பேச்சு:ச. ராஜாபாதர்
கீழே உள்ள உரையாடல் எனது உரையாடல் பக்கத்தில் இருந்து இங்கு மாற்றப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 11:48, 8 சூலை 2015 (UTC)
நன்றி மற்றும் ஒரு ஐயம்
தொகு1. இணையத்தில் மேற்கோள்கள் இல்லையென்பதால், நூற்களை நாட வேண்டியுள்ளது. இது தவறா?
2. மற்றொருவர் எழுதிய வலைப்பதிவை மேற்கோள் காட்டுவதற்குத் தடை உள்ளதா?
நன்றி. பயனர்:Raja Shanmuga Sundaram
- வலைப்பதிவுகளுக்கு அனுமதியில்லை. பார்க்கவும். விக்கிப்பீடியா:வெளியிணைப்புகள்.
மேற்கோளுக்கு நூற்களை நாடலாம். துறை சார்ந்த வல்லுநரின் நூல்களாக இருப்பது முக்கியம். மேற்கோளை எளிதாக்க பார்க்கவும் விக்கிப்பீடியா:புரூவ் இட்.
பேச்சுப்பக்கங்களில் எழுதும் போது கையெழுத்திடவும். பார்க்கவும். விக்கிப்பீடியா:கையொப்பம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:36, 6 சூலை 2015 (UTC)
- அச்சில் வெளிவந்த வல்லுநர்களின் நூல்களை மேற்கோள்களாக சுட்டலாம். வலைப்பதிவுகளுக்கு அனுமதி இல்லை. ராஜாபாதர் கட்டுரையில் நீங்கள் தந்த சில வெளியிணைப்புகளில் அவரைப் பற்றி எங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை. அதனால் அவற்றை நீக்கினேன்.--Kanags \உரையாடுக 21:12, 6 சூலை 2015 (UTC)
ஒருவர் தனது சொந்த வலைத்தளத்துக்கோ வலைப்பதிவுக்கோ தானே இணைப்பு தரக்கூடாது என்பதைத் தான் விக்கிப்பீடியா:வெளியிணைப்புகள் சுட்டுகிறது. இணையத்தில் தமிழில் கிடைக்கும் உசாத்துணை வளங்கள் குறைவு என்பதால், பல கட்டுரைகளில் வலைப்பதிவுகள் மேற்கோள்களாகச் சுட்டப்பட்டே வருகின்றன. இவை, ஓரளவாவது தரமான பதிவுகளாக இருந்தால் போதுமானது. --இரவி (பேச்சு) 05:27, 7 சூலை 2015 (UTC)
உங்களது விளக்கத்துக்கு நன்றி. நான் மேற்கோளாகக் காட்டிய வலைப்பதிவில் ராஜாபாதர் பற்றிய குறிப்பு உள்ளது. திரு. ரவி சுட்டிக்காட்டிய படி, அது மூன்றாம் மனிதரின் வலைப்பதிவு. தரமான பதிவு மற்றும் பொருத்தமான மேற்கோள் என்று நீங்கள் கருதினால், மறுபடியும் சேர்க்கலாம். நன்றி. -- இரா சண்முக சுந்தரம் (பேச்சு) 06:04, 7 சூலை 2015 (UTC)
- Wikipedia articles should be based on reliable, published sources, making sure that all majority and significant minority views that have appeared in those sources are covered. If no reliable sources can be found on a topic, Wikipedia should not have an article on it. --AntanO 07:25, 7 சூலை 2015 (UTC)
அன்டன், விக்கிப்பீடியா:வெளியிணைப்புகள் சுட்டும் வலைப்பதிவுகள் தொடர்பான வழிகாட்டல் நலமுரண் தவிர்ப்பு தொடர்பானது. வலைப்பதிவுகளை மேற்கோளாகத் தரலாமா என்பது தனி உரையாடல். இது வரை பல தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் வலைப்பதிவுகளில் இருந்து மேற்கோள்கள் தரப்பட்டே வந்துள்ளன. அவற்றை அறவே தடுக்கும் கொள்கை ஏதும் இல்லை. ஐந்து தூண்களைத் தவிர, ஒவ்வொரு விக்கிப்பீடியாவும் தங்கள் வளங்களுக்கு ஏற்ப மேலும் அதிக கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் உருவாக்கிக் கொள்ள முடியும். எனவே, நீங்கள் சுட்டும் ஆங்கில விக்கிப்பீடியா வழிகாட்டலை தமிழ் அறிவுச் சூழலைக் கணக்கில் கொண்டே நடைமுறைப்படுத்த முடியும்.--இரவி (பேச்சு) 07:34, 7 சூலை 2015 (UTC)
