பேச்சு:சிதறம்
Entropy என்பது பயனுறா ஆற்றல், இதனைச் சிதறம் என்று அழைக்கலாம். இப்படிப் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கின்றேன், மிகவும் பொருந்தியே வருவதைக் கண்டிருக்கின்றேன். வெப்ப இயக்கவியலில் "சேதமுறும்" அல்லது "பயனுறா" ஆற்றல் ("சிதறம்") என்பதையும் தாண்டி, தகவல் தொழில்நுட்பக் கொள்கைகளில் கிளாடு சேனன் (Claude Shannon) அவர்கள் கூறியது போன்று இழக்கும் செய்திக்கூறுகளின் மதிப்பாகும் (இது சீருறா மாறிகளின் இயல்பால் வருவது). இது தவிரவும் பல புள்ளியியல், நிகழ்தகவு சார்ந்த துறைகளில் பயன்படும் ஒரு கருத்துரு (அங்கெல்லாம் இது ஆற்றல் சார்ந்தன்று). இது மிகவும் ஆழமான ஒரு கருத்துரு. இயல்பாற்றல் என்பது இக்கருத்தைச் சரிவர குறிக்கவில்லை எனக் கருதுகின்றேன். இது பாடநூல்களில் இப்படி இருக்கின்றதா? அப்படி இருந்தாலும் இது சரியான சொல் இல்லை என்பது என் கருத்து. "பயனுறா", "இழக்கும்", "சிதறும்" என்பன இக்கருத்துருவை "விளக்கும்" சொற்களாகும். த.வி-யில் எங்கோ இது பற்றி உரையாடியததகவும் நினைவு. --செல்வா 16:42, 24 பெப்ரவரி 2012 (UTC)
- பாடநூல்களில் Entropy என்பது பற்றிய தமிழ் சொல் இருப்பதாக அறிய முடியவில்லை இக்கட்டுரையை உருவாக்க முனைந்த போது இணையத்தில் இச்சொல் கிடைத்தது.தகுந்த நல்ல பிற சொல் இருந்தால் அதனை பயன்படுத்தலாம். நீங்கள் கூறியது போல் இது மிகவும் ஆழமான கருத்துரு எனவே இக்கட்டுரையை விரிவு படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்--Sank 18:22, 25 பெப்ரவரி 2012 (UTC)
- இயல்பாற்றல் என்பது சரியான சொல் அல்ல. எந்திரோப்பி என்றே படித்ததாக ஞாபகம். செல்வா குறிப்பிட்டது போலவே சிதறம் எனத் தலைப்பிடலாம். The term entropy was coined in 1865 by Rudolf Clausius based on the Greek εντροπία [entropía], a turning toward, from εν- [en-] (in) and τροπή [tropē] (turn, conversion). --Kanags \உரையாடுக 22:13, 25 பெப்ரவரி 2012 (UTC)
- குலைதிறம் என்ற சொல்லை பயன்படுத்தலாம். சிதறம் என்பது scattering உடன் தொடர்புடயதாக தோன்றுகிறது. மேலும் பல துறை தொடர்புகளை விளக்க குலைதிறம் என்ற சொல் உதவும்--Siva.wiki (பேச்சு) 18:25, 25 சூலை 2013 (UTC)
- குலைதிறம் என்பதில் உள்ள குலைவு என்பது ஓரளவுக்குப் பொருந்தும் கருத்துக்கூறு. ஆனால் திறம் என்பது பொருந்தாத பின்னொட்டு என்பது என் கருத்து. பயன்படாது குலைவுறும் கூறு என்பது பொருந்தும் கருத்து. சிவா உங்களுக்கு சிதறம் என்பது scattering என்று தோன்றினால், அது சரியான கருத்தே. பயனுறாது சிதறுதல் என்பதே அடிக்கருத்து. குலைதல் என்பதும் பொருந்தும் பெரும்பாலும் (ஆனால் குலைவுறும் பகுதி என்பது போல் இருத்தல் வேண்டும்.). குலைதிறம் என்பது குலைக்கவல்ல திறம் என்பது போல் பொருள் சுட்டும். குலைதல் என்பதும் சீராக இருந்தது குலைகின்றது என்பதைக் குறிக்குமே அல்லாது பயனுறாது குலையும் கூறு என்பதை குறிப்பாகக் கூறாது. சிதறம் என்பது பல துறைகளுக்கும் பொருந்துவதாகவே நான் நினைக்கின்றேன். பொருந்தவில்லை எனில் சுட்டிக்காட்டுங்கள், என்ன செய்யலாம் என்று கூடி அலசுவோம். --செல்வா (பேச்சு) 18:58, 4 ஆகத்து 2013 (UTC)
