பேச்சு:சுவாமி ஞானப்பிரகாசர்
அறிவுபூர்வ, அதிகாரப்பூர்வ போன்ற பல சொற்களில் வரும் பூர்வ என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? நிறைந்த, வாய்ந்த போன்ற சொற்கள் பொருத்தமாக இருக்குமா?--ரவி 20:45, 17 நவம்பர் 2007 (UTC)
எழுதுவினைஞர் என்றால் ஆங்கிலத்தில் என்ன? இலிகிதர் தேர்வு என்றால் என்ன? அர்ப்பணிப்பு, ஞானஸ்நானம் ஆகியவற்றுக்குத் தமிழில் என்ன?--ரவி 20:56, 17 நவம்பர் 2007 (UTC)
- எழுதுவினைஞர், இலிகிதர் என்பவை clerk ஐக் குறிக்கும். எழுதுவினைஞர் நல்ல தமிழ்ச் சொல்லாகத் தெரிகிறது.--Kanags 22:12, 17 நவம்பர் 2007 (UTC)
- இலிகிதர் என்பது லிக்னா என்னும் இந்தி மொழி வினைச் சொல் வழி வந்தது என்று நினைக்கிறேன். நில்னா பொருள் எழுதுதல். இலிகிதர் எழுத்தர் என நினைக்கிறேன். அறிவுபூர்வ என்பது அறிவார்ந்த (ஆர் = நிறைந்த) என்பதாகும். கண்ணாரக் கண்டேன், நெஞ்சார வாழ்த்துகிறேன் என்பனவற்றில் உள்ள ஆர்-->ஆர என்பது "நிறைய" என்று பொருள் தரும் சொல். அதே போல அறிவார்ந்த என்பதில் -ஆர்ந்த என்பதும் நிறைந்த என்னும் பொருள் தருவதுதான். --செல்வா 02:22, 18 நவம்பர் 2007 (UTC) --செல்வா 02:23, 18 நவம்பர் 2007 (UTC)
நன்றி, கனக்ஸ். (clerical) writer, clerk, steno, மூன்றுக்கும் வேறுபாடு காட்டும் தனித்தனிச் சொற்கள் தேவை என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டு வானொலிகளில் வேலை வாய்ப்புச் செய்தியில் இவற்றுக்கு நல்ல தமிழ்ச் சொற்களில் அறிவிப்பார்கள். எனக்கு மறந்து போய் விட்டது. steno = சுருக்கெழுத்தாளர்? writer = எழுத்தர், சரி; ஆனால், clerical பணி என்பது எழுதுவது தவிர்த்து தட்டச்சு, கணக்கு சரி பார்த்தல் இன்னும் சில பணிகளையும் உள்ளடக்கலாம் என்று நினைக்கிறேன். தற்போதைக்கு கட்டுரையில் எழுதுவினைஞர் என்றே இருக்கட்டும்.--ரவி 16:26, 18 நவம்பர் 2007 (UTC)