பேச்சு:கொலோபசுக் குரங்கு
இப்பொழுது இச் சிறு தமிழ்க் கட்டுரை ஆங்கில, பிரான்சிய, எசுப்பானிய விக்கிகளில் உள்ளதை விட தரமான தகவல்கள் கொண்டுள்ளன. இன்னும் விரித்து எழுதலாம்.--செல்வா 23:17, 3 மார்ச் 2009 (UTC)இணையப்பதிப்பு (ஆன்லைன்) பிரிட்டானியாவில் உள்ளதைவிடவும் கூடுதலான தகவல்கள் உள்ளன.--செல்வா 23:20, 3 மார்ச் 2009 (UTC)
- நல்ல செய்தி, செல்வா. இதுபோன்று பல கட்டுரைகளை நாம் உருவாக்க வேண்டும். இன்னும் ஆங்கில விக்கியில் இல்லாதவற்றையும் உருவாக்க வேண்டும். அப்போதாவது தமிழ் வலைப்பதிவர்கள் ஒன்றப் பற்றி எழுதும்போது ஆங்கில விக்கிக்கு இணைப்புக் கொடுப்பதற்கு மாற்றாக தமிழ் விக்கி கட்டுரைகளுக்கு இணைப்பு தருவார்களா பார்ப்போம். ஆங்கில விக்கியிலுள்ளதைக் காட்டிலும் கூடுதலாகத் தகவல்கள் உள்ள கட்டுரைகளைத் தெரிந்தெடுத்து அவற்றைச் சிறப்புக் கட்டுரைகளாகவும் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் en:Template:FAOL என்ற வார்ப்புருவை இங்குள்ளதுபோல் இடலாம். அதன்வழி நம் தளத்தின் தனித்தன்மை விளங்கும். -- சுந்தர் \பேச்சு 09:25, 5 மார்ச் 2009 (UTC)
- நன்றி சுந்தர். சிறப்புக்கட்டுரைக்கு இன்னும் வேறு பல தகுதிகள் இருக்க வேண்டியிருக்கலாம், ஆனால், இப்படி ஆங்கில, பிரான்சிய, எசுப்பானிய, 'டாய்ட்சு விக்கியில் உள்ளதைக் காட்டிலும் கூடுதலான தகவல்கள் உள்ள கட்டுரைகளை ஏதேனும் ஒரு சிறு முத்திரை குத்தி, தகுதிக்கான ஒப்பீடு செய்த நாளையும் குறிப்பிட்டு சேர்த்து வரலாம். 100-200 கட்டுரைகள் காலப்போக்கில் சேர்ந்தாலும் நல்லதே. டூக்கான் பறவை கட்டுரை எழுதிய நாளிலும் அதில் பிற விக்கிகளில் இல்லாத தகவல்கள் இருந்தன. ஆனால் நாம் செல்ல வேண்டிய தொலைவு மிக உள்ளது! வேந்தன் அரசு என்பவர் பொனொபோ கட்டுரையை எழுதியது ஒரு வரலாற்று நிகழ்வு (ஆங்கில விக்கியின் மொழி பெயர்ப்பாயினும்). தமிழில் முதன்முதலாக பொனொபோவைப் பற்றி விரிவாக எழுதிய முதல் கட்டுரை அது. வரலாற்றுப் பதிவு. நீங்கள் மௌடம் பற்றி எழுதிய கட்டுரையும் இப்படிப்பட்ட வரலாற்றுப் பதிவுதான். இப்பொழுது மயூரநாதன் மீன்களின் குடும்பங்களைப் பற்றி எழுதுவதும், குறுங்கட்டுரைகளாக இருப்பினும் தமிழில் முதலாவது என்று நினைக்கிறேன் (ஆனால் அவர் ஆயிரக்கணக்கில் எழுதியுள்ளார்!!).முன்பு தமிழில் எங்கும் இல்லாத கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் இப்பொழுது தமிழ் விக்கியில் உள்ளன. அவற்றுள் பல குறுங்கட்டுரைகளாக இருக்கலாம், எனினும் முதன்முதலாக பதித்த சுவடுகளே. இதனை பலரும் இன்னும் உணரவில்லை. பேரா வி.கே அவர்கள் ஆக்கிய பல கட்டுரைகளும் மெர்சென் பகாத்தனி முதலான சிறப்பு எண்கள் பற்றி எழுதிய கட்டுரைகளும் என்று நூற்றுக்கணக்கில் உள்ளன. --செல்வா 14:10, 5 மார்ச் 2009 (UTC)
- வாக்கரின் பாலூட்டிகளின் நூலில் கூழைக்குரங்கின் கட்டை விரல் இல்லாமல் இருப்பதின் படம் ஒன்று உள்ளது (பக். 604 இல்). உயிரினக் காட்சியகத்தில் எங்கும் கூழைக்குரங்கு (கொலோபசு) இருந்தால், காட்சியகத்தாரின் உதவியுடன் படம் எடுத்துப் போடலாம். கட்டாயம் இருக்க வேண்டிய படம் இது. கட்டைவிரல் கூழைக்குரங்கு அல்லது கொலோபசு என்னும் பெயருக்கு அடிப்படையானது. வாய்ப்பிருப்பவர்கள் யாரும் உதவலாம். என்னிடம் இக்குரங்கை நான் எடுத்த சில படங்கள் உள்ளன (தான்சானியாவில் எடுத்தது) ஆனால் நான்கு விரல்கள் மட்டும் தனியாக இருக்கும் படம் இல்லை.--செல்வா 23:24, 3 மார்ச் 2009 (UTC)
அள்ளை-அல்லை
தொகுஇத்தனை நாட்கள் நான் அல்லை என்பதே சரியென நினைத்துக் கொண்டிருந்தேன். இரண்டுமே சரியா அல்லது அள்ளை என்பதுதான் சரியா?--சிவக்குமார் \பேச்சு 18:12, 5 மார்ச் 2009 (UTC)
- அல்லை என்பது சரியாக இருக்க முடியாது. அள் என்றால் நெருக்கம் என்று பொருள். அள் என்பது அண் என்று ஆகி அண்டை, அணு முதலான சொற்கள் எழும். அள்ளை என்பது கைக்கு அடியில் அல்லது கைக்கு நெருக்கமான பகுதி என்னும் பொருளில் வழங்கும் சொல். அள் என்னும் சொல் செறிவு மிக்க பொருள்கள் தருவது. பின்னொரு முறை விரித்து எழுதுகிறேன். --செல்வா 18:24, 5 மார்ச் 2009 (UTC)
பழனி அருகிலுள்ள ஊர்களில் அள்ளை என்ற வார்த்தையை பயன்படுத்துவதை கண்டேன். விசாரித்ததில், அள்ளைக்கு 'பக்கத்தில்' என்று பொருள் என்று கூறினார்கள். அள்ளககை என்றால் sidekick என்றும் கூறினார்கள். [சக்தி, ஜூன் 29, 2011]