- செல்வா, திறம் என்பது பொருந்தாத பின்னொட்டு என்ற தங்கள் கருத்து மிகச் சரியானதே. எந்திரோப்பியை, நான் முறைமை(order)குலைவை அளவிடும் ஒன்றாக காண்கிறேன். எந்திரோப்பி பயன்படும் மற்றொரு துறை தகவல் தொழில் நுட்பம். அங்கு எவ்வாறு ஒரு தகவலை குறைவான அளவில் சேமிக்க முடியும். எவ்வாறு நன்கு முறைமை படுத்த முடியும் என்பதே குறிக்க எந்திரோப்பி பயன்படுத்தப்படுகிறது. குலைவுநிலை (அல்லது குலைநிலை) என்று குறிப்பிடலாம்(எவ்வாறு temperature வெப்பநிலை)என்பது என் கருத்து. தகவல் தொழில்நுட்பத்தில் எந்திரோப்பியை குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் குறைக்க இயலாது என்பதே அடிக்கருத்து. இங்கு குலைவுநிலை பொருந்துவதாக எனக்குப்படுகிறது. மேலும் பயனுறாது குலைதல் என்பது வெப்பஇயக்கவியலில் மட்டும் தேவையானதாக எனக்கு தோன்றுகிறது (இந்த கருத்து எனக்கு விளங்கவில்லை). நன்றி.--Siva.wiki (பேச்சு) 18:04, 5 ஆகத்து 2013 (UTC)
தகவல் தொழில்நுட்பத்தில்,
- "In information theory, entropy is a measure of the uncertainty in a random variable"(Ihara, Shunsuke (1993); Information theory for continuous systems. World Scientific. p. 2. ISBN 978-981-02-0985-8. --ஆங்கில விக்கியில் முதல் வரியின் மூலம்) எனவும்,
- "(in data transmission and information theory) a measure of the loss of information in a transmitted signal or message." என (இங்கேயும்,
- freedictionary--இல் கீழ்க்காணுமாறும், 2. A measure of the disorder or randomness in a closed system. 3. A measure of the loss of information in a transmitted message.
- பல தனித்தனி ஆக்ஃசுபோர்டு அறிவியல் அகராதிகளில், "A measure of the availability of a system 's energy to do work. ", "in entropy. In a wider sense entropy can be interpreted as a measure of disorder;..." போன்றவற்றைக் கூறுகின்றன. எனவே குலைவம் (குலைவு+அம்), அல்லது குலையம் என்றும் சொல்லலாம்) அல்லது குலைவுக்கூறு என்று கூறலாம், குலைவு என்பதை வலியுறுத்தவேன்டும் எனில். தகவல் தொழில்நுட்பத்திலும், 'loss of information in a transmitted signal or message' என்பது சிதறுதல்தான்; சிதறம் என்பது ஒழுங்குறாமை, சீர் ஏறாமை ஆகியவற்றையும் குறிக்கும் முறைமைக்குள் வராமையையும் குறிக்கும். ஆனால் 'a measure of disorder' என்பதைக்கூற குலைவு என்னும் சொல்லால் நீங்கள் கூறுவதுபோல் முதன்மைப்படுத்துதலே நல்லது. குலைவம், குலையம், குலைவுக்கூறு என்பன பொருந்தவில்லை எனில் குலைதி என்று கூறலாம். செய்-செய்தி, உறுதி, அறுதி, இறுதி, பெறுதி (=இலாபம், பொறுதி (=பொறுமை), மறதி என்பதுபோல் குலைவுறுதல் குலைதி எனவும் கூறலாம். அறிதி என்பது 'information' என்பதற்குப் பயன்படும் சொல் ஆகையால், குலைதி என்பது பொருந்தியும் வரும்.
--செல்வா (பேச்சு) 19:22, 5 ஆகத்து 2013 (UTC)
செல்வா, தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி. குலைதி என்பது பொருந்தி வருவதாகவும், "measure of disorder" என்ற கருத்தை விளக்குவதாகவும் உள்ளது. தாங்கள் குறிப்பிட்டது போலவே குலைதி எனத் தலைப்பிடலாம். --Siva.wiki (பேச்சு) 16:11, 6 ஆகத்து 2013 (UTC)
- நன்றி சிவா. வேறு யாரும் கருத்து அளிக்கின்றார்களா, இப்படிச் செய்யலாமா என்று இரண்டொருநாள் காத்திருந்து, இது பிறருக்கும் ஏற்புடையதாயின் குலைதி என்று மாற்றிவிடலாம்.--செல்வா (பேச்சு) 16:32, 6 ஆகத்து 2013 (UTC)
இதற்கு உலைவு அல்லது உலைதி என்பது பொருத்தமாக உள்ளது. எனவே உலைதி என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். ஆறுமுகி (பேச்சு) 12:49, 10 சூலை 2019 (UTC)