சண்டை Vs போர்

தொகு

இக்கட்டுரையானது போர் என்பதனையே குறித்து எழுதப்பட்டதாக தென்படுகிறது. சண்டை என்பது fight என்பதனை குறிப்பதாக கருதலாமல்லவா? உ-ம்.: இரு குழந்தைகள் கட்டிப் புரண்டு சண்டையிடுவது. அல்லது இரு நண்பர் குழுக்கள் அடித்துக் கொள்வது....

”சண்டை என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆயுத படைகள், அல்லது போராளிகள் அல்லது நாடுகளுக்கு மத்தியிலோ நடைபெறும்”- இது போர் என்பதனையே குறிப்பதாக கருதுகிறேன்.

இதுபற்றிய தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம். --வினோத் (பேச்சு) 10:09, 16 ஏப்ரல் 2012 (UTC)

சண்டை என்பது fight மட்டுமல்ல, battle என்பதனை குறிக்கும். போர் என்பது, war-ஐ குறிக்கும், fight என்பது மோதலை குறிக்கும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 16, ஏப்ரல், 2012.
சற்றே விளக்கமான எடுத்துக்காட்டாக இரண்டாம் உலகப் போரின் அங்கமாக மேற்கு முனையில் கன் சண்டை நிகழ்ந்தது.--மணியன் (பேச்சு) 23:57, 16 ஏப்ரல் 2012 (UTC)
ம்ம்.. புரிகிறது. அவ்வாறெனின், நாம் ஏன் போர் மற்றும் சண்டை எனும் கட்டுரைகளை ஒன்றிணைக்கக் கூடாது? ஏதோ ஒரு கட்டுரையை வைத்துக்கொண்டு மற்றயதை பிரதான கட்டுரையில் ஒர் குறிப்பாக தரலாமல்லவா? :) --வினோத் (பேச்சு) 08:56, 20 ஏப்ரல் 2012 (UTC)

புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது

தொகு

நூல்கள் மேல் விபரங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் குறிப்பிட்ட பகுதிக்கு ஆதாரம் தேவைப்படுமாயின் அதற்கான வார்ப்புருவை இடவும். மேலதிக மேற்கோள் வார்ப்புருவை மீள்விக்கின்றேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:49, 17 அக்டோபர் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சண்டை&oldid=1236520" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சண்டை" page.