பேச்சு:கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில்
24 டிசம்பர் 2016
தொகு24 டிசம்பர் 2016இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஓவியங்களும், சிற்பங்களுக்கும், பெரிய நடராஜர் திருமேனிக்கும் புகழ் பெற்ற கோயில் என்ற நிலையில் ஓவியங்கள் மற்றும் நுட்பமான சிற்பங்கள் புகைப்படமெடுக்கப்பட்டு, அவற்றின் முக்கியத்துவம் கருதி, சேர்க்கப்பட்டன. தொடர்ந்து விவரங்கள் பதியப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:57, 28 திசம்பர் 2016 (UTC)
தினமணி 15 மார்ச் 2020 இதழில் வெளியான, கி.ஸ்ரீதரன் எழுயுள்ள கோனேரிராஜபுரம் வண்ண ஓவியங்கள் என்ற கட்டுரையிலிருந்து சில செய்திகள் சேர்க்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:10, 17 மார்ச் 2020 (UTC)
கண்டராதித்தர் சிற்பம்
தொகுஇக்கோயிலில் உள்ள கண்டராதித்தர் சிற்பம் பற்றிய செய்தி மேற்கோளுடன் இணைக்கப்பட்டது. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:17, 8 மே 2020 (UTC)