பேச்சு:சகதாயி கான்
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Mereraj
இவரது பெயர் சகடை என்று தற்போதைய ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படுகிறது. இவர் கால நடு மொங்கோலிய மொழியில் (கி. பி. 1200) சகடய் என்று உச்சரிக்கப்படுகிறது. இக்கட்டுரையின் தலைப்பை சகடை என்று மாற்றலாமா? அல்லது சகடய் என்று மாற்றலாமா? - ராஜசேகர் (பேச்சு) 02:12, 21 மே 2022 (UTC)
- @Mereraj: மங்கோலிய மொழியில் சகத்தாய் என்றே ஒலிக்கப்படுகிறது. சகத்தாய் கான் என்றே எழுதலாம்.--Kanags \உரையாடுக 02:43, 21 மே 2022 (UTC)
- “ட்” என்ற எழுத்துக்குப் பதிலாக “த்” பயன்படுத்தப்பட வேண்டுமா? ராஜசேகர் (பேச்சு) 02:58, 21 மே 2022 (UTC)
- உருசிய, மங்கோலிய மொழிகளில் T உச்சரிப்பு "த்" என்றே உச்சரிக்கப்படுகின்றது. அங்கு ஆங்கில T ஒலிப்பு இல்லை. மங்கோலிய மொழியில் Цагадай சகதாய் என்றே ஒலிப்பதாகத் தெரிகிறது. சகத்தாய் மாதிரித் தெரியவில்லை. பொறுத்திருங்கள். உறுதிப்படுத்துகிறேன்.--Kanags \உரையாடுக 03:33, 21 மே 2022 (UTC)
- தொடர்ச்சியாக. இதன் ஆங்கிலக் கட்டுரையில் “Middle Mongol: ᠴᠠᠭᠠᠲᠠᠶ Čaɣatay” என்று குறிப்பிடப்பட்டுள்ளது தங்கள் கவனத்திற்காக. ராஜசேகர் (பேச்சு) 05:21, 21 மே 2022 (UTC)
- உருசிய, மங்கோலிய மொழிகளில் T உச்சரிப்பு "த்" என்றே உச்சரிக்கப்படுகின்றது. அங்கு ஆங்கில T ஒலிப்பு இல்லை. மங்கோலிய மொழியில் Цагадай சகதாய் என்றே ஒலிப்பதாகத் தெரிகிறது. சகத்தாய் மாதிரித் தெரியவில்லை. பொறுத்திருங்கள். உறுதிப்படுத்துகிறேன்.--Kanags \உரையாடுக 03:33, 21 மே 2022 (UTC)
- @Mereraj: சகத்தாய் என்றே எழுதலாம்.--Kanags \உரையாடுக 04:41, 29 மே 2022 (UTC)
- மேலும், இன்னும் இரண்டு கட்டுரைகள் “சகதாயி கானரசு” மற்றும் “சகதாயி” (மொழி) என்று உள்ளன. அவற்றின் தலைப்புகளையும் “சகத்தாய் கானரசு” மற்றும் “சகத்தாய் (மொழி)” என்று மாற்றி விடலாமா? ராஜசேகர் (பேச்சு) 05:26, 29 மே 2022 (UTC)