பேச்சு:சேவிங் பிறைவேட் றையன் (திரைப்படம்)

சேவிங் பிறைவேட் றையன் (திரைப்படம்) என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

1. பிரைவேற்..? அல்லது பிரைவேட்..? 2. றியான்.. ரியான்.. ரையன்? எது சரி? --மது 06:54, 31 மார்ச் 2007 (UTC)

றியான், றையான், பிறைவேற் - இலங்கை வழக்கு. ரையன், ரியான், பிரைவேட் - தமிழக வழக்கு. எதை முதன்மைப்படுத்தினாலும் இன்னொன்றை பிறைக்குறிக்குள் தர வேண்டும். raiyanஆ, riyanஆ என்பதைத் தான் உறுதி செய்ய வேண்டும்--ரவி 13:34, 31 மார்ச் 2007 (UTC)

Actually, it's Ryan (pronounced like 'Rye+an'). --மது 09:06, 7 ஏப்ரல் 2007 (UTC)

அப்ப, ரையன் (றையன்) சரின்னு நினைக்கிறேன்? இலங்கைப் பயனர்கள் ஒன்றைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். இலங்கையில் radhika, ravi, ranathunga போன்ற பெயர்களையும் றகர எழுத்தில் தொடங்கி தான் எழுதுவீர்களா? இல்லை, சில இடங்களில் றகரமும் சில இடங்களில் ரகரமுமா? இராவணன், இராமன் என்ற ரகரம் முன் இகரம் வருவது போல் இறாமன், இறாவணன் என்று எழுதும் வழக்கம் உண்டா? --ரவி 12:18, 7 ஏப்ரல் 2007 (UTC)

எழுதும் வழக்கில்லை பேச்சு வழக்கில் அவ்வாறு அழைப்பர் என நினைக்கின்றேன். கேட்டும் இருக்கின்றேன். பொதுவாக என்னை என் மாமியார் ராஜாவிற்குப் பதில் எடியே றாசா என அழைப்பார்.--நிரோஜன் சக்திவேல் 19:00, 8 ஏப்ரல் 2007 (UTC)

சேவிங் பிறைவேற் றையன் :-) --கோபி 19:13, 8 ஏப்ரல் 2007 (UTC)

சரி, (றையன்)-ஐ முதன்மைப்படுத்தி விடுகிறேன். Any objections, let me know. But ப்ரைவேற் or பிறைவேற்???
Btw, am curious to know this. When 'test' is written as 'ரெஸ்ற்', both ர and ற seem to have the 'ta' pronunciation. Then, what is actually used to denote the 'ra' pronunciation? Is it like, ர can be pronounced either as 'ta' or 'ra' depending on the word/usage? --மது 08:44, 9 ஏப்ரல் 2007 (UTC)

முதலில் ரவியின் கேள்விக்குப் பதில்: //இலங்கையில் radhika, ravi, ranathunga போன்ற பெயர்களையும் றகர எழுத்தில் தொடங்கி தான் எழுதுவீர்களா?// ராதிகா, ரவி என்பன தமிழ்ச் சொற்கள். இவற்றை மொழிபெயர்க்க வேண்டிய தேவையே எழாது. அப்படியே தான் எழுதுவோம். Ranathunga வை நாம் றணதுங்க என்றே எழுதுவோம். அது சிங்களப் பெயர். அவர்கள் எவ்வாறு உச்சரிக்கிறார்களோ, ஏறத்தாழ அவ்வாறே நாமும் உச்சரித்து அவ்வாறே எழுத முயலுகிறோம். test ஐ ரெஸ்ற் என்று எழுதுவோம். (ரெஸ்ர் என்று தமிழில் எழுத முடியாது என்ற காரணத்தால் என்று நினைக்கிறேன்). சேவிங் பிறைவேட் றையன் என்று எழுதினால் ஈழத்தவர்கள் குழப்பமடைய மாட்டார்கள். அவ்வாறே எழுதலாம். (வேண்டுமானால் சேவிங் பிறைவேற் றையன் ஐ வழிமாற்றம் கொடுக்கலாம்).--Kanags 09:05, 9 ஏப்ரல் 2007 (UTC)

Start a discussion about சேவிங் பிறைவேட் றையன் (திரைப்படம்)

Start a discussion
Return to "சேவிங் பிறைவேட் றையன் (திரைப்படம்)" page.