பேச்சு:சி (நிரலாக்க மொழி)

சி மொழி பற்றி ஒரு நல்ல தமிழ் நூல் உள்ளது. இதனை தமிழ்நாட்டு பாட நுல்ல் கழகம் வெளியிட்டு உள்ளது. 271 பக்கம் கொண்ட இப்புத்தகம் முதன் முறையாக 2001ல் வெளியிடப்பட்டது. ஆசிரியர்கள் முனைவர் வெ. கிருஷ்னமூர்த்தியும், முனைவர் ப.வே.பன்னீர்செல்வமும். விலை ரூ 30. இதே போல ஜாவா மொழிக்கும், ஸ்டார் ஆஃபீசுக்கும், விஷுவல் பேசிக், HTML ஆகியவற்றுக்கும் தனித் தனி நூல்கள் வெளியிட்டுள்ளார்கள். முகவரி: தமிழ்நாடு பாடநூல் கழகம், கல்லூரி சாலை, சென்னை 600 006. --C.R.Selvakumar 16:18, 24 ஜூன் 2006 (UTC)செல்வா

தகவலுக்கு நன்றி செல்வா. --சிவகுமார் 16:22, 24 ஜூன் 2006 (UTC)

கட்டுரையில் எண்ணற்ற எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், ஆங்கில, வட மொழிக் கலப்புகள் இருந்து திருத்தி உள்ளேன். மாற்றங்களை கவனிக்கலாம். இது போன்ற கட்டுரைகளை எழுதுவோரும் இன்னும் கவனமாக பிழைகளை களைந்து எழுதலாம். பிறப் பயனர்களும் கட்டுரைகளை உரை திருத்தி உதவ வேண்டுகிறேன்.--Ravidreams 22:25, 13 நவம்பர் 2006 (UTC)Reply

உரைதிருத்தம் நன்று ரவி. இனி நானும் கட்டுரை உருவாக்கத்துடன் "குறிப்பில்வழிப் பக்கங்களைப்" படித்து தேவையான திருத்தங்களைச் செய்கிறேன். -- Sundar \பேச்சு 06:12, 14 நவம்பர் 2006 (UTC)Reply

வேண்டிய திருத்தங்களைச் செய்த ரவி மற்றும் மயூரநாதனிற்கு நன்றிகள். இக்கட்டுரையை மேலும் விரிவாக்குவதாகப் படவேண்டிய ஒன்று. அநேகமான பல்கலைக்கழகங்களில் C அல்லது C++ நிரலாக்கல் மொழியையே நிரலாக்கலிற்கு ஆரம்மாகக்கொள்வர். --Umapathy 01:14, 15 நவம்பர் 2006 (UTC)Reply

தலைப்பில் ஐயம்!

தொகு

"சி-நிரலாக்க மொழி" (C-Programming Language) என்பதே சரியெனக் கருதுகிறேன். மொழி என்பது பெயர்ச்சொல் (Noun), எனவே பெயருரிச் சொல்லானது (Adjective) 'அகர' விகுதியைப் பெறலே சிறப்பு. எ.கா: இத்தலைப்பானது 'நன்மை பையன்' என்பது போல் உள்ளது. ஆனால் நன்மை எனும் பெயர்ச் சொல்லின் உரி வடிவமானது 'நல்ல' என்று அகரவீறு பெற்று வருகிறது. எனவே நிரலாக்கல் (பெயர்ச்சொல்லுக்கும் அதே Programming தான்) எனும் பெயர்ச் சொல்லுக்கு ஏற்ற பெயருரிச் சொல் 'நிரலாக்க-' எனும் அகரவீற்றுச் சொல்லேயாம். எனவே தலைப்பை மாற்ற அனுமதிக்குமாறு அருள்கூர்ந்து நிர்வாகிகளையும் கட்டுரை எழுதியவரையும் கேட்டுக் கொள்கிறேன். எண்ணிப் பார்க்கவும்...

உங்கள் அன்புடன் விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 06:05, 20 நவம்பர் 2010 (UTC)Reply

சி-நிரலாக்க மொழி எனத் தலைப்பை மாற்றலாம்.--Kanags \உரையாடுக 06:08, 20 நவம்பர் 2010 (UTC)Reply
சிறுவனின் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி.

--சூர்ய பிரகாசு.ச.அ. 06:10, 20 நவம்பர் 2010 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சி_(நிரலாக்க_மொழி)&oldid=898029" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சி (நிரலாக்க மொழி)" page.