பேச்சு:சொரேசு ஆல்ஃபியோரொவ்

சுந்தர், Fa, Ba, Ga ஆகிய எழுத்துக்களுக்காவது நான் 'வ 'ப 'க என எழுதலாமா? Alferov என்பதை ஆல்பெரொவ் என்றோ, Bill Gates என்பதை பில் கேட்ஸ் என்றோ எழுதுவதைக்காட்டிலும், ஆல்'வெரோவ், 'பில் 'கேட்ஸ் என்று எழுதுவது நல்ல தில்லையா? இதைப்பற்றிய என் முன்வைப்பை எங்கு நான் இட வேண்டும். எவ்வாறு இது பற்றி முடிவு எடுக்கப்படுகின்றது, சொல்ல இயலுமா?--C.R.Selvakumar 06:19, 16 ஜூன் 2006 (UTC)செல்வா

' குறி பயன்படுத்துவது குறித்த உங்கள் கருத்தை/கட்டுரையை இங்கு இட்டீர்களானால் விவாதித்து கொள்கை முடிவை இறுதி செய்யலாம்.--ரவி 08:15, 16 ஜூன் 2006 (UTC)
நீங்கள் காட்டியிருக்கும் சிக்கல் உண்மைதான். இருப்பினும் இந்த குறியீட்டைப் பயன்படுத்துவதில் பல தொழில்நுட்பச் சிக்கல்களும் சில பயன்பாட்டுச் சிக்கல்களும் உள்ளன. இதைப் பற்றி மேலே ரவி குறிப்பிட்டுள்ள இடத்தில் விவாதிப்போம். -- Sundar \பேச்சு 08:23, 16 ஜூன் 2006 (UTC)

மன்னிக்க வேண்டும். இந்தக் குறியீட்டைப் பாவிப்பதில் எனக்குத் துப்பரவாக உடன்பாடில்லை. குறிப்பாக தலைப்பில் கட்டாயம் தேவையில்லை.

  • தேடுபொறிகளில் அகப்படாது.
  • இந்தக் குறியீட்டை உங்கள் கட்டுரைகளில் மட்டுமே பார்த்துள்ளேன். வேறு இணையத்தளங்களிலும் இல்லை. fuji க்கு 'வூ'சி என்று பாவித்திருக்கிறீர்கள். இதனை எப்படி புதியவர்கள் வாசிப்பது?--Kanags 13:26, 16 ஜூன் 2006 (UTC)
கனகு உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இது பற்றி கலந்து உரையாடி கடைசியில் வேண்டாம் என்றால் விட்டு விடலாம். நான் உண்டாக்கிய குறையை களைந்து விடுவதற்கு நான் முற்றுமாய் உழைப்பேன். நான் ஏதோ அரை வேக்காட்டுத்தனமாகவோ, அரைகுறையாகவோ எண்ணி இதனை முன் வைக்க வில்லை. தமிழின் அறிவார்ந்த ஒலிப்பு முறை குலையாமல் (கெடாமல்) இருக்க, வேற்று மொழி ஒலிப்புகளுக்கு இவ்வாறோ (வேறு வழிகளிலோ) ஒரு வழிமுறை செய்ய வேண்டும். இல்லையென்றால் the brilliant tamil method கெட்டுப் போகும். இதனால விளையும் பயன் இடர்களை சீர்தூக்கிப் பார்த்தால் நல்லது. புதியவர் Fuji யைத் தேடும் பொழுது Fuji என்றே தேடலாம். அல்லது தேடும் இடத்தில் குறிப்பு தரலாம் 'வ = Fa, 'ப = ba etc.

தேடுபொறிகளில் Ohm's law என்பதைத் தேட இயலும் பொழுது, இதனையும் தேட முடியும் என்று நினைக்கிறேன். இது பற்றி இங்கு கருத்தாடலாம்.--C.R.Selvakumar 22:58, 16 ஜூன் 2006 (UTC)செல்வா

தேடுபொறிகளில் மட்டுமல்ல. விக்கிபீடியா செல்/தேடு பெட்டியில் இந்த தலைப்பைத் தந்தால்

இக்கட்டுரை கிடைப்பதில்லை. அதேபோல் கனகு குறிப்பிட்டுள்ளதுபோல் பொதுப்பயன்பாட்டில் இல்லாத ஒன்றை இங்கே அறிமுகப்படுத்துவது நல்லதல்ல. மேலும், வேற்றுமொழிச்் சொற்களை இங்கு எழுத்துப்பெயர்ப்பு செய்யும்போது அதே ஒலிகளை நம்மால் கொணர முடியாது தான். அதில் எந்தத் தவறும் இல்லை. பல மொழிகளில் எழுத்துக்களுக்கும் அவை உணர்த்தும் ஒலிகளுக்கும் ஒரு நிலையான தொடர்புகூட இருப்பதில்லை என்று நாம் அறிவோம். அவ்வாறிருக்க மெனக்கெட்டு நாம் வேற்றுமொழிச் சொற்களை எழுத்துப்பெயர்க்க சிறப்புக் குறியீடுகளை சேர்த்து படிப்பவர்களுக்கும் தேடுபவர்களுக்கும் சிக்கலுண்டாக்க வேண்டாம். -- Sundar \பேச்சு 13:41, 16 ஜூன் 2006 (UTC)

சுந்தர் மேலே கனகுக்குச் சொன்ன பதிலையும் பாருங்கள். மேற்படி இது பற்றி இங்கு கருத்தாடலாம். ஒரே ஒரு குறியைக் கொண்டு 6x12= 72 எழுத்தொலிகளைக் குறிக்கலாம். மேலும் ஹ வரிசையை முற்றிலுமாக விலக்கலாம். F என்பதற்கு 'வ என்பது வேண்ட்டம் எனில்

