பேச்சு:கொரோனா வைரசு

கொரனாவைரசு என்பது ஆங்கில சொல், தலைப்பை தூய தமிழ் சொல்லான பரிவட்ட நச்சுயிரி என்பதற்கு மாற்றி அமைக்கலா. பரிவட்ட நச்சுயிரி என்பது தமிழக அரசு அகராதியில் வழங்கப்பட்ட சொல். --தொழில்நுட்பம் (பேச்சு) 09:07, 29 மார்ச் 2020 (UTC)

முள்முடித்தொற்றி என்ற சொல் ஏற்கெனவே இணையத்தில் பரவி வருகிறது.--Kanags \உரையாடுக 08:55, 29 மார்ச் 2020 (UTC)

முள்முடித்தொற்றி சொல்லையும் தமிழக அரசு சொல்லான் பரிவட்ட நச்சுயிரி இரண்டையும் பயன்படுத்தி அடைப்புக்குறியில் (Coronavirus) என கட்டுரையில் இடலாம். கொரனாவைரசு ஆங்கில ஒலிபெயர்ப்பை தமிழில் படிப்பதற்கு நன்றாக இல்லை. --தொழில்நுட்பம் (பேச்சு) 09:07, 29 மார்ச் 2020 (UTC)

நன்றாக இராது என்பது உண்மை. ஆனாலும், சரியான தமிழ்ச் சொல் இக்கட்டுரை உருவாக்கும் போது இருக்கவில்லை. அவசரமாகக் கட்டுரை ஒன்று தேவை என்பதால் இவ்வாறு தலைப்பிட்டுத் தொடங்கினேன். இரண்டு சொற்களையும் கட்டுரையில் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு சொல்லையே தலைப்பாக இட வேண்டும். @செல்வா and KaNiJan2:--Kanags \உரையாடுக 10:30, 29 மார்ச் 2020 (UTC)
முள்நாறிப் பழம் போலும், நெருஞ்சி முள் போன்றும் தோற்றம் அளிப்பதால், சுருக்கமாக முள் தொற்றி என்றாலே போதும் என்பது என் கருத்து. அப்படித்தான் நான் பயன்படுத்தியு வருகின்றேன்.--செல்வா (பேச்சு) 22:13, 29 மார்ச் 2020 (UTC)
இது வட்டமானதல்ல. உருண்டையானது. பரிவட்டம் என்பது பொருந்தாது.ஆங்கிலத்தில் இருப்பதுபோலவே இருக்கவேண்டுவதில்லை. முள்தொற்றி என்று சுருக்கமாகச்சொன்னால் போதும். இது தீநுண்மி எனினும் அச்சொல்லையும் சேர்த்து எழுதவும் தேவையில்லை. தொற்றுவதால் தொற்றி என்னும் சொல்லே வைரசு/தீநுண்மி என்பதற்குப் பொருந்தும். ஊமத்தங்காய், முள்நாறிப்பழம் போல் எத்தனையோ உருவகங்கள் இன்னும் பொருத்தமானது. எனவே முள் என்பது போதும். முள்ளுருண்டை என்றெலாமும் சொல்லத்தேவையில்லை. சூட்டும்முடி என்பதைச் சேர்த்து முள்முடித்தொற்றி என்று மணிவண்ணன் என்பவர் ஆள்கின்றார். சுருக்கம் நல்லது என்பது என் கருத்து. சீன மொழியில் எப்படிச் சொல்கின்றார்கள் என்று பார்த்தேன்.
சீன மொழியிலே கரோனா வைரசு (முள்தொற்றி) என்பதை எப்படிச் சொல்லுகின்றார்கள்?

சீன மொழியில் 冠状病毒 (குஆன்- சுஆ- பியன்- டு'ஓ ) என்கின்றார்கள்.

冠 குஆன் என்றால் சூட்டும் முடி(crown), தொப்பி,
状 சுஆ(ங்) என்றால் வலிய கடுமையான
病 பியன் என்றால் நோய், பிணி
毒 டு'ஓ என்றால் நஞ்சு,

எனவே கடுமுடி நச்சுநோய் என்பது போன்ற பொருள் தருவது.

கடைசி இரண்டு படவெழுத்துகளான 病毒 பியன் டு'ஓ
( நோய் நச்சு) என்பதுதான் வைரசு என்பதற்கான சொல்.

---செல்வா (பேச்சு) 15:15, 10 ஏப்ரல் 2020 (UTC)

தமிழக அரசு அகராதிகளில் பல ஆண்டுகளாக (~ 2005 அல்லது அதற்கு முன்பு?) ”பரிவட்டம்” என சொல் பயன்பாட்டில் உள்ளது, இது தமிழ் வழி கல்வி நூல்களிலும் உள்ளது. TamilVu என்கிற அரசு அகராதியிலும் ”பரிவட்ட நச்சுயிரி” தரப்பட்டுள்ளது. இந்த அகராதி ஒரு குரோயேசியரால் Eudict என்கிற தளத்தில் படியெடுக்கப்பட்டது. https://eudict.com/?lang=engtam&word=corona https://www.xn--vkc6a6bybjo5gn.com/ எச்சொல்லிருந்தாலும் ஏற்கனவே கல்வியகங்களில் பயனில் உள்ள ஒரு நிலையான கலைச்சொல் பயன்படுத்துவது நல்லது. இங்ஙனம் புதிய குழப்பங்கள் எழாது. --தொழில்நுட்பம் (பேச்சு) 12:08, 23 ஏப்ரல் 2020 (UTC)

Start a discussion about கொரோனா வைரசு

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொரோனா_வைரசு&oldid=2986686" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கொரோனா வைரசு" page.