பேச்சு:சூனிய அணி
இதன் தலைப்பை சுழி அணி அல்லது சுழிய அணி என்று தந்து, பிறைக்குறிகளுக்குள் சூன்ய என்று தரலாம் என நினைக்கிறேன். வழிமாற்றும் சூன்ய அணிக்குத் தரலாம். Zero என்பதற்கு நேராக சுழி என்னும் சொல்லை ஆள்வது நல்லது. பூஜ்யம், சூன்யம் என்பனவற்றை விட சுழி என்பது நல்ல தமிழ். பேச்சு வழக்கிலும், கிண்டலாகக் கேட்கும் பொழுது, கணக்கில் என்ன மார்க் (மதிப்பெண்), சுழியா? என்பதும் அறியப்பட்ட ஒன்று. Null என்பதற்கு வெற்று என்னும் சொல்லை ஆளலாம். --செல்வா 22:17, 11 ஜூன் 2007 (UTC)
- Selva, சுழி refers to the symbol of the concept of zero whereas சூன்யம் refers to the concept itself. The zero matrix plays the role of zero in the algebra of matrices. That is why I prefer to call it சூன்ய அணி. ஆனால் அது சூன்யமா அல்லது சூனியமா?
--Profvk 23:42, 11 ஜூன் 2007 (UTC)
நான் எழுதும்பொழுதே நினைத்தேன், உங்கள் மறுமொழி இதுவாகத்தான் இருகும் என்று!! நீங்கள் கூறும் கருத்தை நான் நன்கு உணர்வேன் ஆனால் என் பரிந்துரைக்குக் கரணியம் (காரணம்) சூன்யம் (சூனியம்) என்பது ஒருவகையான மதச்சார்பை குறிக்கும் (இதனால் தவிர்க்க வேண்டுவதில்லை, கூடியமட்டிலும் மாற்று முறை இருந்தால் பின் பற்றலாம் என்பதே நினைப்பு). சுழி என்பதும் வெறும் புற வடிவம் பற்றியதல்ல. இதன் பொருளும் சூனியத்தைப் போன்றதுதான். ஒன்றும் இல்லாமல் இருந்து, பின் தோன்றி எழுந்து பின்னர் எல்லாம் அடங்கும் சுழற்சியைக் குறிக்கும். எனவே இன்மை, இல்லாமை என்பதே அதன் பொருள் (ஆனால் அதனுள் சுழற்சி என்னும் உட்பொருள் உண்டு, எல்லாவற்றிலும் கலந்துள்ளது என்னும் பொருளும் கலந்துள்ளது, இது கணக்கோட்பாட்டு null set ஐ ஒத்தது). எனவே சுழி என்பது ஒரு வகையான மதம் போன்ற உட்கருத்துடையதுதான், எனினும், சூனியம் போன்று வெளிப்படையாக தொடர்புடையதன்று. சூனியம் என்பது தமிழ் முறைக்கு ஒத்ததாக இருக்கு,--செல்வா 12:43, 12 ஜூன் 2007 (UTC)
Start a discussion about சூனிய அணி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve சூனிய அணி.