பேச்சு:சர்க்கரைக்கட்டி மலை, பிரேசில்

தலைப்பு

தொகு

இதன் மூல மொழிப் பெயர் போர்த்துக்கேய மொழியிலேயே இருக்கிறது. ஆங்கிலப் பெயர் அதன் மொழிபெயர்ப்பே தவிர வேறில்லை. அவ்வாறிருக்க ஆங்கிலத்தை அப்படியே ஒலிபெயர்க்க வேண்டியதில்லை. மாறாக இதன் பெயரை நாமும் மொழிபெயர்த்து கற்கண்டு மலை எனப் பெயரிடலாம்.--பாஹிம் (பேச்சு) 14:20, 12 மே 2016 (UTC)Reply

Sugarloaf என்பதை கற்கண்டு என்று மொழிபெயர்க்க முடியாது. பிதுருதலாகலை என்பதை ஏன் மொழிபெயர்க்கவில்லை. --AntanO 18:44, 15 மே 2016 (UTC)Reply

Sugarloaf என்பது யாரிட்ட பெயர்? குறைந்த பட்சம் அது மூல மொழிப் பெயருமன்று. மூல மொழியாகிய போர்த்துக்கேய மொழியிலிருந்து மொழிபெயர்த்தே sugarloaf என்று ஆங்கிலப் பெயரிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள் தங்களது வசதிக்கேற்ப அதை மொழிபெயர்த்துக் கொண்டார்கள். தமிழில் ஆங்கிலத்தைப் பின்பற்றியாக வேண்டுமா?--பாஹிம் (பேச்சு) 02:24, 16 மே 2016 (UTC)Reply

பிதுருதலாகலை என்பதை ஏன் மொழிபெயர்க்கவில்லை? --AntanO 02:34, 16 மே 2016 (UTC)Reply

அது மூலமொழிப் பெயர். இங்கும் நீங்கள் மூலமொழிப் பெயரை வைத்திருந்தால் பரவாயில்லை. அவ்வாறு வைக்காமல் இரண்டுங் கெட்டான் பெயரொன்றை எதற்காக வைத்திருக்கிறீர்கள்?--பாஹிம் (பேச்சு) 02:56, 16 மே 2016 (UTC)Reply

ஆகவே, Pão de Açúcar என்ற ஒலிப்புக்கு ஏற்ப பெயர் வைக்கலாம் என்கிறீர்கள். மேலும், பிதுருதலாகலை என்பதையும் தமிழாக்கலாம் என்கிறீர்கள். இதற்கு விக்கி வழிகாட்டலைத்தர முடியுமா? சரி, இதற்கு எப்பெயர் பொருத்தம் என்பதை தெளிவாகக் குறிப்பிட முடியுமா? ஏனென்றால், கற்கண்டு என்பதும் இரண்டுங் கெட்டான் மொழிபெயர்ப்பாகவே எனக்குப்படுகிறது. --AntanO 03:08, 17 மே 2016 (UTC)Reply
மூல மொழிப் பெயர் வைக்க வேண்டும், அல்லது தமிழில் வைக்க வேண்டும். இம்மலை பற்றிய ஏனைய (பெரும்பாலான) மொழி விக்கி கட்டுரைகளில் அவரவர்களின் மொழியிலேயே மொழிபெயர்த்துத் தலைப்பிட்டுள்ளார்கள். சர்க்கரைக்கட்டி மலை எனத் தலைப்பிடலாம் எனபது என் கருத்து. கற்கண்டு என்பது தவறு.--Kanags \உரையாடுக 03:03, 16 மே 2016 (UTC)Reply
சர்க்கரைக்கட்டி மலை அல்லது சீனிக்கட்டி மலை என்பது சரியாகவிருக்கலாம். இதுபோன்ற பெயர் குழப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்வது என்ற வழிகாட்டல் அவசியம் என உணர்கிறேன். விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு - இற்றைப்படுத்தப்பட்டால் இவ்வாறான குழப்பங்களைத் தவிர்க்கலாம். பல மலைகளின் பெயர்கள் மூல மொழியில் உள்ளன. இதனால், பெயர் விளக்கமற்றுக் காணப்படுகிறது. ஆங்கில உச்சரிப்பில் இருப்பது விளங்கிக் கொள்வதற்கு இலகு என்பது என் கருத்து. --AntanO 03:08, 17 மே 2016 (UTC)Reply

ஆங்கில உச்சரிப்பு எதற்கு? தமிழிலேயே பெயரிடலாமே. ஆங்கிலமறியாதோரும் விளங்கிக் கொள்ளலாமே.--பாஹிம் (பேச்சு) 08:55, 17 மே 2016 (UTC)Reply

Return to "சர்க்கரைக்கட்டி மலை, பிரேசில்" page.