பேச்சு:செயிண்ட் மார்ட்டின்

ஆங்கிலத்தில் செயின்ற் என்கிறார்கள். எசுப்பானிய மொழியில் சான் என்கிறார்கள். பல்வேறு மொழிகளில் சாந்த என்கிறார்கள். செயின்ற் என்பது பெயரல்ல. அது ஒரு அடைமொழி. தமிழில் செயின்ற் பற்றிக்சு என்பதை புனித பற்றீசியார் என்றும் செயின்ற் தோமசு என்பதை புனித தோமா அல்லது (பரிசுத்த தோமா) என்றும் தமிழ்ப்படுத்துவதே வழமை. பரிசுத்த என்பது தமிழ்ச் சொல்லன்று. எனவே, இத்தகைய இடங்களிலெல்லாம் புனித என்ற அடைமொழியைச் சேர்ப்பதே சாலச் சிறந்தது.--பாஹிம் (பேச்சு) 08:58, 21 திசம்பர் 2015 (UTC)Reply

நீங்கள் சொல்வது நபர்களின் பெயர்களுக்கு பொதுவாக சரியானது. ஆனால் இது ஒரு நகரத்தின் பெயர். அதனை அப்படியே ஒலிப்பெயர்ப்பு செய்வதே சிறந்தது. செயிண்ட் மார்ட்டின் என்றெழுதலாம்.--Kanags \உரையாடுக 09:07, 21 திசம்பர் 2015 (UTC)Reply

நகரத்தின் பெயரானாலும் நாட்டின் பெயரானாலும் எசுப்பானிய மொழி, இத்தாலிய மொழி, பிரான்சிய மொழி, போர்த்துக்கேய மொழி, அறபு மொழி, சிங்கள மொழி போன்றவற்றிலெல்லாம் நான் மேலே சுட்டிக் காட்டிய முறையிலேயே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைப் பின்பற்றி அப்படியே ஒலிபெயர்த்தல்ல.--பாஹிம் (பேச்சு) 10:31, 21 திசம்பர் 2015 (UTC)Reply

நீங்கள் குறிப்பிட்ட எசுப்பானிய மொழி, இத்தாலிய மொழி, பிரான்சிய மொழி, போர்த்துக்கேய மொழிகள் இலத்தீனை அடியாகக் கொண்டவை. எனவே அவை அவ்வாறு அழைப்பதில் ஆச்சரியமில்லை. உருசிய மொழியில் saint (Святой, சிவித்தோய்), ஆனால், St. Martin (Сен-Мартен, சென்-மார்ட்டின்) என எழுதியுள்ளார்கள். இந்தோனேசிய மொழியைப் பாருங்கள் saint (Santo), ஆனால், Saint Martin அப்படியே எழுதியுள்ளார்கள்.--Kanags \உரையாடுக 10:52, 21 திசம்பர் 2015 (UTC)Reply

இங்கு வேறு ஒரு பிரச்சினையும் எழுகிறது. மற்ற மொழிகளைப் போலன்றி இந்த எழுத்துக்குப் பின்னால் இந்த எழுத்து வரக்கூடாது, சொல்லுக்கு முதலில் இந்த எழுத்து வரக்கூடாது என்றெல்லாம் தமிழில் சட்டம் போட்டிருக்கிறார்களே. அந்த வகையில் பார்த்தாலும் செயின்ற் என்றோ செயிண்ட் என்றோ எழுதுவது தகாது. அடுத்தது இங்கு வழங்கும் மொழி ஆங்கிலமா எசுப்பானியமா? நெதர்லாந்து மொழியில் சின்ற் (சிந்து) மார்ட்டின் என்றெழுதியுள்ளனர். அப்படிப் பார்த்தாலும் செயிண்ட் மார்ட்டடின் என்றெழுதுவது சரியல்ல.--பாஹிம் (பேச்சு) 11:59, 21 திசம்பர் 2015 (UTC)Reply

Return to "செயிண்ட் மார்ட்டின்" page.