பேச்சு:செப்பு

செப்பு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.


கேள்வி

தொகு

இதனை செம்பு என்ற பக்கத்திற்கு வழிமாற்றலாமா?--Sivakumar \பேச்சு 17:07, 5 ஏப்ரல் 2007 (UTC)

செம்பு என்று ஒரு பாத்திரமும் அழைக்கப்படுவதால் செப்பு என்பதே பொருத்தமாகப் படுகிறது. --கோபி 17:41, 5 ஏப்ரல் 2007 (UTC)

அது சொம்பு இல்லையா?--ரவி 19:40, 5 ஏப்ரல் 2007 (UTC)

செப்பு, செம்பு இரண்டும் copper தாமிரம் என்பதைக் குறிக்கும். செப்பு என்றால் கூறு (திருத்தமாக நல்ல சொற்களால் கூறுவதற்குச் செப்பு என்று பெயர்) என்றும் பொருள் படும், செம்பு என்றால் செம்பால் ஆன கொள்கலனையும் குறிக்கும். செப்புத்தகடு, செப்புப் பட்டையம் என்னும் சொல்லாட்சிகளில் செப்பு என்பது பயன்படுகின்றது. செம்பை உருக்கி என்று கூறும் பொழுதும் , செம்பால் ஆன ஏனம், பாத்திரம், கொள்கலனைப் பற்றி கூறும்பொழுது செம்பு என்பது பயன் படுகின்றது. பித்தளை, செம்பு என்று சொல்லும் பொழுதும் செம்பு என்பது பரவலாக ஆளப்படும் சொல். எனவே இரண்டு சொற்களும் ஒன்றே - இருவேறு வடிவங்கள் அவ்வளவுதான். --செல்வா 22:12, 5 ஏப்ரல் 2007 (UTC)

எனினும் செம்பு என்பது செம்பொன் என்பதன் திரிபு தானே? எனவே செம்பு கட்டுரைத் தலைப்புக்கு பொருத்தமாக இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.--Sivakumar \பேச்சு 22:17, 5 ஏப்ரல் 2007 (UTC)
ரவி, செம்பு -> சொம்பு (பெட்டி -> பொட்டி; பெண்->பொண்ணு என்பது போல)--செல்வா 22:14, 5 ஏப்ரல் 2007 (UTC)

செம்பு என்பதே சரியான சொல். செப்பு என்பது பெயரெச்சம். இரும்பு + பாதை = இருப்புப்பாதை, கரும்பு + சாறு = கருப்புச்சாறு என்பது போன்றே செம்பு + பட்டயம் = செப்புப் பட்டயம் என்றாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செப்பு&oldid=4049293" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "செப்பு" page.