பேச்சு:கொழுக்கட்டை

மோதகம் என்பது கொழுக்கட்டை என்பதையும் ஒன்றாகக் கருதலாமா ? வடிவம் வேறு. இலங்கையில் உள்ளே வைக்கும் சேர்வை ஒன்றே. எனக்குத் தெரிந்த வரையில். --Natkeeran (பேச்சு) 03:34, 21 சூலை 2012 (UTC)Reply

கொழுக்கட்டை என்பது வேறுபட்ட வடிவத்தில் உள்ளே சேர்வை இல்லாது செய்யப்படுவது. --மதனாகரன் (பேச்சு) 13:28, 21 சூலை 2012 (UTC)Reply
யாழ்ப்பாணத்தில் படத்திலுள்ளதைப் போல் கொழுக்கட்டை செய்யப்படுவதில்லை. இவ்வாறான வடிவத்திலேயே செய்யப்படுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 14:52, 21 சூலை 2012 (UTC)Reply
சேலம் மாவட்டத்தில் சேர்வையுடனும் இருப்பதையும், கொழுக்கட்டை என்றே கூறுகின்றனர்.-- உழவன் +உரை.. 15:24, 21 சூலை 2012 (UTC)Reply

கட்டுரையினுள்ளே இடத்துக்கிடமுள்ள வேறுபாடுகளை எடுத்துக் காட்டலாம். இந்தக் கட்டுரையை முன்மாதிரியாகக் கொள்ளலாம். --மதனாகரன் (பேச்சு) 16:06, 21 சூலை 2012 (UTC)Reply

நீங்கள் சுட்டியபடி மாற்றியுள்ளேன்.கட்டுரையில் முதன்மையாக உள்ள படம், பாதுஷா என்ற இனிப்புப் பண்டத்தை நினைவூட்டுகிறது. சிலவகைக் கொழுக்கட்டைகளை வைத்து படமெடுத்து மாற்றவேண்டும். என்னிடம் படிமியில்லை. எனவே, உடனடியாக செய்ய இயலாது.இனிப்பு கொழுக்கட்டை என்பது, உள்ளே வைக்கும் சேர்வை(பூர்ணம்)யைப் பொருத்தே அமையும்.அச்சேர்வையுடன், சர்க்கரை அ வெல்லத்தை கலக்காமல் தயாரித்தால், அது காரக் கொழுக்கட்டை என்பர்.மீண்டும் சந்திப்போம்.வணக்கம்.-- உழவன் +உரை.. 04:55, 22 சூலை 2012 (UTC)Reply

சேர்வை வைத்துச் செய்வதையும் கொழுக்கட்டை என்று தான் சொல்வார்கள். ஆனாலும் மேற்கூறிய வடிவத்தில் அமைந்து கண்டதில்லை. --மதனாகரன் (பேச்சு) 10:29, 25 சூலை 2012 (UTC)Reply

ஆமாம், இலங்கையில் இவ் வடிவத்தில் செய்யப்படுவதில்லை. அரை நிலா வடிவத்தில் பற்களுடன் செய்வார்கள். பொதுவாக அரிசிமாவிலேயே செய்வார்கள். மண் அல்லது ஒரு வகை ஊதா நிறத்தில் இருக்கும். --Natkeeran (பேச்சு) 13:15, 25 சூலை 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொழுக்கட்டை&oldid=1172741" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கொழுக்கட்டை" page.