பேச்சு:சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை


சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு சேர்ந்து தலையாலங்கானத்து செருவென்ற செழியனை எதிர்த்தவன். எனில் இருவரும் ஒருவர் தானே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:22, 20 சூன் 2014 (UTC)Reply

இருவர்

தொகு
  • மாந்தரஞ்சேரல் இரும்பொறை நெடுஞ்செழியனின் சிறையில் இருந்து தப்பித்து வந்தவன்.
  • யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இராசசூய சோழனிடம் தோற்றவன், அத்தோல்விக்கு தேர்வண் மலையன் சோழன் பக்கம் இருந்ததே காரணம் என வருந்தியவன்
  • காலத்தால் நெடுஞ்செழியன் இராசசூய சோழனை விட மூத்தவன்
  • மேலும் மாந்தரஞ்சேரல் இரும்பொறை செல்வக் கடுங்கோ வாழியாதனின் அண்ணன், யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தான் விளங்கில் நகரை வென்றதை பாட கபிலர் இல்லையே என வருந்த குறுங்கோழியூர் கிழார் நான் உள்ளேன் என பாடியுள்ளார். இதுவே பதிற்றுப்பத்தின் பத்தாம் பத்தாக இருக்கலாம். சதீஸ் (பேச்சு) 15:32, 18 சூன் 2018 (UTC)Reply
Return to "சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" page.