பேச்சு:சீயசு
தலைப்பு மாற்றம்
தொகுபொதுவழக்கு (இதுவரை) காணாத (குறைந்தது) இதுபோன்ற தலைப்புகளில் கிரந்தம் தவிர்க்கலாமே. தவிர 'z' என்பதற்கு 'ஜ' அவ்வளவு பொருத்தமாகவும் தோன்றவில்லை. யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லையென்றால் சூசு என்ற தலைப்பிற்கு நகர்த்தலாமே. -- சுந்தர் \பேச்சு 03:58, 16 ஜூன் 2008 (UTC)
- சுந்தரின் கருத்துடன் ஒத்துப்போகிறேன். நகர்த்தலாம்.--சிவகுமார் \பேச்சு 16:54, 16 ஜூன் 2008 (UTC)
- நன்றி சிவா. நீங்கள் கட்டுரையைத் துவங்கியவர் என்பதாலும் வேறு யாரும் மறுப்பு தெரிவிக்காததாலும் நான் கட்டுரையை நகர்த்துகிறேன். வேறு சிக்கல் இருந்தால் மறுபடியும் நகர்த்திவிடலாம். -- சுந்தர் \பேச்சு 16:29, 17 ஜூன் 2008 (UTC)
- சூசு என்பது choosu என்பது போல் ஒலிக்க்கவேண்டும். சிலர் soosu என்றும் ஒலிப்பர் (கொச்சை வழக்கு, திருந்தா வழக்கு). காற்றொலி சகரமாக இருக்க வேண்டும் எனில், இகரம் அல்லது உகரம் சேர்த்து இசூசு அல்லது உசூசு என்றும் எழுதலாம் (isoosu or usoosu). கட்டாயம் மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை, கருத்தைப் பகிரவே கூறுகின்றேன். --செல்வா 01:13, 27 டிசம்பர் 2008 (UTC)
- நன்றி சிவா. நீங்கள் கட்டுரையைத் துவங்கியவர் என்பதாலும் வேறு யாரும் மறுப்பு தெரிவிக்காததாலும் நான் கட்டுரையை நகர்த்துகிறேன். வேறு சிக்கல் இருந்தால் மறுபடியும் நகர்த்திவிடலாம். -- சுந்தர் \பேச்சு 16:29, 17 ஜூன் 2008 (UTC)
சூசு என்பது பொருத்தமான பெயராக தோன்றவில்லை. சியுசு அல்லது சீயசு என்பதே சரியான உச்சரிப்பு ஆகும். ஆகவே தாங்கள் அருள்கூர்ந்து சூசு பக்கத்தை சீயசுடன் இணைக்க வேண்டுகிறேன். நன்றி.