ஃவ என்றாவது பயன்படுத்தலாம். பழங்காலத்தில் இப்படி நெருக்கமாக பன்னாடுகளில், உடனுக்குடன் கருத்து உறவாட்டம் இருந்ததில்லை. இன்றைய நிலைக்கு F, B,G, போன்ற ஒலியங்களை முதலெழுத்தாகவோ, தமிழ் மரபுடன் முரண்பட்டு வரும் இடங்களிலோ குறிப்பதின் தேவை வலுத்து வருகின்றது. --C.R.Selvakumar 22:58, 16 ஜூன் 2006 (UTC)செல்வா

ரஷ்ய மொழி உச்சரிப்பு தொகு

ஆல்'வெரோவ் என்ற பெயர் தொடர்பாக எனது கருத்து: இவரது பெயர் அவரது தாய் மொழியான ரஷ்ய உச்சரிப்பில் Жоре́с Ива́нович Алфёров என வருகிறது. இதனைத் தமிழில் கூறுவதானால் இப்படிக் கூறலாம். (எனக்கு ரஷ்ய மொழியில் ஓரளவு நல்ல பரிச்சயம் இருப்பதால் கூறுகிறேன்). ஸோரியெஸ் இவானொவிச் அல்ஃபியோரவ் என எழுதுவேன். இழ்சொரெஸ் இவானோவிச் ஆல்'வெரோவ் என நீங்கள் குறிப்பிடுவதற்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. Zhores Ivanovich Alferov என்னும் ஆங்கிலப் பெயரிலிருந்து இருந்து நீங்கள் பெயர்த்திருக்கிறீர்கள். ё, மற்றும் Ж என்பதற்கு சரியான உச்சரிப்பு ஆங்கில எழுத்துகளில் இல்லை. ஆனால் தமிழில் ஓரளவுக்கு எழுதமுடிகிறது.--Kanags 01:10, 17 ஜூன் 2006 (UTC)

நன்றி. Ж என்பதற்கு ழ்ஷ்ஜ என்பது போன்ற எழுத்தொலி என்று நினைவு. நான் உருசிய மொழி பயின்று பல ஆண்டுகள் ஓடிவிட்டன (30 ஆண்டுகளுக்கு முன்). Brezhnev என்பதற்கு பிரெழ்ஷனேவ் என்பது போல பலுக்க வேண்டும் என்பது என் நினைவு. Жо என்பதற்கு ஸோ என்பது சரியென்றால் அப்படியே மாற்றிவிடுங்கள். மூல மொழிக்கு கூடிய மட்டிலும் நெருக்கமாக ஒலிக்க வேண்டும் என்பது தான் என் அவா. அல்ஃவ்யோரவ் என்று எழுதலாமோ?--C.R.Selvakumar 01:36, 17 ஜூன் 2006 (UTC)செல்வா
செல்வா, Ж என்பதற்கு ழ்ஷ்ஜ என்பது தவறு. ஸ என்பதும் அவ்வளவு சரியல்ல. உண்மையில் ரஷ்ய எழுத்துக்களில் மிகவும் கஷ்டமான எழுத்து இது தான். எந்த மொழியிலும் இது சரியாக எழுதப்படுவதில்லை. நான் அங்கு சுமார் 8 வருடங்கள் இருநதிருக்கிறேன். (நீங்களும் அங்கு இருந்திருக்கிறீர்களா?). இதற்கு ஷ என்ற சொல்லை மிக மென்மையாக, அதாவது, ஷ எழுத்தைச் சொல்லும்போது (பலுக்கும் போது) நாம் மிக அழுத்தி காற்றை அதிகம் வெளிவிடுவோம். ஆனால் இங்கு மிக மென்மையாக காற்றை சிறிதளவு வெளிவிடவேண்டும். அவ்வளவுதான். ё என்பது "இயோ" என உச்சரிப்பார்கள். சுருங்கக் கூறின் அதிகம் ஆழமாகப் போகாமல் பின்வருமாறு சொல்லலாம்: ஸ்யோரெஸ் இவானொவிச் அல்ஃபியோரவ்:-).--Kanags 04:16, 17 ஜூன் 2006 (UTC)
நான் முதுநிலை மொறியியல் படிக்கையில், இரண்டாம் மொழியாய் படித்தது. எனக்கு இன்கே உருசிய நண்பர்கள் இருக்கிறார்கள். நீங்கள் கூறும் மெல்லிய ஷ் என்பதைத்தான் நான் ழ்ஷ் என்பதாக குறிப்பிடுகிறேன், மேலும் ஒரு வகையான மெல்லிய ஜ ஒலிவருவதாகவும் உணர்கிறேன். உங்கள் மறு மொழியை படித்த பின் ப்ரெஸ்னேவ் பெயரை விக்கியிலே கேட்டுப் பார்த்தேன் (ஒலிவடிவத்தை கேட்க ogg எல்லாம் இறக்கிய பின்பு!!).
என் காதுகளுக்கு ஒருவகையான மெல்லிய ழ் ஒலி கேட்கின்றது. உங்களுக்கு உருசிய மொழி நல்ல பழக்கம் என்று அறிய மிக மகிழ்ச்சியாக உள்ளது. உங்களைப்போன்றவர்கள் உருசிய மொழியில் இருந்து நிறைய தமிழுக்கு ஆக்கலாம். உருசிய மொழி பற்றியும் எழுதலாம். அறிந்தவர்கள் இப்படிச் செய்வதுதான் பயன் மிகுக்கும்.--C.R.Selvakumar 14:42, 17 ஜூன் 2006 (UTC)செல்வா
Return to "சொரேசு ஆல்ஃபியோரொவ்" page.