- நான் குறிப்பிடுவது "Identifying reliable sources" பற்றியது. இது பற்றி த.வி.யில் எதுவும் இல்லை. எனவே வலைப்பதிவுகளில் இருந்து மேற்கோள்கள் குறிப்பிட்டு கட்டுரைகளை தாராளமாக உருவாக்கிவிடலாம். தமிழ் அறிவுச் சூழல் தரமற்றுத்தான் இருக்கும் என்றால் என்ன செய்வது? --AntanO 07:45, 7 சூலை 2015 (UTC)
- அன்டன், //If no reliable sources can be found on a topic, Wikipedia should not have an article on it// என்ற வழிகாட்டலை ஆங்கில விக்கிப்பீடியாவே முற்று முழுதாக நடைவ முறைப்படுத்துகிறதா என்பது ஐயமே. தமிழ் விக்கிப்பீடியாவில் தரமான, நம்பகமான ஆதாரங்களைக் கொண்ட கட்டுரைகளை எழுத வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், உண்மையிலேயே அவ்வாறான ஆதாரங்கள் இருந்தாலும், ஆங்கில விக்கிப்பீடியர்கள் அளவுக்கு அவற்றை நேரடியாக நூலகங்களுக்கும் கள ஆய்வுகளுக்கும் சென்று தேடிச்சேர்க்கும் பங்களிப்பாளர் வளம் நம்மிடம் இல்லை. எனவே, அவ்வாறான ஆதாரங்கள் கிடைக்கும் வரை அத்தலைப்புகளையே தவிர்க்க வேண்டும் என்பது இணையத்தில் தமிழ் வழி தரவுகள் தேடுவோருக்குப் பயனளிக்குமா? கட்டுரைகளை எழுதுவது, உரிய ஆதாரங்களைச் சேர்ப்பது ஆகியவே ஒருங்கே இணையாகச் செய்யப்படக்கூடியதே. அதே போல், வலைப்பதிவாக இருந்தாலேயே தரம் குறைவாகவே இருக்கும் என்றும் எண்ணுவதற்கு இல்லை. இந்த உரையாடலைப் பொருத்தவரை, பல கட்டுரைகளில் வலைப்பதிவு ஆதாரங்கள் இருக்கும் போது, ஒரு பயனரை மட்டும் அவற்றைத் தவிர்க்கச் சொல்வது முறையன்று. வேண்டும் என்றால், இது தொடர்பான முறையான கொள்கை வழிகாட்டலை உருவாக்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 08:05, 7 சூலை 2015 (UTC)
- இரா சண்முக சுந்தரம், [1] என்ற வலைப்பதிவில் ராஜாபாதர் பற்றிய குறிப்பு ஓர் இடத்தில் மட்டும் அதுவும் பெயர்ப்பட்டியல் ஒன்றில் பத்தோடு பதினொன்றாகத் தரப்பட்டுள்ளது. இது கட்டுரைக்கு ஆதாரமாக சேர்ப்பது எந்த விதத்தில் தகும்?--Kanags \உரையாடுக 08:59, 7 சூலை 2015 (UTC)
நீங்கள் சொல்வது உண்மையென்றாலும், வேறு பதிவுகளோ வலையில் ஏற்றம் செய்யப்பட ஆதாரங்களோ இல்லாத நிலையில், இருப்பதைத் தானே காட்ட முடியும்? எடுத்துக்கட்டாக, ராஜாபாதர் மூன்று முறை நகரமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார் என்ற செய்திக்கான ஆதாரங்கள் வலைப்பதிவுகளில் இல்லை. தமிழ்ச் சூழலில், வரலாற்றுப் பதிவுகள் அதிகம் வலையேற்றப் படாத நிலையில், வரலாற்றுப் பதிவுகளைச் செய்யும் எளிய முயற்சிகளுக்கு, வரலாற்றுப் பதிவுகள் இல்லாததே தடையாக உள்ள புதிரை எப்படி அவிழ்ப்பது? -- இரா சண்முக சுந்தரம் (பேச்சு) 08:02, 8 சூலை 2015 (UTC)
- இரா சண்முக சுந்தரம் ஆதாரங்கள் உங்களால் காட்ட முடியாவிட்டால் பரவாயில்லை. ஆதாரம் தேவையான பகுதிகளுக்கு வருங்காலத்தில் யாராவது ஆதாரம் சேர்க்க முடியும். ஆதாரம் இல்லை என்பதற்காகக் கட்டுரை முழுமையாக நீக்கப்பட மாட்டாது.--Kanags \உரையாடுக 11:48, 8 சூலை 2015 (UTC)