பேச்சு:சத்யா (விருந்து)
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Balurbala in topic பரிமாறும் முறை? உணவு முறை?
பரிமாறும் முறை? உணவு முறை?
தொகுசத்யா என்பது உணவல்ல என்பது தெரிகிறது. இருந்தும் இது உணவுகளை பரிமாறும் முறையா?. அ்லலது உணவு உண்ணும் முறையா? என்று தெரியவில்லை. எப்படியாயினும் சத்யா என்பது உணவல்ல என்பதால் ஏற்ற தலைப்பிட வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:07, 6 அக்டோபர் 2013 (UTC)
- ஈழத்திலும் இம்முறையில் தான் உணவு பரிமாறப்படுகிறது. தமிழ்நாட்டில் இவ்வாறு பரிமாறப்படுவதில்லையா? எவ்வாறு வேறுபடுகிறது?--Kanags \உரையாடுக 11:11, 6 அக்டோபர் 2013 (UTC)
- பொதுவாக கேளரத்தில் இது விருந்து எனும் பொருளில் வழங்கப்படுகிறது. உதாரணமாக ஓண சத்யா என ஓணத் திருநாள் விருந்தை அழைப்பர். சத்யா என புதிய பக்கத்தை நான் தொடங்க விழைகையில் சத்யா எனும் தமிழ் திரைப்படம் பற்றிய கட்டுரை இருந்தது. எனவே அடைப்புக்குறிக்குள் உணவு என பதிவிட்டேன். விருந்து என்ற பொருளே சரியானது. யாராவது இதைச் சரிப்படுத்தினால் நலம். தலைப்புகளை எவ்வாறு மாற்றுவது என எனக்குத் தெரியாது.ஆர்.பாலா (பேச்சு) 11:18, 6 அக்டோபர் 2013 (UTC)
- நல்ல கட்டுரை பாலா. நீங்கள் அடைப்புக்குறிக்குள் உணவு என இட்டு தொடங்கியது அற்புதம். பொதுவாக அடைப்புக்குறியை உபயோகிக்கும் பொழுது ஒரு இடைவெளி விட வேண்டும். இனி அவ்வாறு செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு விக்கிப்பீடியா:பயிற்சி (வரவேற்பு) கட்டுரையைப் பாருங்கள். உத்திராட சத்யா, ஓணம் சத்யா, ஓண சத்யா போன்றகள் பெயர்கள் கூகுளிலிருந்து கிடைக்கின்றன. சரியான பெயரை அறிந்தவர்கள் பரிந்துரைக்கும் வரை காத்திருப்போம். கட்டுரை மேலும் செம்மைப்படுத்துங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:38, 6 அக்டோபர் 2013 (UTC)
- நன்றி.இனிமேல் அவ்வாறே செய்கிறேன்.ஆர்.பாலா (பேச்சு) 12:01, 6 அக்டோபர் 2013 (UTC)