பேச்சு:சுற்றிழுப்பசைவு

சுற்றிழுப்பசைவால் நிகழும் நகர்ச்சி என்று இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். உணவுக்குழாய் போன்ற ஒரு குழாய் சுருங்கி விரிவதால், உள்ளிருக்கும் உணவு குழாய் வழியே நகர்வதைக் குறிக்கும். கருமுட்டை என்பதைக் காட்டிலும், கருவுறும் முட்டை நகரும் குழாய் என்று சொன்னால் நல்லது. கருமுட்டை என்பது சுருக்கமாக இருந்தாலும், கருப்பு நிற முட்டை என்று குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. கருவுறும் முட்டை என்று சொல்லலாம் என நினைக்கிறேன். oviduct எனபதற்கு முட்டை நகரும் குழாய் என்றாலும் போதும். மற்றும் படம் அசையும் படமாய் இருந்தும், ஏதும் தெளிவு தர உதவவில்லை என்று நினைக்கிறேன். கீழே விளக்கத்தை இன்னும் விரிவு படுத்தினால், பயனாகுமோ என்று நினைக்கிறேன்.--C.R.Selvakumar 13:44, 12 ஜூன் 2006 (UTC)செல்வா

உங்களின் கருத்துக்களுக்கேற்ப சில மாற்றங்களைச் செய்துள்ளேன். எனக்கே அப்படம் தெளிவாக இல்லை. மேலும் விளக்கம் தர முடிந்தால் கட்டுரையிலேயே மாற்றி விடுங்கள். வலது புறம் உள்ள இந்த படிமம் உதவுமா என்று பாருங்கள். இங்கே உள்ள பிற படங்களையும் பாருங்கள். -- Sundar \பேச்சு 06:31, 13 ஜூன் 2006 (UTC)

Start a discussion about சுற்றிழுப்பசைவு

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுற்றிழுப்பசைவு&oldid=41050" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சுற்றிழுப்பசைவு" page.