்கு கெட்டியாக வரும் பாலில் இருந்து செய்யப்படும் இனிப்பு. உப்பும் சேர்க்கலாம்

10. கண்டிக்கிழங்கு - சக்கரைவள்ளிக்கிழங்கு(?)

11. சுக்கு காபி. - சுக்கு, கொத்தமல்லி ஆகிவற்றை பொடி செய்து சுடுநீரில் சர்க்கரை கலந்து செய்யப்படும்.

12. அஸ்கா - வெள்ளை சர்க்கரை

13. கரும்புச் சக்கரை - வெல்லத்தை உடைத்துச் செய்யப்படும் சர்க்கரை /ஜாஃகிரி

14. புளி தண்ணி - கம்பு சோற்றில் மீதமுள்ள தண்ணீரில் உப்பிட்டு குடிப்பர்

15. கம்மஞ்சோறு - கம்பு சோறு

16. அம்புலி - சோளச்சோறு

17. பழைய சோறு - பொதுவாக காலையில் வயல் வேலைக்குச் செல்வோர் , அதிகாலையில் காலை உணவுக்கு முன்ன இரவு மீந்த சாப்பாட்டில் தண்ணீரோ , மோரோ கலந்து சாப்பிட்டுவிட்டு செல்லுவர். அது ‘பழைய சோறானது’

18. கச்சாயம் - அதிரசம்

19. ஒப்பிட்டு - போளி

20. ஓனவா , ஒனத்தியா - வக்கனையா, நாக்கிற்கு ருசியாக

21. சீப்பை - பனங்கொட்டைகளை மண்ணில் புதைத்து வைத்து குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு , வெளியில் எடுத்தால் நடுவில் வெள்ளையாக இனிப்பானதாக நுங்கு மாறியிருக்கும்

22. பனங்கிழங்கு - பனங்கொட்டைகளை மண்ணில் புதைத்து வைத்து வளரவிட்டு கிழங்கை எடுத்து உப்புப் போட்டு வேக வைத்து சாப்பிடுவது

23. கோசக்காய் - தர்பூசணி

24. நவாப்பழம் - நாவல்பழம்

25. சந்தவை - இடியாப்பம்

26. கொள்ளுப்பருப்பு , கொள்ளு ரசம் - கொள் பயிரை வைத்து செய்யப்படும் துவையல் , ரசம்

27. பருப்புச் சாப்பாடு - அரிசி , பருப்பு சாதம்

28. வெள்ளாங்பூண்டு - வெள்ளை பூண்டு

28. சீமெண்ணை - மண்ணெண்ணெய்

29. சுண்டப்பருப்பு - முந்தைய நாள் வைத்த பருப்பை , இரண்டு அல்லது ஒரு நாள் கழித்தோ மீந்து போனால் , அடுப்பில் நன்றாக சுண்ட வைத்து சாதத்துக்குப் பிசைந்து சாப்பிடுவர்

30. ஊனு - சாப்பிட்ட தட்டில் மிச்சமிருக்கும் கடைசி கலவை

31. ராய்க்கூழு - கேழ்வரகுக் காஞ்சி

32. ரக்கிரி(லி) - கீரை

33. கருஞ்சுக்கிட்டித்தழை - மணத்தக்காளிக்கீரை

பண்டிகை சார்ந்த சொற்கள் தொகு

1. நோம்பி (ஆடி நோம்பி) - நோன்பு என்பதன் திரிபு. ஆனால் எல்லாப் பண்டிகைகளுக்கும் நோம்பி என்றே சொல்லுவது வழக்கம்.

2. போக்குவரத்து - திருமணம் நிச்சயிக்கப்படும் முன் அதே சமயம் உறுதியான பின்பு நடத்தப்படும் வைபவம். (வாங்க பழகலாம் முறையில்)

3. தெரட்டி - பூப்பு நன்னீராட்டு விழா

4. கட்டுசோத்துவிருந்து - (வளைகாப்பு)மாதமாக உள்ள பெண்களுக்கு உறவினர்கள் சேர்ந்து விருந்து வைத்தல்

5. அடசல் - பொதுவாக சாமிக்கு நேர்ந்து கொண்ட கோழிகளை படைத்து விருந்தளிக்கும் முறையைக் குறிக்கும்

6. சாவக்கட்டு - சேவல் சண்டை

7. பொட்லி - கோவில்களில் வேண்டுதலின் பொருட்டு நிறைவேற்றப்படும் எழுப்பப்படும் வேட்டுச்சத்தம்

8. தண்டல்- தப்பாட்டம்

9. வான(ண)ம் உடுதல் - கோவில்களில் பூஜை நேரத்தில் விடப்படும் வெடி

10. தீர்த்தத்துக்குப் போறது - எந்தக்கோவிலிலும் விஷேஷம் இருப்பின் அருகில் உள்ள காவிரி ஆற்றிக்குச் சென்று நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தல்

11. தீர்த்தம் முத்தரித்தல் - தீர்த்தத்துக்குப் போய்விட்டு வந்தபிறகு அந்த நீரை ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வதைக் குறிக்கும்.

12. மலையேறிடுச்சு - பொதுவாக சாமி வந்தவர்கள் தன்னிலைக்கு வருவதைக் குறிப்பிடும் சொல்

13. எழுதிங்கள் - திருமணமான , பெண் குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு நடத்தப்படும் சீர்

14. அருமைக்காரர் - திருமண சடங்கை , சீர்களை முன்னின்று நடத்தி வைப்பவர்

15. ஒருசிந்தி (சந்தி) - விரதம் இருத்தல்

16. கிழமை பிடித்தல் - பொதுவாக வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை காலையில் குளித்துவிட்டு குறிப்பிட்ட தெய்வங்களுக்கு பூஜை செய்துவிட்டே பிற வேலைகளைச் செய்வது. மற்றபடி எல்லாக் கிழமைகளுக்கு பொருந்தும்

17. புண்ணியாச்சினை - புதுமனைப் புகுவிழா . பொதுவாக எந்த ஒரு நல்ல காரியத்தைத் தொடங்குவதற்கும் செய்யப்படும்

18. புள்ளார் - பிள்ளையார்

19. வாக்கு கேட்டல் - சாமியாடுபவர்கள் சொல்லும் குறி

20. சாமிக்கு விடுதல் - கடவுளுக்காக சேவல்கள் மற்றும் ஆடுகளை தியாகம் செய்வது[4]

மேற்கோள்கள் தொகு

  1. இரா.வெங்கடேசன். "தமிழில் வட்டார வழக்குச்சொல் அகராதி உருவாக்கம்". www.keetru.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
  2. agarathi.com. "தூரி | அகராதி | Tamil Dictionary". agarathi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-18.
  3. "கொங்கு வட்டார வழக்கு அகராதி. 1. பொழுதோட - மாலை நேரத்தில் 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் ப". ta.freejournal.org. Archived from the original on 2021-09-28. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
  4. இரா.வெங்கடேசன். "தமிழில் வட்டார வழக்குச்சொல் அகராதி உருவாக்கம்". www.keetru.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.